பிரயாக்ராஜ் (அலகாபாத்) இல் கும்பமேளா — 2025

நிகழ்வு பற்றி

கும்ப மேளாக்கள் என்பவை காலங்காலமாக பாரதத்தில் நடைபெற்று வரும் சமயத் திருவிழாக்களாகும். அவை ஆன்மீகக் குறிக்கோள்களை மக்களின் பார்வையில் தொடர்ந்து வைத்திருக்கின்றன.

பரமஹம்ஸ யோகானந்தர்

நமது அன்பிற்குரிய குருதேவரின் இந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) கும்பமேளாக்களின் போது முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) இல் நடைபெறவுள்ள கும்பாவில் YSS முகாமை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த முகாமில் கலந்து கொள்ள YSS/SRF பக்தர்களை வரவேற்கிறோம்.

இந்த முகாம் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 15, 2025 வரை கும்பமேளா மைதானத்தில் செயல்படும். பௌஷ் பூர்ணிமா (ஜனவரி 13, திங்கள்), மகர சங்கராந்தி (ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை), மவுனி அமாவாசை (ஜனவரி 29, புதன்கிழமை), வசந்த் பஞ்சமி (பிப்ரவரி 3, திங்கள்கிழமை) மற்றும் மகா பௌர்ணமி (பிப்ரவரி 12, புதன்கிழமை) ஆகிய குளியல் நாட்களை உள்ளடக்கியது.

கும்பமேளாவில் முகாம் காலம் முழுவதும், கலந்து கொள்ளும் பக்தர்களை ஆன்மீகரீதியாக வளப்படுத்த YSS சன்னியாசிகளால் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். காலை மற்றும் மாலை கூட்டு தியானங்கள், கீர்த்தனைகள், (பக்திபூர்வமாக கீதம்பாடுதல்) மற்றும் சத்சங்கங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

நிகழ்ச்சி விபரங்கள்

பதிவு

பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு ₹ 2000.

முகாம் வசதிகள் முதன்மையாக YSS பக்தர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், வயதான பெற்றோரும் உறவினர்களும் கூட யாத்திரையில் இணைய விரும்பலாம் என்பதை நாம் அறிவோம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள்/உறவினர்கள் வருகை தரும் குழுவில் இணைய விரும்பினால் அவர்களும் கலந்துகொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

பதிவு இப்போது தொடங்கப்பட்டுவிட்டது!

பக்தர்கள் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு:

விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய, கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யங்கள்.

YSS உதவி மையத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிவு:

ராஞ்சி ஆசிரம உதவி மையத்தை இந்த எண்ணில் (0651) 6655 506 தொடர்பு கொண்டோ அல்லது மின்னஞ்சல் செய்தோ பின்வரும் விவரங்களை வழங்கவும்:

  • உங்கள் முழுப் பெயர்
  • வயது
  • பாலினம்
  • முகவரி
  • மின்னஞ்சல்
  • தொலைபேசி எண்
  • YSS பாடப் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • உங்கள் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களின் (எவரேனும் இருந்தால்) முழுப் பெயர், வயது பாலினம், மற்றும் உங்களுடனான அவர்களின் உறவு
  • நீங்கள் திட்டமிட்டுள்ள வருகை மற்றும் புறப்படும் தேதிகள் (உங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த இரண்டு விருப்பத் தேதிகள் தெரிவிக்கவும்)

உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பு மூலமாக தொகையை அனுப்பலாம். உங்கள் முதல் விருப்பத் தேதிகளில் அதிக நெரிசல் இருந்தால் மாற்று தேதிகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். இயன்றவரை உங்கள் முதல் விருப்பத் தேதியையே தேர்வு செய்ய முயற்சிப்போம். மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலம் உங்கள் தங்கும் இடத்தை உறுதி செய்வோம். அதை நீங்கள் கும்பமேளா முகாமிற்கு உங்களுடன் கொண்டு வர வேண்டும்.

SRF பக்தர்களுக்கான பதிவு:

SRF பக்தர்கள் பதிவு செய்து, முகாமில் YSS ஏற்பாடு செய்துள்ள ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்; மேலும் உணவுகளிலும் பங்கு கொள்ளலாம். முகாமில் உள்ள சிக்கனமான இருப்பிற்கான ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, அவர்கள் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கும்படி பரிந்துரைக்கிறோம்; இருப்பினும், அவர்கள் YSS முகாமில் தங்க விரும்பினால், நாங்கள் அவர்களுக்கு இடம் அளிப்போம்.

பதிவு செய்ய, தயவு செய்து YSS உதவி மையத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ளபடி அனைத்து விவரங்களையும் வழங்கவும். அதிக நெரிசல் இருந்தால், மாற்றுத் தேதிகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். தயவுசெய்து உங்கள் பயணத் திட்டத்தின் இரண்டு வெவ்வேறு விருப்பத் தேதிகளைத் தெரிவியுங்கள்.

para-ornament

முக்கிய குறிப்பு:

  • முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்: குறைந்த தங்குமிட வசதிகளே இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்குமிடம் தேவைப்படும் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும்.
  • முகாமில் வசதிகள் குறைவாக இருப்பதால், YSS -ஆல் தங்குமிடம் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே முகாமில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய உறுதிப்படுத்தல் இல்லாத நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
  • உங்கள் பதிவு உறுதிப்படுத்தப்பட்டு உங்களால் கலந்து கொள்ள முடியாவிட்டால், பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படாது அல்லது வேறொரு நபருக்கு மாற்றப்படாது.
தங்குமிடம் மற்றும் உணவு

தங்கள் குளியல் மற்றும் பிற அனுசரிப்புகளை நிறைவேற்றும் போது, இருக்கும் குறைந்தபட்ச வசதிகளை, அதிகபட்ச எண்ணிக்கையிலான பக்தர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, YSS முகாமில் தங்கும் அனுமதி, வருகை மற்றும் புறப்படும் நாட்கள் உட்பட நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

முகாமில் தங்குமிடம் மணலில் அமைக்கப்பட்ட கூடாரங்களினாலும், தரைகள் வைக்கோலால் மூடப்பட்டு அதன் மேல் தார்பால் விரிக்கப்பட்டும் இருக்கும்.

  • படுக்கைகள், தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படும், ஆனால் தயவு செய்து உங்கள் சொந்த படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஸ்லீப்பிங் பேக்ஸ் கொண்டு வாருங்கள்
  • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவநிலை மிகவும் குளிராக இருக்கும் என்பதால், க்வில்ட், ஸ்லீப்பிங் பேக், ஸ்வெட்டர், தொப்பி மற்றும் சாக்ஸ் போன்ற முழு குளிர்கால ஆடைகளை கொண்டு வர உறுதிபடுத்திக்கொள்ளவும். இந்த மாதங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதால், நீங்கள் ஒரு ரெயின்கோட் அல்லது குடை, கொசு விரட்டும் கிரீம், டார்ச், ஆசனம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பிற பொருட்களையும் எடுத்து வரலாம்.

 

உணவுக்கு தனி கட்டணம் இல்லை.

தயவுசெய்து கவனிக்கவும்: ஆண்களும் பெண்களும் தனித்தனி கூடாரங்களில் தங்க வைக்கப்படுவார்கள், எனவே குடும்பங்கள் அதற்கேற்ப பேக் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

para-ornament

கும்பமேளாவில் YSS முகாம் இடத்தின் முகவரி

பங்கேற்கும் அமைப்புகளுக்கு மேளா அதிகாரிகள் இன்னும் இடங்கள் ஒதுக்கவில்லை. அமைவிட விவரங்கள் மற்றும் பாதை வரைபடங்கள் கிடைத்தவுடன் அவற்றை வெளியிடுவோம்.

பதிவு செய்த அனைவருக்கும் அமைவிடத்தின் முகவரி மற்றும் பாதை வரைபடம் மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

பேஸ்கேம்ப் முகவரி

யோகதா சத்சங்க தியான கேந்திரா, பிரயாக்ராஜ்,
468/270, நய் பாஸ்தி சோபாட்டியா பாக்,
பிரயாக்ராஜ் (அலகாபாத்),
உத்தரபிரதேசம் – 211006

தொலைபேசி: 9454066330, 9415369314, 9936691302

மின்னஞ்சல்: prayagraj@ysscenters.org

பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்

யோகதா சத்சங்க கிளை மடம் – ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி 834001
ஜார்கண்ட்

தொலைபேசி: (0651) 6655 506
(திங்கள்-சனி, காலை 09:30 – மாலை 04:30)

மின்னஞ்சல்: kumbha@yssi.org

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர