யோகதா சத்சங்க கிளை மடம்
ராஞ்சி, ஜார்க்கண்ட்
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஒய்எஸ்எஸ் அதன் நிறுவனர் பரமஹம்ச யோகானந்தரின். ஆன்மீக மற்றும் மனிதநேய பணிகளைச் செய்து வருகிறது. 1917ல் இங்கே ராஞ்சியில் தான் பரமஹம்ஸ யோகானந்தர் தனது வாழ்க்கையின் பணியை ஒரு ஆசிரமம் மற்றும் சிறுவர்களுக்கான ஒரு “எப்படி –வாழ-வேண்டும்” வகை பள்ளி ஆகியவற்றை நிறுவியதன் மற்றும் கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை யாவருக்கும் கிடைக்குமாறு செய்வதன் மூலமாக துவங்கினார்
பசுமையான தோட்டங்கள் மற்றும் அவரது புனித அதிர்வுகளால் பிரகாசிக்கும் இந்த புனித வளாக ஆசிரமத்திற்கு உங்களை வரவேற்கிறோம். ஆசிரமத்தில் YSS சன்னியாசிகள் வழி நடத்தும் தினசரி கூட்டு தியானங்கள், தனிப்பட்ட அல்லது கூட்டு ஏகாந்த வாசம், சாதனா சங்கங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாராந்திர சத்சங்கங்களில் சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆசிரமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள்
பரமஹம்ச யோகானந்தரின் அறை
உயரிய குரு ராஞ்சியில் (1918 முதல் 1920 வரை) தங்கியிருந்த அறை ஒரு கோவிலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது ஆசிரமத்தின் பழைய நிர்வாக கட்டிடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட தியானத்திற்காக அனைவருக்கும் குறிப்பிட்ட மணிநேரங்களில் திறந்து வைக்கப்படுகிறது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் இங்கு தியானம் செய்யும்போது மிகுந்த உத்வேகத்தை உணர்கிறார்கள். பரமஹம்ச யோகானந்தஜி பயன்படுத்திய மரக் கட்டிலைத் தவிர, அந்த அறையில் குருவின் கை மற்றும் கால் பதிவுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, குருவின் தனிப்பட்ட உடைமைகள் சில இந்த அறைக்கு வெளியே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் தெரிய
லிச்சி வேதி
ராஞ்சி ஆசிரமத்தில் பரமஹம்ச யோகானந்தருடன் தொடர்புடைய புனித ஸ்தலங்களில் லிச்சி வேதியும் ஒன்று. இந்த பெரிய லிச்சி மரத்தின் விதான-நிழலின் கீழ் தான் உயரிய குரு அவர் நிறுவிய பள்ளியின் சிறுவர்களுக்கு வெளிப்புற வகுப்புகளையும் சத்சங்கங்களையும் அடிக்கடி நடத்தினார். பரமஹம்சஜீயின் ஆன்மிக அதிர்வுகளால் இந்த இடம் புனிதபட்டிருப்பதால், அதன் கிளைகளுக்கு கீழே பரமஹம்சஜீயின் பெரிய படத்துடன் கூடிய இந்த மரம், பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புனிதப்பயணம் மற்றும் தியானத்திற்கு விருப்பமான இடமாக இருந்து வருகிறது. மேலும் தெரிய
ஸ்மிருதி மந்திர்
1920 இல், ஒரு நாள் தியானம் செய்து கொண்டிருந்தபோது, பரமஹம்சஜீக்கு ஒரு தரிசனம் கிடைத்தது, அதில் அவர் அமெரிக்காவிற்குச் செல்லும்படி தெய்வீக உத்திரவைப் பெற்றார். இந்த உன்னத அனுபவத்தை விவரித்து அவர் தனது புத்தகமான ஒரு யோகியின் சுயசரிதையில் எழுதினார். “அமெரிக்கா! நிச்சயமாக இந்த மக்கள் அமெரிக்கர்கள்தான்! என் உள் மனத் தோற்றத்தில் மேலை நாட்டு முகங்களின் ஒரு பரந்த காட்சி தென்பட்டபோது இந்த எண்ணம்தான் எனக்குத் தோன்றியது. ராஞ்சி பாடசாலையின் சரக்கு அறையில் தூசி படிந்த சில பெட்டிகளின் பின்னால் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். அக்காட்சி தொடர்ந்தது. பெருந்திரளான மக்கள் என்னை கூர்ந்து நோக்கியவாறு, நடிகர் எதிர் கொள்வதைப் போன்று மனமெனும் மேடையில் தோன்றிச் சென்றவாறு இருந்தனர்.”
ஒரு காலத்தில் சரக்கு அறையாக இருந்த மேலே குறிப்பிடப்பட்ட அதே இடத்தில், ஸ்மிருதி மந்திர் உலகளாவிய பணியின் முதல் படியை இங்கு எடுத்ததின் நினைவாக 1995 இல் கட்டப்பட்டது. இந்த மந்திர் நாள் முழுவதும் திறந்திருக்கும், மேலும் இது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களால் தனிப்பட்ட தியானத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் தெரிய
தியான மந்திர்
YSS சன்னியாசிகள் தியான மந்திரில் காலை மற்றும் மாலை கூட்டு தியானங்களை நடத்துகின்றனர். 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்ட, ஜோத்பூர் கல்லால் ஆன இந்த பெரிய மண்டபத்தில் ஒரே நேரத்தில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர முடியும். இந்த மந்திர் கூட்டு தியான நேரங்கள் மற்றும் பகலில் திறந்து வைக்கப்படும் நேரங்கள் இங்கே பகிரப்படுகின்றன. மேலும் தெரிய
தியானத் தோட்டங்கள்
ஆசிரம மைதானத்தில் பலவிதமான தாவரங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த பல அழகிய நிலப்பரப்பு தோட்டங்கள் உள்ளன. நிழலான மாந்தோப்புகள், பலா மரங்களின் பாதைகள், பசுமையான லிச்சி மரங்கள் மற்றும் சுவையுடன் சிதறிய அலங்கார மூங்கில் திட்டுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு ஆன்மீக சோலையை உருவாக்குகின்றன, இது உலக சோர்வுற்ற ஆன்மாக்களை வந்து அமைதி மற்றும் மகிழ்ச்சியின் அமுதத்தில் பங்கேற்க அழைக்கிறது. மேலும் தெரிய
ராஜரிஷி ஜனகானந்தாவுக்கான கடிதத்தில் பரமஹம்ச யோகானந்தர் எழுதியது,
எனது ஆன்மீக சாதனையின் கண்ணுக்குத் தெரியாத அமிர்தத்தை பெரும்பாலும் மவுண்ட் வாஷிங்டனில் [லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவில் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் சர்வதேச தலைமையகம்] மற்றும் ராஞ்சியில் தெளித்தேன்…
உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்
குழு தியானத்தில் கலந்து கொள்ளவோ, அல்லது ஆசிரமத் தோட்டங்களின் அமைதியை அனுபவிக்கவோ, அல்லது யோகானந்தஜியுடன் தொடர்புடைய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவோ உங்களை வரவேற்கிறோம். ஆசிரம மைதானத்தின் தொடர்பு கொண்டு முன்னேற்பாடு செய்து கொள்ளவும்.
தயவுசெய்து கவனிக்கவும்: ஆசிரம மைதானங்கள் அனைத்து பார்வையாளர்களுக்கும் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும்.
YSS மற்றும் SRF பாட மாணவர்கள் ஐந்து நாட்கள் வரை ஆசிரமத்தில் தங்க வரவேற்கப்படுகிறார்கள். தனிப்பட்ட ஏகாந்தவாசத்திலோ அல்லது ஒரு வழிகாட்டப்பட்ட ஏகாந்தவாசத்திலோ உத்வேகமுற்று புத்துணர்ச்சி பெற எங்களுடன் சேருமாறு பக்தர்களை ஊக்குவிக்கிறோம். இந்த ஏகாந்தவசங்களின் போது, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை YSS சன்னியாசிகள் நடத்தும் கூட்டு தியானங்களில் பங்கேற்கலாம், மேலும் யோகதா சத்சங்க போதனைகளின் ஆய்வு மற்றும் பயிற்சியில் ஆன்மீக ஆலோசனையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.
நீங்கள் YSS பாட மாணவராக இல்லாவிட்டாலோ அல்லது ஆசிரமத்தில் தங்குவதற்குப் பதிலாக, அருகிலுள்ள ஹோட்டலில் தங்க விரும்பினாலோ அருகாமையிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் இதோ.
வாராந்திரிய நிகழச்சிகள்
ராஞ்சி ஆசிரமம் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்களை வழங்க பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அமர்வுகளில் அமைதியான தியானம், பக்தி கீர்த்தனைகள் மற்றும் உத்வேகம் தரும் வாசிப்புகள் ஆகியவை அடங்கும்.
- ஞாயிற்றுகிழமை
- காலை 10:30 – மதியம் 12:00
- ஞாயிற்றுக்கிழமை சத்சங்கம் (ஒரு சுருக்கமான தியானம் அடங்கும்)
- மாலை 4:00 – மாலை 7:30
- மாலை தியானம்
- வியாழக்கிழமை
- காலை 7:00 – காலை 8:00
- காலை தியானம்
- மாலை 6:00 – மாலை 9:00
- மாலை தியானம்
- மற்ற நாட்களில்
- காலை 7:00 – காலை 8:00
- காலை தியானம்
- மாலை 6:00 – மாலை 7:30
- மாலை தியானம்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராஞ்சி ஆசிரமத்தில் வாராந்திர குழந்தைகள் சத்சங்கம் நடத்தப்படுகிறது, இதில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் YSS போதனைகளையும், வாழும் முறையையும் சுவாரஸ்ய திட்டங்களான கதை சொல்லல், சுருக்கமான வழிகாட்டப்பட்ட தியானங்கள் மற்றும் பிற ஊடாடும் முறைகள் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் தெரிய
- ஞாயிற்றுகிழமை
- காலை 10:30 – மதியம் 12:00
YSS சாதனா சங்கங்கள்
ஒரு நான்கு-நாள் நிகழ்ச்சி யோகதா சத்சங்க மாணவர்களுக்கு YSS தியான நுட்பங்கள் பற்றிய வகுப்புகளுடன் கூட்டு தியானங்கள், கீர்த்தனை அமர்வுகள் மற்றும் சன்னியாசிகளின் உத்வேகமளிக்கும் உரைகள் பரமஹம்ச யோகானந்தரின் போதனைகளில் தங்களை மூழ்கடிக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்
ஜனவரி-டிசம்பர், 2024 • பல்வேறு நிகழ்ச்சிகள் • ஐந்து இடங்கள்
மேம்படுத்தல் மற்றும் நிரல் அறிவிப்புகளைப் பெற YSS eNews இல் பதிவு செய்யவும்
சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்
மாதாந்திர நீண்ட தியானம்
- அக்டோபர் 27, ஞாயிற்றுக்கிழமை
- காலை 10:00 மணி - மாலை 4:00 மணி
- கூட்டுத் தியானம்
மாதாந்திர நீண்ட தியானம்
- நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
- காலை 10:00 மணி - மாலை 4:00 மணி
- கூட்டுத் தியானம்
கிறிஸ்துமஸ் 8 மணி நேர தியானம்
- டிசம்பர் 21, சனிக்கிழமை
- காலை 10:00 மணி - மாலை 6:00 மணி
- கூட்டுத் தியானம்