YSS வேண்டுகோள் – ஜனவரி 2024

ஜனவரி 3, 2024

ஜன்மோத்ஸவ் தினத்தன்று சிறப்பு காணிக்கை செலுத்துங்கள்

ராஞ்சி ஒரு மகத்தான நிறுவனம்… மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய யோகதா புனித பயணியர்களுக்கு இது ஒரு மெக்காவாக இருக்கும்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

குருதேவர், ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் இந்த அவதார தின நன்னாளில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நமது அன்புக்குரிய குருதேவருக்கு இதயப்பூர்வ பக்தியை வெளிப்படுத்துவதில் எங்களுடன் இணையுமாறு அன்புடன் அழைக்கிறோம். அவருடைய தெய்வீக அருளாசிகள் நம் வாழ்க்கையை மேம்படுத்துகிறது. பூமியில் பரமஹம்ஸரின் முன் மாதிரியான வாழ்க்கை மற்றும் பணி எண்ணற்ற மெய்ப்பொருள் நாடுவோருக்கு அவர்களின் பிரபஞ்ச வீட்டிற்கான பயணத்தில் உத்வேகம் அளித்தது, அவர்களின் வாழ்க்கைப் பாதையை பிழையாத ஞானம் மற்றும் வழிகாட்டுதலால் ஒளிரச் செய்தவாறே, இன்றும் அதைத் தொடர்கிறது.

“ஒரு காலத்தில் நம் அன்புக்குரிய குருதேவரின் தெய்வீக இருப்பால் அருளப்பட்ட ராஞ்சி ஆசிரமத்தின் புனித நிலப்பரப்பில், அடியெடுத்து வைப்பது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க அருளாசியாகும். இந்த இடத்தின் ஒவ்வொரு மூலையிலும் நமது மதிப்பிற்குரிய சன்னியாசிகள் நடத்திய ஆத்மார்த்தமான சத்சங்கங்கள் மற்றும் ஞான ஒளியூட்டும் வகுப்புகளின் நினைவுகள் பொதிந்திருக்கின்றன. இந்த நிலப்பரப்பில், மைதானம், விருந்தினர் இல்லம், கலையரங்கம் ஆகிய இடங்களில் எண்ணற்ற ஆண்டுகளாக நடந்த சங்கம் மற்றும் ஏகாந்த வாச நிகழ்ச்சிகளின் போது ஒன்றுபட்ட ஆன்மீகக் குடும்பமாக தியானம் செய்து இனிய தோழமையை அனுபவிக்க ஒன்று கூடினோம்.

இங்கு)இதுபோன்ற நிகழ்வுகளின் போது பாய்ந்தோடி வந்த குருதேவரின் ஞான நதியில் மூழ்கி, நாங்கள் ஆறுதலையும் வழிகாட்டலையும் உணர்ந்தோம். புதிய உற்சாகத்துடன் நமது ஆன்மீகப் பாதையைப் புதுப்பித்து மீண்டும் கண்டறிவதற்குமான மதிப்புமிக்க வாய்ப்பை கண்டறிந்தோம். ஓ! நம் இதயங்களைத் தொட்ட, நம் ஆன்மாக்களை உயர்த்திய, காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்ட பிணைப்புகளை உருவாக்கிய அந்த ஆசீர்வதிக்கப்பட்ட தருணங்களை நாம் எவ்வளவு பாக்கியமாகக் கருதுகிறோம்.”

— யு.எஸ்., டெல்லி

இந்த புனித சந்தர்ப்பங்களில், தங்கள் நன்கொடைகள் மூலம் ஆதரிக்கக்கூடிய ஏதேனும் சிறப்பு திட்டங்களை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) மேற்கொள்கிறதா என்று பக்தர்கள் அடிக்கடி எங்களிடம் கேட்கிறார்கள். குருதேவரின் ராஞ்சி ஆசிரமத்தில் வசதிகளை மேம்படுத்தவும் நீங்கள் பங்களித்து அதன் மூலம் உதவக்கூடிய இதுபோன்ற பல வாய்ப்புகளை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

வருகை தரும் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகளை புனரமைக்கும் பயணத்தை நாம் தொடங்கியுள்ள நிலையில், உங்கள் ஆதரவை பணிவுடன் கோருகிறோம். இந்த உன்னத நோக்கத்திற்கு பங்களிப்பதன் மூலம், எண்ணற்ற ஆன்மாக்கள் ஆறுதலையும், உத்வேகத்தையும், இறை அன்பையும், நேச உணர்வையும் கண்டுணர்ந்த இந்த புனித ஆலயத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நீங்கள் எங்களுக்கு உதவலாம். நமது குருதேவரின் இந்த பாரம்பரியத்தை, நமது நேர்மை, நன்றியுணர்வு மற்றும் நாம் இணைந்து செல்லும் இந்த ஆன்மீக பயணத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்போம்.

பிரதான விருந்தினர் இல்லம் புதுப்பித்தல்

1959 ஆம் ஆண்டில், நமது மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரும், சங்கமாதாவுமான ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா வால் அடிக்கல் நாட்டப்பட்ட ராஞ்சி ஆசிரமத்தின் பிரதான விருந்தினர் இல்லம் முதலில் யோகதா சத்சங்க பிரம்மச்சரிய வித்யாலயா (பள்ளி) மற்றும் மகாவித்யாலயா (கல்லூரி) மாணவர்களுக்கு விடுதி அறைகளாகவும் வகுப்பறைகளாகவும் செயல்பட்டது. காலப்போக்கில், இது வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக விருந்தினர் இல்லம் ஆக மாற்றப்பட்டுள்ளது. கட்டிடம் 60 ஆண்டுகளுக்கும் மேலானது என்பதால், தவிர்க்க முடியாத தேய்மானத்தை நிவர்த்தி செய்ய விரிவான பழுதுபார்ப்பு தேவைப்படுகிறது, மேலும் அனைத்து விருந்தினர் அறைகளையும் சமகால தரத்திற்கு கொண்டு வர குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்பு தேவைப்படுகிறது.

விருந்தினர் இல்லத்தின் வெளிப்புறம் அமைந்துள்ள லிஃப்ட் வடம்
புதிதாக நிறுவிய லிஃப்ட்
YSS-Appeal-January-2024-Main-Guest-House-Construction-Image
இரண்டாம் தளத்தில் மறுசீரமைப்பு பணிகள்
புதுப்பிக்கப்பட்ட விருந்தினர் அறையின் கட்டிட அமைப்பு விளக்கம்

புனரமைப்பு பணிகளில் பின்வருவன அடங்கும்:

  • இரண்டாவது மாடியில் உள்ள பெரிய தங்குமிடங்கள் மற்றும் பகிரப்பட்ட குளியலறை வசதிகள், இணைக்கப்பட்ட குளியலறைகளுடன் கூடிய தனிப்பட்ட அல்லது குடும்ப அறைகளாக மாற்றுதல். இதற்காக 17 விருந்தினர் அறைகளை சேர்க்க உள்ளோம். இந்த புதிய அறைகள் பெரிய தங்குமிடங்களில் இல்லாத வசதியையும் ஏகாந்தத்தையும் வருகையாளர்களுக்கு வழங்கும்.
  • பழுதுபார்ப்புப் பணிகள்: பல அறைகளில் மழைநீர் கசிவு உள்ளிட்ட தேய்மானத்தால் ஏற்பட்ட கட்டட பிரச்னைகளை சரிசெய்ய, விரிவான பழுதுபார்ப்பு தேவைப்படுகிறது.
  • மூத்த குடிமக்களுக்கான லிப்ட்: மூத்த குடிமக்களையும் மேல் தளங்களில் தங்க வைக்கும் வகையில் லிப்ட் ஒன்றை நிறுவியுள்ளோம், இதனால் அவர்கள் தரைத்தளத்தில் மட்டுமே தங்க வைக்கப் படவேண்டும் என்ற கட்டாயம் தவிரக்கப்படும்.
  • அறைகளை புதுப்பித்தல்: விருந்தினர் இல்லங்களில் தற்போதுள்ள அறைக்கலன்கள் மற்றும் பொருத்துகலன்கள் பழைய காலத்தைச் சேர்ந்தவை. புனரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து அறைகளிலும், தரமான அறைக்கலன்கள், படிப்பு மேஜைகள் மற்றும் நாற்காலிகள், நிம்மதியான தூக்கத்திற்கான வசதியான படுக்கைகள் மற்றும் ரம்மியமான அலங்காரம் ஆகியவை நிறுவப்படும். மேலும் எழில்மிகு வண்ணங்கள் மற்றும் ரம்மியமான விளக்குகள் போன்ற அம்சங்களையும் இணைத்து, உள்முகப்படுதல் மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்கு உதவும் சூழலை உருவாக்க விரும்புகிறோம்.

திட்டச் செலவு: ரூ.2.75 கோடி

பெண்கள் விருந்தினர் இல்லதிற்கு இரண்டாவது தளம் சேர்த்தல்

கட்டுமானத்தில் உள்ள இரண்டாவது தளம்
முன்னேற்றத்தில் இரண்டாவது மாடி கூரை அமைப்பு
கட்டிடத்தின் முன் தோற்றத்தின் கட்டிட அமைப்பு விளக்கம்

சாதனா சங்கம் மற்றும் ரிட்ரீட்டுகளின் போது குறைந்த அளவிலான அறைகள் மட்டுமே பெண்கள் விருந்தினர் இல்லத்தில் கிடைக்கின்றன. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வது முக்கியம். 13 அறைகள் கொண்ட இரண்டாவது மாடியை சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இந்த விரிவாக்கம் நமது குருதேவரின் ஆன்மீக சகோதரிகளுக்கு தங்கள் ஆன்மீக பயிற்சிகளில் முழுமையாக ஈடுபட வரவேற்கத்தக்க மற்றும் வசதியான சூழலை வழங்கும், இந்த அறைகளுக்கும் கூட மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி நவீன அறைக்கலன்கள் மற்றும் பொருத்துகலன்கள் அமைக்கப்படும்.

திட்டச் செலவு: ரூ.3.25 கோடி

கலையரங்கத்தின் கணிசமான மறுசீரமைப்பு

நமது ஆசிரமத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிரதான தியான மந்திரின் குறைந்த பரப்பளவுக்குள், குறிப்பாக சாதனா சங்கங்கள், நினைவு கூரும் நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளை நடத்தும்போது வளர்ந்து வரும் சபைக்கு இடமளிப்பது சவாலாகி வருகிறது. மேலும், தியான மந்திரின் தற்போதைய மேற்கூரை மற்றும் அதன் இடைவெளி அமைப்பு நிரந்தர பொருத்தமான ஒளி சாதனங்கள் மற்றும் கேமரா அமைப்புகளை நிறுவ அனுமதிக்காததால் இது நேரடி ஒளிபரப்பை மிகவும் சிக்கலாக்குகிறது.

கலையரங்கத்தில் பக்கக் காட்சியின் கட்டிட அமைப்பு விளக்கம்
கலையரங்கத்தின் உட்புற கட்டிட அமைப்பு விளக்கம்

இந்த அவசரத் தேவையை நிறைவேற்ற, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் போற்றப்பட்டு வரும் ஒரு ஆன்மீக சரணாலயமான கலையரங்கதின் மீது எங்கள் கவனத்தை திருப்பியுள்ளோம். எவ்வாறாயினும், இந்த கலையரங்கத்திற்கு கணிசமான சீரமைப்பு தேவை என்பது தெளிவாகியுள்ளது.

மழைக் கசிவுகள் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, எதிர்காலத்திற்கான அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து கொண்டு, முதலில் கட்டமைப்பை (கூரை, கூரை உத்திரங்கள் போன்றவை) புதுப்பிப்போம்.

அடுத்து நாங்கள் மழை, கொசுக்கள், சத்தம் போன்ற வெளிப்புற விஷயங்களால் தொந்தரவு செய்யப்படாத அமைதியான சூழலை உருவாக்கும் வகையில், கலையரங்கத்தின் நான்கு பக்கங்களையும் சுவர்களால் மூடி ஒரு அமைதியின் புகலிடத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இது பக்தர்களுக்கு அவர்களின் சாதனையில் பெரிதும் உதவும்.

ஆனால் அது மட்டுமல்ல. டிஜிட்டல் யுகத்தை ஏற்றுக் கொண்டு, உலகளவில் கலந்து கொள்பவர்களுடன் தொடர்பு கொள்ள, நாங்கள் கலையரங்கத்தில் அதிநவீன ஆடியோ-வீடியோ கருவிகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இது நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய எங்களுக்கு உதவும், இது உலகெங்கிலும் நாடுவோர்களுக்கு ஒரு மாற்றம் தரும் அனுபவத்தை வழங்குகிறது. பிரதான தியான மந்திரில் நிலவும் இடப் பற்றாகுறை நமது அன்புக்குரிய குருதேவரின் ஆழமான போதனைகளை வளர்ந்து வரும் உலகளாவிய ஆன்மீக குடும்பத்துடன் பகிர்ந்துகொள்வதில் நமக்குத் தடையாக இருக்காது.

திட்டச் செலவு: ரூ. 4 கோடி

இந்த மூன்று அத்தியாவசிய புனரமைப்புத் திட்டங்களைத் தவிர, மேலும் இரண்டு திட்டங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

ராஞ்சி தியான மந்திர் அருகே புதிய கழிவறை வசதி மற்றும் ஊழியர் குடியிருப்புகள் புதுப்பித்தல்

புதிய கழிவறையின் முகப்பு தோற்றம்
புதிய கழிவறையின் பக்கவாட்டு தோற்றம்

எங்கள் தொடர்ச்சியான மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, பிரதான தியான மந்திருக்கு அருகிலுள்ள கழிவறைகளை மேம்படுத்தியுள்ளோம். 24 மணி நேரமும் அத்தியாவசிய உதவிகளை வழங்கும் ஊழியர்கள் தங்கும் பணியாளர் குடியிருப்புகளை புதுப்பிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

திட்டச் செலவு: ரூ.50 லட்சம்

சேவகர்கள் மற்றும் விருந்தினருக்கான புதிய குடியிருப்பு

ராஞ்சி ஆசிரமத்தில் குருதேவரின் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்ட அதிகரித்து வரும் சேவகர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக, ஆசிரமத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பன்சால் பிளாசா அடுக்குமாடி வளாகத்தில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை நாங்கள் வாங்கியுள்ளோம்.

திட்டச் செலவு: ரூ.50 லட்சம்

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது

குருதேவரின் பணி தொடர்ந்து வளர்ந்து வருகிறது, அதனுடன் பல சவால்களையும், அதே நேரத்தில் சேவை செய்வதற்கான பல வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. இந்த சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள நாம் அனைவரும் இணைந்து, குருதேவரின் பணிக்கு நம்மால் இயன்ற விதத்தில் உதவுவோம்.

இத்திட்டங்களின் கூட்டுச் செலவு சுமார் ரூ.11 கோடி ஆகும்.

பல ஆண்டுகளாக உங்கள் தாராள மனப்பான்மை மற்றும் தொடர்ச்சியான உதவி இல்லாமல், எங்களால் நிறைவேற்ற முடிந்த அனைத்தையும் சாதித்திருக்க முடியாது. உண்மையான பாதையை தீவிரமாக நாடும் அனைவருக்கும் நமது அன்பிற்குரிய குருதேவரின் கிரியா யோகச் செய்தியை பரப்புவதில் உங்கள் பன்மடங்கு பங்களிப்புகள் மதிப்புமிக்கவை.

இந்தத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவ, உங்கள் பிரார்த்தனைகள் உட்பட, நீங்கள் செய்யக்கூடிய எதுவும் பெரிதும் போற்றப்படும்.

குருதேவரின் ஆசிரமங்களில் பணியாற்றும் சேவகர்களுடன் சேர்ந்து சன்னியாச சமூகமாகிய நாங்கள், உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும், தாராளமான பங்களிப்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்; இந்த அருளப்பெற்ற ஜன்மோஸ்தவ் உங்களுக்கு அமைதியும் ஆனந்தமும் நல்க வாழ்த்துகிறோம்.

இறைவன் மற்றும் நமது புனித குருதேவரின் நிலையான பாதுகாக்கும் இருப்பை நாம் அனைவரும் உணர்வோமாக! ஜெய் குரு!

para-ornament

இதைப் பகிர