யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை

… இது பக்தர்கள் தங்களை அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளவும், புத்துணர்ச்சி பெறவும் செல்லக் கூடிய ஒரு ஆன்மீக அமைதிச் சோலையாக விளங்கட்டும்.

— ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

2010 ஆம் ஆண்டில் சென்னை ஏகாந்த வாச மையத்தை அர்ப்பணித்தபோது முன்னாள் சங்கமாதா மற்றும் YSS/SRF இன் மூன்றாவது தலைவரான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் இந்த தெய்வீக அருளாசி வார்த்தைகள், சென்னையில் உள்ள யோகதா சத்சங்க சாகா ஆசிரமத்தின் பரிணாமம் உள்ளடக்கியதாக இருக்கிறது.

இறைவனுக்கும், குருவுக்கும் அயராது சேவை செய்யும் மனப்பான்மையின் இனிமையான சான்றாக இந்த ஆசிரமம் அமைந்துள்ளது. வனாந்தரத்தில் தியானம் செய்யும் ஒரு சிறிய குடிசையாகத் தொடங்கிய இந்த இடம், நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு மத்தியில் புத்துணர்ச்சியைத் தேடும் பக்தர்களுக்கான ஆன்மீக சோலையாக படிப்படியாக வளர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள மன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் 1973 ஆம் ஆண்டில் YSS இன் நீண்டகால பக்தரான ஸ்ரீ கெய்டோண்டேவால் ஒரு நிலமாக வாங்கப்பட்டது, இறுதியில் 1998 இல் YSS க்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. 2006 டிசம்பர் 31 அன்று, ஸ்வாமி சந்தானந்தா பிரதான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஸ்வாமி சுத்தானந்தா ஜூலை 25, 2010 அன்று ஆசிரமத்தைத் திறந்து வைத்தார், மேலும் 1,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட முதல் சன்னியாசிகள் வழிநடத்தும்   நிகழ்ச்சியை நடத்தினார்.

சென்னை யோகதா சத்சங்க சாகா ஆசிரமம் பக்தர்கள் தங்கள் பயிற்சியை புதுப்பிக்கவும், பரமஹம்ஸ யோகானந்தரின் ராஜ யோக போதனைகளைக ஆய்வு செய்யவும், உணர்ந்தறியவும் உதவும் புனித இடங்களால்   நிரம்பியுள்ளது. ஞாயிறு சத்சங்கம் மற்றும் தினசரி தியானங்களில் பங்கேற்பதைத் தவிர, பக்தர்கள் ஆசிரம சன்னியாசிகளிடமிருந்து பரமஹம்ஸ யோகானந்தர் வழங்கிய தியான உத்திகள் தொடர்பான ஆன்மீக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலைப் பெற வரவேற்கப்படுகிறார்கள்.

YSS சென்னை ரிட்ரீட் YSS ஆசிரமமாக மேம்படுத்தப்படுகிறது

இன்று, செப்டம்பர் 15, 2024 அன்று, சாதனா சங்கத்தின் நிறைவு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சத்சங்கத்தின் போது, யோகதா சத்சங்கா சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் ன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி, YSS சென்னை ரிட்ரீட் YSS ஆசிரமமாக அறிவிக்கப்படும் என்றும், வரும் ஆண்டுகளில் முழுமையான ஆசிரமமாக உருவாக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Play Video

YSS/SRF தலைவரும் ஆன்மீகத் முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, YSS சென்னை ரிட்ரீட்டை YSS ஆசிரமமாக மேம்படுத்துவதாக அறிவிக்கிறார்.

para-ornament
YSS -க்குப் புதியவரா? YSS பாடங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் அதில் சமநிலையைக் கொண்டுவரும் என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

தியான மந்திர் மற்றும் தியான செய்யும் இடங்கள்

தியான மந்திர்

ஆசிரம வளாகத்தில் ஒரு சிறப்புமிக்க அமைப்பான தியான மந்திரில் YSS குரு பரம்பரை குருமார்கள் பீடம் உள்ளது. சுமார் 65 பேர் அமரக்கூடிய இந்த அரங்கம் தினசரி காலை மற்றும் மாலை மற்றும் சிறப்பு நினைவு தியானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இது சாதனா சங்கத்திற்கான பல்வேறு செயல்பாடுகள், வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள் மற்றும் குழந்தைகள் முகாம் மற்றும் ரிட்ரீட் நிகழ்ச்சிகளின் மையமாகவும் உள்ளது.

தியான செய்யும் இடங்கள்

சென்னை ஆசிரமத்தின் முதல் கட்டிடமாக தியானக் குடில் இருந்தது. அமைதியான மன்னூர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள இந்த தாழ்மையான குடில், தியான சாதனா மேற்கொள்ளும் YSS சன்னியாசிகளின் இருப்பால் அருளப்பட்டுள்ளது மற்றும் தியானத்திற்கான புனிதமான இடமாக உருவெடுத்துள்ளது.

இயற்கையோடு இணைந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட பக்தர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு தோட்டத்தில் அமைத்துள்ள பீடம், ஒரு குடில், ஒரு தாமரை குளம், மற்றும் ஏரியை நோக்கியவாறு உள்ள ஒரு தியான கோபுரம் ஆகியவை அடங்கும்.

ஆசிரம மைதானத்தில் பல்வேறு வகையான தென்னை மற்றும் மா மரங்கள், பலவித மலர்கள் மற்றும் காய்கறி தோட்டம் உள்ளது. பல இடங்களில் வசதியான இருக்கைகள் அமைந்திருப்பதால்,, இந்த அமைப்பு பக்தர்களை இயற்கையில் தெய்வீகத்துடன் தொடர்புகொள்ளவும், உடல், மனம் மற்றும் ஆன்மாவில் தளர்த்தி இருக்கவும் உதவுகிறது.

ஆசிரமத்தில் தற்காலிக மேம்பாடுகள்

யோகதா சத்சங்க சொசைடி இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி, YSS பக்தர்களுக்கு தினசரி தியானங்கள், ஆன்மீக ஆலோசனை, சத்சங்கங்கள், சாதனா சங்கங்கள், ரிட்ரீட் நிகழ்ச்சிகள் மற்றும் நினைவு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, பிப்ரவரி 7, 2024 அன்று சென்னை ரிட்ரீட்டில் YSS சன்னியாசிகளின் நிரந்தர இருப்புக்கு ஒப்புதல் அளித்திருந்தார். அப்போதிருந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது, மேலும் அதிகமான பக்தர்கள் ஆன்மீக புத்துணர்ச்சியையும் வழிகாட்டுதலையும் நாடுவதால் இந்த தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள வசதிகள் —ஆரம்பத்தில் ஒரு ரிட்ரீட் நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டவை— இப்போது இந்த அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. தங்குமிடம், சமையலறை, உணவுப் பகுதிகள், நிர்வாகம் மற்றும் பிற துணை வசதிகளுக்கு ஆசிரமத்தின் விரிவடையும் பங்காற்றலை ஆதரிக்க குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் தேவை.

உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்

பகல் நேரத்தில் ஆசிரமத்திற்கு செல்ல விரும்புகிறீர்களா?

ஒரு கூட்டு தியானத்தில் கலந்து கொள்ள அல்லது ஆசிரம தோட்டங்களின் அமைதியை அனுபவிக்க உங்களை வரவேற்கிறோம். ஆசிரமத்திற்கு வருகை தர விரும்பினால், தயவுசெய்து வரவேற்பு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள்

குறிப்பு: ஆசிரம வளாகம் ஒவ்வொரு நாளும் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை அனைத்து பார்வையாளர்களுக்கும் திறந்திருக்கும்.

தனிப்பட்ட ரிட்ரீட்க்கு திட்டமிடுங்கள் அல்லது ஆசிரமத்தில் நடத்தப்படும் ரிட்ரீட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

YSS மற்றும் SRF பாட மாணவர்கள் ஐந்து நாட்கள் வரை ஆசிரமத்தில் தங்கலாம். நீங்கள் புதுப்பித்துக் கொள்ளவும் புத்துணர்ச்சி பெறவும் தனிப்பட்ட ரிட்ரீட் அல்லது ஆசிரமத்தில் நடத்தப்படும் ரிட்ரீட் நிகழ்ச்சிகள் ஒன்றில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறோம். இந்த ரிட்ரீட் நிகழ்ச்சிகளின் போது, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை YSS சன்னியாசிகளால் நடத்தப்படும் கூட்டுத் தியானங்களில் பங்கேற்கலாம், மேலும் யோகதா சத்சங்க போதனைகளைப் படிப்பதிலும் பயிற்சி செய்வதிலும் ஆன்மீக ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெறலாம்.

வாராந்திர நிகழ்ச்சிகள்

கூட்டுத் தியானங்கள்

இந்த ஆசிரமம் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்களை வழங்குகிறது, அவை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். இந்த நிழ்ச்சிகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக கீதம் பாடுதல் மற்றும் உத்வேகமளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்

குழந்தைகள் சத்சங்கம்

குழந்தைகள் சத்சங்கம் ஒரு மாற்று ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுகிறது, இதில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் YSS போதனைகள் மற்றும் வாழ்க்கை முறைப் பற்றி கதைசொல்லல், சுருக்கமான வழிகாட்டப்பட்ட தியானங்கள் மற்றும் கலந்துரையாடல் மூலம் கற்றல் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் அறிய

YSS சாதனா சங்கங்கள்

YSS-Sadhana-Sangam-Chennai-Ashram-2024-Group-Photo-Sannyasis-and-devotees

யோகதா சத்சங்க போதனைகளின் மாணவர்களுக்கு YSS தியான உத்திகள், கூட்டுத் தியானங்கள், கீர்த்தனை அமர்வுகள் மற்றும் சன்னியாசிகளின் எழுச்சியூட்டும் உரைகள் ஆகிய வகுப்புகளுடன் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் மூழ்குவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் நான்கு நாள் திட்டம்.

ஜனவரி-டிசம்பர், 2024பற்பல நிகழ்ச்சிகள்ஐந்து இடங்கள்

YSS eNews க்கு பதிவுசெய்து புதுப்பிப்புகள் மற்றும் நிகழ்ச்சி அறிவிப்புகளைப் பெறுங்கள்

வரவிருக்கும் சிறப்பு நிகழ்வுகள் & நீண்ட தியானங்கள்

மாதாந்திர நீண்ட தியானம்

மாதாந்திர நீண்ட தியானம்

கிறிஸ்துமஸ் 8 மணி நேர தியானம்

செய்திகள் & புகைப்படங்கள்

எங்களை தொடர்பு கொள்ள

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை
Mannur Village, P. O. Vallarpuram
Sriperumbudur - 602105
Kanchipuram
Tamil Nadu

இதைப் பகிர