சாதனா சங்கங்கள் 2024

(ராஞ்சி, நொய்டா, தக்‌ஷினேஸ்வர் இகத்புரி மற்றும் சென்னை)

அனைத்து நிகழ்வுகளுக்கான பதிவு இப்போது தொடங்கப்பட்டுள்ளது !

நிகழ்ச்சி பற்றி

தினம் தினம் தியானம் செய்யக் கற்றுக் கொள்ளும்போது, ஒரு புதிய விழிப்பு வரும்; இறைவனுடன் ஒரு புதிய, உயிருள்ள உறவு உங்களுக்குள் கிளர்ந்தெழும்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும் சாதனா சங்கங்களில் எங்களுடன் சேர அனைத்து YSS/SRF பக்தர்களையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த சங்கங்கள் அனைத்தும் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் அல்லது YSS ராஞ்சி ஆசிரமம்; YSS நொய்டா ஆசிரமம்; YSS தட்சிணேஸ்வர் ஆசிரமம்; பரமஹம்ச யோகானந்த சாதனாலயா, இகத்புரி; மற்றும் யோகதா சத்சங்க சென்னை ஏகாந்தவாசம் போன்ற இடங்களிலும் நடைபெறும். ஒரு பக்தர் தனக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் எந்த சங்கத்திலும் கலந்து கொள்ளலாம். ஆனால், தங்குமிடம் குறைவாக இருப்பதால், இந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்க முடிவதற்காக இந்த சங்கங்களில் பங்கேற்பதை ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு சாதனா சங்கமாக கட்டுப்படுத்துகிறோம்.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட வருடாந்திர சரத் சங்கங்களைப் போலவே, இந்த நிகழ்ச்சிகளும் YSS பக்தர்களுக்கு ஆன்மீக ரீதியாக தங்களை புதுப்பித்துக் கொள்ளவும், குருதேவரின் போதனைகளைப் பற்றி ஆழமான புரிதலைப் பெறவும், தியான உத்திகளின் பயிற்சியை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. வித்தியாசம் என்னவென்றால், சாதனா சங்கங்களில், பக்தர்கள் இதையெல்லாம் மிகவும் நெருக்கமான மற்றும் வசதியான முறையில் செய்ய முடியும். கிடைக்கும் வசதிகளைப் பொறுத்து ஒவ்வொரு இடத்திலும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு பக்தரும் நீண்ட வரிசைகள், நெரிசல் மற்றும் போதுமான இடவசதி போன்ற ஷரத் சங்கங்களின் போது அனுபவிக்கும் அசௌகரியங்கள் இல்லாமல் மிகவும் தனிப்பட்ட மற்றும் ஆழமான ஆன்மீக பயணத்தை அனுபவிக்க முடியும். மொத்தத்தில், சாதனா சங்கத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்க முடியாத ஆன்மீக அனுபவமாக இருக்கும் என்று உறுதியளிக்கின்றன.

YSS மற்றும் SRF பக்தர்களுக்கான பதிவு செயல்முறை இப்போது திறக்கப்பட்டுள்ளது மற்றும் முதலில் வருபவர்களுக்கு, முதல் சேவை அடிப்படையில் உள்ளது. இந்த தனித்துவமான வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் ஆன்மீக ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதோடு மட்டுமல்லாமல், மற்ற ஆர்வமுள்ள சாதகர்களுடன் தியானம் செய்வதன் மூலமும் சகஜமாக இருப்பதிலிருந்தும் கிடைக்கும் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் அனுபவிக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

தயவு செய்து கவனிக்கவும்:

  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே சங்கத்தில் கலந்து கொள்ளலாம்.
  • 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
  • SRF பக்தர்கள் இந்த சங்கங்களில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள் என்றாலும், அவர்கள் அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கள் சொந்த தங்குமிடத்தை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.
  • நிகழ்ச்சி நிரல் தீவிரமாக இருக்கும் என்பதால், பலவீனமான ஆரோக்கியம் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள பக்தர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ராஞ்சி ஆஸ்ரமம் பிரதான கட்டிடம்
ராஞ்சி
நொய்டா
தக்‌ஷினேஷ்வர்
இகத்புரி
YSS-சென்னை-ஏகாந்தவாசம்-பிரதான-கட்டிடம்
சென்னை சாதனாலயம்

சாதனா சங்க காலண்டர்

சாதனா சங்கங்கள் 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை நடத்தப்படும். கீழே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உத்தி வகுப்புகளின் மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன; இருப்பினும், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆங்கிலம், இந்தி, வங்காள அல்லது தமிழ் மொழியில் இருக்கலாம். கீழே உள்ள காலெண்டரைப் பார்க்கவும்.

உத்தி வகுப்புகளின் மொழி


ராஞ்சி

நொய்டா

தக்க்ஷிணேஸ்வர்

இகத்புரி

சென்னை சாதனாலயம்

ஜனவரி 25-28

இந்தி

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

பிப்ரவரி 15-18

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

தமிழ்

மார்ச் 14-17

இந்தி

(கிரியா யோக தீட்சை)

இந்தி

பெங்காலி

ஆங்கிலம்/இந்தி

ஆங்கிலம்

ஏப்ரல் 4-7

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

தமிழ்***

(கிரியா யோக தீட்சை)

செப்டம்பர் 12-15

ஆங்கிலம்

சங்கம் இல்லை

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

சங்கம் இல்லை

ஆங்கிலம்

அக்டோபர் 17-20

இந்தி

இந்தி

(கிரியா யோக தீட்சை)

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

தமிழ்

நவம்பர் 14-17

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

ஆங்கிலம்

இந்தி

சங்கம் இல்லை

பின்னர் பார்க்கவும்

டிசம்பர் 5-8

இந்தி

(கிரியா யோக தீட்சை)

சங்கம் இல்லை

சங்கம் இல்லை

ஆங்கிலம்/இந்தி

பின்னர் பார்க்கவும்

* * * குறிப்பு:

  • இந்த நிகழ்வு கீழகண்ட பக்தர்களுக்கு மட்டுமே ஆனது:
    • கிரியாபன்கள் மற்றும் இன்னும் முறையான கிரியா யோக தீட்சை பெறாதவர்கள்
    • கிரியா யோக தீட்சை எடுக்க தகுதியும் ஆர்வமும் உள்ள பாட மாணவர்கள்
அட்டவணை

உத்தேச நிகழ்ச்சி அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வியாழக்கிழமை

காலை 07:00 மணி முதல் 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை

துவக்க சத்சங்கம்

காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

ஹாங்-ஸா உத்தி பற்றிய மறுஆய்வு

மதியம் 12:30 மணி முதல் 01:30 மணி வரை

ஆலோசனைகள்

மதியம் 02:00 மணி முதல் 03:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் பற்றிய மறு ஆய்வு

மாலை 05:30 மணி முதல் 09:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

வெள்ளிக்கிழமை

காலை 07:00 மணி முதல் 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை

ஓம் உத்தி மறு ஆய்வு

காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

ஆன்மிக சொற்பொழிவு

மதியம் 12:30 மணி முதல் 02:30 மணி வரை

ஆலோசனைகள்

பிற்பகல் 03:00 மணி முதல் 04:00 மணி வரை

ஆன்மிக சொற்பொழிவு

மாலை 05:30 மணி முதல் இரவு 08:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் கீதங்களுடன் தியானம்

சனிக்கிழமை

காலை 07:00 மணி முதல் 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

கிரியாபன் அல்லாதவர்களுக்கான சத்சங்கம் மற்றும் கிரியா யோகா மறு ஆய்வு மற்றும் சரிபார்ப்பு.

மதியம் 12:30 மணி முதல் 02:30 மணி வரை

ஆலோசனைகள்

பிற்பகல் 03:00 மணி முதல் 04:00 மணி வரை

ஆன்மிக சொற்பொழிவு

மாலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இரவு 08:00 மணி முதல் 09:00 மணி வரை

காணொளி காட்சி

குறிப்பு: கிரியா யோக தீட்சை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு, சனிக்கிழமை அட்டவணையில் பின்வரும் மாற்றத்தைக் கவனியுங்கள்:

காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை

கிரியா யோக தீட்சை

காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை

கிரியாபன் அல்லாதவர்களுக்கான சத்சங்கம்

மதியம் 02:00 மணி முதல் 03:30 மணி வரை

கிரியா யோகா மறு ஆய்வு மற்றும் பரிசோதனை

மாலை 05:30 மணி முதல் 07:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இரவு 08:00 மணி முதல் 09:00 மணி வரை

காணொளி காட்சி

ஞாயிற்றுக்கிழமை

(ஒவ்வொரு இடத்திலும் நேரங்கள் மாறுபடலாம்)

காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை

நிறைவு சத்சங்கம் மற்றும் பிரசாதம்

மாலை 04:00 மணி முதல் 07:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

தியான உத்தி வகுப்புகள் மற்றும் சொற்பொழிவுகள்:

  • YSS தியான உத்திகள் – சக்தியூட்டும் உடற் பயிற்சிகள், ஹாங்-ஸா உத்தி மற்றும் ஓம் உத்தி – விளக்கப்பட்டு, காண்பிக்கப்படும். மேலே பகிரப்பட்ட சாதனா சங்க காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த வகுப்புகள் வெவ்வேறு மொழிகளில் நடத்தப்படும்.
  • குருதேவரின் எப்படி-வாழ-வேண்டும் குறித்த சொற்பொழிவுகளும் அட்டவணையின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த சொற்பொழிவுகள் ஆங்கிலம், இந்தி, வங்காள மொழி அல்லது தமிழில் நடத்தப்படலாம்.
  • ஒரு சத்சங்கம் அனைத்து இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
பதிவு

நிகழ்ச்சி நிரல்:

  • ஒவ்வொரு இடத்திலும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் முடிவடையும்.
  • அனைத்து பக்தர்களுக்கும் கூடுதலாக நான்கு நாட்கள் தங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் – அவர்கள் நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு (செவ்வாய்க்கிழமை காலைக்குள்) வரலாம், மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் கூடுதலாக இரண்டு நாட்கள் (அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு வரை) தங்கலாம்.
  • குருதேவரின் ஆசிரமம் / ஏகாந்தவாச மையத்தில் தொடர்ந்து எட்டு நாட்கள் செலவிடும்போது, பக்தர்கள் ஓய்வு, இளைப்பாறுதல், மற்றும் ஆன்மீக புத்துணர்ச்சிக்கு போதுமான நேரத்தைப் பெறுவார்கள். அதற்கேற்ப உங்கள் வருகை மற்றும் புறப்பாட்டை திட்டமிடலாம்.

தங்குமிடம்:

  • பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியாக பகிரப்பட்ட-பாணியிலான தங்குமிடம் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையானவை கொண்டு வரலாம் செய்யலாம்.
  • தங்குமிடம் அல்லது உணவுக்கான சிறப்புத் தேவைகள் உள்ள பக்தர்கள் தயவு செய்து தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவும். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் வருபவர்களுக்கு, முதல் சேவை அடிப்படை:

  • ஐந்து இடங்களிலும் குறைந்த தங்குமிட வசதிகளே இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை அடிப்படையில் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும்.
  • உங்கள் பதிவு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்களால் கலந்து கொள்ள முடியாவிட்டால், பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படாது மற்றும் மற்றொரு நபருக்கு மாற்றப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.

பணம் அனுப்புதல்: பதிவுக் கட்டணம் ஒரு நபருக்கு ₹ 2000. இந்த கட்டணம் உணவுக் கட்டணத்தையும் உள்ளடக்கியது. பதிவுக் கட்டணத்தை செலுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், தயவு செய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

பதிவுத் தகவல்

அனைத்து நிகழ்வுகளுக்கான பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது!

பதிவு செயல்முறை பற்றிய விரிவான தகவல்கள் பின்வருமாறு:

பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைன் பதிவு:

விரைவான மற்றும் எளிதான பதிவுக்கு, ஆன்லைனில் devotees.staging2.yssofindia.org-ல் பதிவு செய்யவும்.

ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்புகொள்வதன் மூலம் பதிவு:

தயவு செய்து தொலைபெசி (0651 6655 555) அல்லது மின்னஞ்சல் மூலம் ராஞ்சி ஆசிரம ஹெல்ப் டெஸ்க்கை தொடர்புகொண்டு பின்வரும் விவரங்களை வழங்கவும்:

  • உங்கள் முழுப் பெயர்
  • வயது
  • முகவரி
  • மின்னஞ்சல், மற்றும் தொலைபேசி எண்
  • YSS பாடங்கள் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • உங்கள் முன்மொழியப்பட்ட வருகை மற்றும் புறப்பாடு தேதிகள்.

உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பிற்கான தொகையை நீங்கள் செலுத்தலாம்.

SRF பக்தர்களுக்கான பதிவு:

  • ஆர்வமுள்ள SRF பக்தர்கள் மின்னஞ்சல் மூலம் YSS ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்பு கொண்டு மேலே குறிப்பிட்டுள்ளபடி அவர்களின் அனைத்து விவரங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • SRF பக்தர்கள் விழாவில் பங்கேற்கவும் மற்றும் அந்த இடத்தில் உணவு சாப்பிடவும் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள் என்றாலும், அவர்கள் அருகிலுள்ள ஏதாவது ஹோட்டல்களில் தங்கள் சொந்த தங்குமிட ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து கவனிக்கவும்:

  • ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான பதிவுக்கான கோரிக்கைகள் அதிகபட்ச வரம்பை எட்டினால் பதிவு முன்னதாக மூடப்படலாம்.
  • வெற்றிகரமான பதிவு முடிந்ததும், மின்னஞ்சல் அல்லது SMS மூலம் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள். அத்தகைய அறிவிப்பை நீங்கள் பெறவில்லை என்றால், YSS ராஞ்சி ஹெல்ப் டெஸ்க்கை தொலைபேசி (0651 6655 555) அல்லது மின்னஞ்சல் (helpdesk@yssi.org) மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே சங்கத்தில் கலந்து கொள்ளலாம்.
  • 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
கிரியா யோகம் பெறுவதற்கான தகுதிகள்

இந்த சங்கங்களில் கலந்து கொள்ளும் அனைத்து கிரியாபன்களும் கிரியா யோக தீட்சை பெறும் புதிய பக்தர்களுடன் கிரியா யோக தீட்சை விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கிரியா யோகம் பெறுவதற்கான தகுதிகள்

  • கிரியா யோக தீட்சை பெறுவதற்கான தகுதி YSS பாடங்களுடன் இணைக்கப்பட்ட கேள்வித்தாளுக்கு திருப்திகரமான பதில்களை சமர்ப்பிப்பதைப் பொறுத்தது.
  • கேள்வித்தாளில் நீங்கள் கவனிப்பதைப் போல, கிரியா யோகத்தைப் பெறுவதற்குத் தகுதி பெற, பக்தர் முதல் மூன்று அடிப்படை யோகதா உத்திகளை பல மாதங்களாக தவறாமல் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
  • YSS வரிசை குருமார்கள் மற்றும் யோகதா சத்சங்க பாதைக்கு பக்தி மற்றும் விசுவாசத்தின் கையொப்பமிடப்பட்ட கிரியா யோக உறுதிமொழியையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தயவு செய்து கவனிக்கவும்:

  • நீங்கள் கிரியா யோகத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், கேள்வித்தாளுக்கு உங்கள் பதில்களை இன்னும் அனுப்பவில்லையெனில், நீங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இடத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அவை சந்நியாசிகளால் சரிபார்க்கப்படும்.
  • நீங்கள் ஏற்கனவே இவற்றை ராஞ்சிக்கு அனுப்பி கிரியா யோகத்திற்கான ஒப்புதலை எழுத்துப்பூர்வமாக பெற்றிருந்தால், அந்த இடத்தில் பதிவு செய்ய அந்த ஒப்புதல் கடிதத்தை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

 

கிரியா யோக தீட்சை விழாவில் பங்கேற்றல்:

  • இந்த விழாவில் கிரியா யோக தீட்சை பெற விரும்பும் அனைவரும், கிரியா யோக பாடங்களைப் பெற்றவர்கள், ஆனால் ஒரு விழாவில் பங்கேற்காதவர்கள் உட்பட; மேலும், முறையான தீட்சை பெற்ற ஆனால் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் கிரியாபன்கள் குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக சம்பந்தப்பட்ட இடத்தில் பதிவு செய்து, விழாவுக்கு தேவையான அனுமதி அட்டையை கொண்டு வர வேண்டும்.
  • கிரியா யோக தீட்சைக்கு உங்களைப் பதிவு செய்து கொள்ளும் போதும், மறு ஆய்வில் கலந்துகொள்ளும் போதும் உங்கள் கிரியாபன் அடையாள அட்டையைக் கொண்டு வந்து காண்பிக்கவும்.
தன்னார்வலர்கள்

எப்போதும் போல, பதிவு மேசை, தங்குமிடம், ஆடியோ-விஷுவல்ஸ், உண்ணுமிடம், சுகாதாரம், அறிமுகம் மற்றும் பிற துறைகள் போன்ற பல்வேறு பகுதிகளில் சேவை செய்ய பக்தர்-தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றில் சில பகுதிகளில், விழா துவங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன், சில தன்னார்வலர்கள் தேவைப்படுவர். நீங்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால், அதற்கேற்ப பதிவு படிவத்தில் குறிப்பிடவும்.

உங்கள் நன்கொடைகள் தேவை

இந்நிகழ்வுகளை நடத்துவதற்கு ஆகும் பல்வேறு செலவுகளுக்கு நன்கொடைகளை கோருகின்றோம். பதிவுக் கட்டணம் மானியமாக வழங்கப்படுவதால் வரையறுக்கப்பட்ட வழிகள் உள்ள பக்தர்கள் கூட பங்கேற்க முடியும். இந்த மானியத்தை வழங்குவதற்கும், அதன் மூலம் குருதேவரின் விருந்தோம்பலை அனைத்து நேர்மையான தேடுபவர்களுக்கு வழங்குவதற்கும் எங்களை அனுமதிக்க பெரிய நன்கொடை வழங்க முடிந்தவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விபரங்கள்

யோகதா சத்சங்க கிளை மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834 001

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை)
மின்னஞ்சல்: helpdesk@yssi.org

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர