இளையோர்களுக்கான சேவைகள்

அறிமுகம்

ஏட்டுக் கல்வி மட்டுமே மக்களுக்கு மகிழ்ச்சியை தராது. ‘எப்படி-வாழ-வேண்டும்’ என்ற கல்வியே — எங்ஙனம் ஒரு இணக்கமான, ஒழுக்கமான வாழ்வை, வலிமையான இச்சா சக்தியையும், ஆன்மீக ஞானத்தையும் வளர்த்துக் கொள்வது — அதுவே மகிழ்ச்சியை கொணரும்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர் இளையோர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் வாழ்நாள் முழுவதும் அக்கறை காட்டினார். அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) தியானம் மற்றும் சரியான செயல்பாட்டுடன் சமநிலையாக வாழ்வது எப்படி என்பதை இளையோர்களுக்குக் கற்பிக்கும் பல்வேறு எப்படி-வாழ-வேண்டும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

ஒரு யோகியின் சுய சரிதம்-இல் தாகூர் ஐ மேற்கோள் காட்டி யோகானந்தர் கூறுவதாவது: “உண்மையான கல்வி என்பது வெளி ஆதாரங்களிலிருந்து புகுத்துவதோ அல்லது திணிப்பதோ அல்ல. மனிதனின் உள்ளுக்குள்ளே குவிக்கப்பட்டிருக்கும் எல்லையற்ற ஞானத்தை வெளிக்கொணர உதவுவதுதான் அது.”

இந்த தத்துவத்தின் அடிப்படையில், YSS இளையோர் நிகழ்ச்சித் திட்டங்கள், ஒரு பயிற்றுவிப்பு மற்றும் வேடிக்கையான சூழலை உருவாக்குகின்றன, அங்கு இளம் வயதினர்கள், தங்களின் உள்ளார்ந்த திறமைகளையும் ஆன்ம குணங்களையும் வெளிக் கொணர்ந்து, அதே சமயம் புதிய வாழ்க்கைத் திறன்களைப் பெற்று, தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

இரண்டு வெவ்வேறு வயதுப் பிரிவுகளுக்கு இரண்டு வித வடிவங்களில் சேவை அணுகலுக்கான திட்டம்

YSS இளையோர்களுக்கான சேவைகள் துறை இரண்டு வெவ்வேறு வயதுக் குழுக்களுக்கான சேவையை நோக்கமாக கொண்ட இளையோர் சேவை அணுகல் திட்டத்தை ஒருங்கிணைக்கிறது:

  1. குழந்தைகளுக்கான சத்சங்கம் (வயது 8–12)
  2. பதின்ம வயதினருக்கான திட்டம் (வயது 13–17), மேலும்

இந்த இரண்டு குழுக்களுக்கான நிகழ்ச்சிகள் இரண்டு வடிவங்களில் நடத்தப்படுகின்றன – இரண்டுமே நேரில் மற்றும் ஆன்லைனில்.

தற்போது நடைபெற்று வரும் நேரடி நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நமது YSS ஆசிரமங்கள் மற்றும் கேந்திரங்களில் நடத்தப்படும் குழந்தைகளுக்கான சத்சங்கங்கள் மற்றும் மே-ஜூன் மாதங்களில் நொய்டா ஆசிரமம் மற்றும் சென்னை ஏகாந்த வாச மையத்தில் நடைபெறும் கோடைகால முகாம்கள் ஆகியவை அடங்கும்.

நாங்கள் ஆன்லைனில் வழங்கும் திட்டங்களில் குழந்தைகளுக்கான சத்சங்கங்கள் மற்றும் பதின்ம வயதினருக்கான நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும், இவை இரண்டும் விரைவில் தொடங்கப்படும். கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரகால ஆன்லைன் கோடைகால இளையோர்க்கான நிகழ்ச்சி (SRF உடன் இணைந்து) நடத்தப்படுகிறது. இது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஒரு உறுதியான ஆன்மீக மற்றும் தார்மீக அடித்தளத்தை வழங்குகிறது. SRF [YSS] இன் 2023 ஆன்லைன் கோடைகால இளையோர்க்கான நிகழ்ச்சியில் 21 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர்! இதர திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நன்மைகள்

பல ஆண்டுகளாக, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர், இளையோர்களுக்கான திட்டங்களால் தாங்கள் எவ்வாறு பயனடைந்துள்ளனர் என்பது பற்றி எங்களுக்கு எழுதியுள்ளனர். சில நன்மைகளாவன:

  • இறைவனை உணர்ந்தறிய யோக தியான உத்திகளைக் கற்றுக்கொள்ளுதல்
  • புதிய, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆன்மீக நண்பர்களைக் கண்டறிதல்
  • அதிக கவனம் செலுத்தும் திறன்
  • பயத்தையும் பதட்டத்தையும் தைரியத்துடனும் அமைதியாகவும் எதிர்கொள்ளும் திறன்
  • சக்தியூட்டும் உடற் பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் பிராணாயாமம் மூலம் சிறந்த ஆரோக்கியம்
  • தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் திறன்

நற்சான்றிதழ்

பின் குறிப்பு., ஒரு 17 வயது இளைஞன் எழுதினான்: “எனக்கு பத்து வயதாக இருந்தபோது, இளையோர்களுக்கான நிகழ்ச்சியின் போது ஹாங்-ஸா ஒருமுகப்பாட்டு உத்தியை கற்றுக்கொண்டேன். எனக்கு 15 வயதாகும் போது தான் நான் தியானத்தை உண்மையில் பரிசோதனை செய்யத் தொடங்கினேன். நாங்கள் தேர்வு முடிவுகளைப் பெறும்போதெல்லாம், அவற்றை பகுப்பாய்வு செய்வேன், நான் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் நான் செய்த பல தவறுகளை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும். வருட இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. எனது மதிப்பெண் 88% இல் ஊசலாடிக் கொண்டிருந்தது, மேலும் கால்குலஸ் வகுப்பில் சரியான மதிப்பெண் பெற விரும்பினேன்.

“என் இறுதி தேர்வுக்கு முந்தைய இரவு, ஹாங்-ஸா-வின் அமைதியை உணரும் வரை நான் ஆழமாக தியானித்தேன். மறுநாள் பரீட்சை அறைக்குள் நுழைந்த போது அமைதியாக இருந்தேன். முடிவுகள் வந்ததும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டேன். வகுப்பில் 100% மதிப்பெண் பெற்ற ஒரே மாணவன் நான் தான். கருத்துகள் மற்றும் சூத்திரங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் அப்போதுதான் உணர்ந்தேன். இது ஒரு தேர்வு சமயம் போன்ற மன அழுத்த காலங்களில் அவற்றை நினைவில் கொண்டு வருவது என்பது தான் ஒரு கடினமான விஷயம். தியானம் அமைதியாகவும் கவனமாகவும் இருக்க எனக்கு உதவியது, அதுதான் பள்ளியில் எனக்கு உண்மையிலேயே உதவியது.”

குழந்தைகளுக்கான சத்சங்கம்

சிறுவர்களுக்கான சரியான கல்வி முறையைப் பற்றிய குறிக்கோள் என்றுமே என் இதயத்திற்கு மிகவும் உகந்ததாகும்…. நீதி மற்றும் ஆன்மீக நெறிமுறைகளை உணராமல் எவரும் ஆனந்தத்தை அடைய முடியாது; முறையான பாடத்திட்டத்தில் அவை இன்னும் இல்லை.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

தக்ஷிணேஸ்வர்
ராஞ்சி

இந்த மகத்தான குரு, 1917 ஆம் ஆண்டில் வங்காளத்தில் ஒரு கிராமப்புறத்தில் ஏழு குழந்தைகளுடன் ஒரு சிறிய பள்ளியை நிறுவி தனது பணியைத் தொடங்கினார். பின்னர், அவரது வழிகாட்டுதலுடன் அமெரிக்காவில் உள்ள SRF ஆலயங்கள் மற்றும் மையங்களில் முதல் ஞாயிறு பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இன்று, இளையோர்களுக்கான சேவைகள் துறையால் பல்வேறு இளையோர் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.

YSS/SRF உலகளாவிய ஆன்மீகக் குடும்பத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன், YSS கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் வழங்கும் குழந்தைகளுக்கான சத்சங்க நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான சத்சங்கத்தின் நோக்கம், பிற ஆன்மீக குழந்தைகளுடன் இணைந்து, சக கற்றலை சாத்தியமாக்கும் ஒரு சுவாரஸ்யமான கற்றல் சூழலில் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான உத்வேகம் அளிப்பதாகும். இறைவனுடன் அன்பான தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளவும், சரியான நடத்தை எவ்வாறு மகிழ்ச்சியான, சமநிலையான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் வகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கீர்த்தனைகள் மற்றும் தியான காலங்கள் கவனத்துடன் இருக்க வேண்டியதை போதிக்கின்றன மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகின்றன மற்றும் குருதேவரின் படைப்புகளில் இருந்து கதைகள் அவர்களின் ஆன்மீக மற்றும் உணர்வுசார் அறிவுத்திறனை மேம்படுத்துகின்றன, அதே நேரத்தில் கூட்டு செயல்பாடுகள் குழு உணர்வு, ஒத்துழைப்பு மற்றும் இணக்கமான உரையாடல் திறன்களை ஊக்குவிக்கின்றன.

படைப்பாற்றல், விடாமுயற்சி, முன்முயற்சி மற்றும் பொறுமை போன்ற நல்ல குணநலன்களைக் கற்பிப்பதற்காக விளையாட்டுகள் அல்லது கைவினைகள் பெரும்பாலும் சேர்க்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானத்தில் வயதுக்கு ஏற்ற அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தின் நோக்கம், பல தகவல்களை மனப்பாடம் செய்யவேண்டிய அழுத்தம் உள்ள வகுப்பறை மாதிரியான சூழலைத் தவிர்ப்பது மற்றும் YSS போதனைகளை நிதானமாகவும் ஈடுபாட்டுடனும் வழங்குவது – குழந்தைகளுக்கான சத்சங்கத்தை குழந்தைகள் மீண்டும் மீண்டும் விரும்பும் மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவது.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு

பரமஹம்ஸ யோகானந்தர் கூறியதாவது: “தன்முனைப்பாயிருப்பதையும் தாண்டி அன்பை விரிவுபடுத்துவது குடும்பத்தில் தொடங்குகிறது. பெற்றோரின் பங்கு, தன்னைத் தாண்டி வெளியே கவனம் செலுத்தும் ஆரம்ப இயல்பான அறிமுகத்தை வழங்குகிறது.”

குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை இது காட்டுகிறது. அவர்களின் வளர்ச்சியுறும் ஆன்மீக வாழ்க்கை, ஊக்குவிக்கப்பட்டால், வெற்றிகரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளமாக மாறும்.

ஆசிரியர்கள் வகிக்கும் பங்கைப் பற்றி, ஸ்ரீ தயா மாதா கூறினார், “எங்கள் ஞாயிறு பள்ளி [குழந்தைகளுக்கான சத்சங்கம்] ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது, ஏனென்றால் அவர்களால் உலகை மாற்ற உதவ முடியும். இன்றைய குழந்தைகளுக்கு தங்கள் வாழ்க்கையில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்க கற்பிப்பதன் மூலம், யோகதா குழந்தைகளுக்கான சத்சங்க ஆசிரியர்கள் நாளைய ஒரு புதிய மற்றும் சிறந்த உலகத்தை உருவாக்க உதவுகிறார்கள்.”

குருதேவரின் அடுத்த தலைமுறை சீடர்களை உருவாக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர் தன்னார்வலர்களின் தீவிர பங்களிப்பு YSS இளையோர்களுக்கான சேவைகளுக்கு தேவைப்படுகிறது. உங்கள் உள்ளூர் கேந்திரா அல்லது மண்டலியில் குழந்தைகளுக்கான சத்சங்கத்தைத் தொடங்க விரும்புவோர், மற்றும் தற்போதுள்ள குழந்தைகள் நிகழ்ச்சிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களாக பணியாற்ற விரும்புவோர் cs@yssi.org என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

கோடைகால முகாம்கள்

நொய்டாவில் சிறுமியருக்கான கோடைகால முகாம்

பரமஹம்ஸ யோகானந்தரின் எளிய, ஆரோக்கியமான வாழ்க்கை என்ற இலட்சியத்தை உத்வேகமாகக் கொண்டு, நொய்டாவில் உள்ள யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் மே மாதத்தில் வருடாந்திர சிறுமியர் முகாம் நடத்தப்படுகிறது. ஆன்மீக தோழமை உணர்வை வளர்க்கும் அதே வேளையில், இளம் பங்கேற்பாளர்களிடையே உடல், மன மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு முழுமையான கற்றல் சூழலை வழங்குவதை இந்த முகாம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூட்டு தியானத்திற்கு முன் பிரார்த்தனையில் ஆழ்ந்த சிறுமியர்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த பதின்ம வயதினர் குழு ஒரு கைவினைத் திட்டத்தில் வேலை செய்கிறது

முகாம் சிறப்பம்சங்கள்

  • தினசரி கூட்டு தியானம்
  • கீர்த்தனை வகுப்புகள்
  • முதலுதவி, அவசர நிலை கையாளுதல் மற்றும் தீயில்லா சமையல் போன்ற நடைமுறை அறிவு
  • டேக்வாண்டோ வகுப்புகள் மற்றும் விளையாட்டு நேரம் போன்ற உடல் சார்ந்த செயல்பாடுகள்
  • கைவினை நிகழ்ச்சிகள்
  • நேர மேலாண்மை
  • மின்னஞ்சல் விதிமுறை மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு
2023 ல் நொய்டா சிறுமியர்' முகாமில் பக்த தன்னார்வலர்கள் மற்றும் சிறுமியர்கள்
கீர்த்தனை வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது

எப்படி-வாழ-வேண்டும் வகுப்புகள்

ஒருமுகப்பாடு, குணநலன் மேம்பாடு, இச்சா சக்தி, சுயபரிசோதனை மற்றும் வெற்றியின் விதி முறை போன்ற தலைப்புகளில் அனுபவமிக்க ஆசிரியர்களால் தனிப்பட்ட வளர்ச்சியை எளிதாக்கும் “எப்படி-வாழ-வேண்டும்” வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முகாம் நிகழ்ச்சிகள், ஒரு நாளைக்கு மூன்று முறை சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் யோக ஆசனங்கள் பயிற்சியுடன் தியானம், ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ-வீடியோ மற்றும் நேரடி விளக்கக்காட்சிகள்

தொடர் மாலை நிகழ்ச்சிகள் பங்கேற்பாளர்களுக்கு ஆன்மீக ஆர்வத்தை வளர்க்கவும், அவர்களின் ஆன்மீக அறிவு மற்றும் புரிதலை ஆழப்படுத்தவும் உதவுகின்றன. குருதேவர் பற்றிய காணொளி நிகழ்ச்சிகள், இந்திய மகான்கள் பற்றிய விளக்கக்காட்சிகள் மற்றும் பஜனை பாடும் அமர்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.

ஐந்து நாள் முகாம் வழக்கமாக ஒரு கலாச்சார நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது.

சரியாக வாழும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் ஆனந்தமாக இருந்தால், அனைத்தும் உங்களிடம் இருக்கப் பெறுவீர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

நொய்டா ஆசிரமத்தில் சிறுவர்களுக்கான கோடைகால முகாம்

சிறுவர்களுக்கான கோடைகால முகாம் ஆனந்தமான, சரியான வாழ்க்கை முறை என்ற இலட்சியத்தை மையமாகக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் நொய்டாவில் உள்ள யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் நடத்தப்படும் ஐந்து நாள் முகாமாகும். இந்தத் நிகழ்ச்சி, உடல், மன மற்றும் ஆன்மீகக் களங்களில் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஸ்வாமி அலோகானந்தா மாணவர்களுக்கு ஒரு அறிமுக வகுப்பை நடத்துகிறார்
உடல் ரீதியான விளையாட்டு மற்றும் பிற விளையாட்டுகள் குழந்தைகளிடையே குழுப்பணி மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்கின்றன

நோக்கம்

முதல் நாளில் ஒரு YSS சன்னியாசி நடத்தும் ஒரு அறிமுக வகுப்புடன் இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது. பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலில் முகாமில் இருந்து அதிகபட்ச பயனைப் பெற பங்கேற்பாளர்களுக்கு உதவும் வகையில்,-“செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை” – என்ற நடத்தைக் கோட்பாடுகளின் தொகுப்பு தெளிவுபடக் கூறப்பட்டது.

பணி பயிற்சிகள் மற்றும் எப்படி-வாழ-வேண்டும் வகுப்புகள்

இந்த முகாம் நிகழ்ச்சிகளில், இளம் பங்கேற்பாளர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை எளிதாக்குவதற்கான தொடர்ச்சியான பணி பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் உள்ளன. கைவினைப்பொருட்கள், வேத கணிதம், மின்னஞ்சல் விதிமுறை, நேர மேலாண்மை, இசை அடிப்படைகள், மேடைப் பேச்சுக் கலை, மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் பணி பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. முதலுதவி மற்றும் அவசர நிலை கையாளுதல் பற்றிய வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. விளையாட்டு நேரத்தின் போது, சிறுவர்கள் கால்பந்து, கைப்பந்து, டாக்-அண்ட்-த-போன் மற்றும் கபடி போன்ற பலவற்றை விளையாடுகிறார்கள். வெற்றியின் விதிமுறை மற்றும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் போன்ற தனிப்பட்ட வளர்ச்சிக்கான தலைப்புகள் பற்றியும் பேசப்படுகின்றது.

ஒவ்வொரு நாளும் காலையில் யோக ஆசனங்களைச் செய்ய சிறுவர்கள் அதிகாலையில் எழுகிறார்கள்.
2023 இல் நொய்டா சிறுவர் முகாமில் சன்னியாசிகள், பக்தர் தன்னார்வலர்கள் மற்றும் சிறுவர்கள்

ஆன்மீக அறிவுறுத்தல்

முகாம் செயல்பாடுகளின் மையத்தில் சிறுவர்களிடையே ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் நடவடிக்கைகள் உள்ளன. யோக ஆசனங்களைத் தொடர்ந்து சக்தியூட்டும் உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவை சன்னியாசிகள் மற்றும் சாதாரண தன்னார்வ சீடர்களால் நடத்தப்படுகின்றன. YSS போதனைகள் மற்றும் இந்திய ஆன்மீக இலக்கியங்களிலிருந்து சன்னியாசிகளின் சிறப்பு கதை சொல்லும் அமர்வுகள் உள்ளன. இறைவனுடனும் குருமார்களுடனும் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ள சிறுவர்களை ஊக்குவிப்பதற்காக மூத்த சன்னியாசிகளால் / மற்ற சன்னியாசிகளால் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

நிறைவு நிகழ்ச்சி ஒரு கலாச்சார நிகழ்ச்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பங்கேற்பாளர்கள் முகாமில் தங்களது தனித்துவமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஸ்லைடுஷோ விளக்கக்காட்சி மூலம் முகாம் நடவடிக்கைகளின் கண நேர காட்சிகளைக் காணவும், ஒரு சன்னியாசியின் எழுச்சியூட்டும் உரையைக் கேட்கவும் பெற்றோருக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

சென்னை ஏகாந்த வாச மையத்தில் சிறுவர் மற்றும் சிறுமியருக்கான கோடைகால முகாம்

இதேபோன்ற கோடைகால முகாம் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள YSS சென்னை ஏகாந்த வாச மையத்திலும் நடத்தப்படுகிறது.

பதின்ம வயதினருக்கான நிகழ்ச்சி

ஆன்லைன் வாராந்திர பதின்ம வயதினர் கூட்டங்கள்

ஆன்லைன் குழந்தைகள் சத்சங்கம் மற்றும் சில கேந்திராக்களில் ஆரம்பகால முன்னோடித் திட்டங்களை நடத்தும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, YSS 2024 ஆம் ஆண்டில் ஆன்லைன் பதின்ம வயதினருக்கான நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு teenservices@yssi.org மின்னஞ்சல் மூலம் YSS இளையோர்களுக்கான சேவையைத் தொடர்பு கொள்ளவும், அல்லது உங்கள் தேர்வை பதிவு செய்ய கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

சேவை வாய்ப்புகள் மற்றும் YSS இளையோர்களுக்கான சேவைகள் துறை பற்றிய பொதுவான கேள்விகளுக்கு, தொடர்பு கொள்ள: youthservices@yssi.org

ஆன்லைன் SRF நிகழ்ச்சிகள்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸெல்ஃப்-ரியலைசேஷன் பெலோஷிப்பின் இளையோர்களுக்கான சேவைகள் துறை SRF ஆலயங்கள் மற்றும் மையங்களில் பல வருடங்களாக “எப்படி-வாழ-வேண்டும்” (ஞாயிறு பள்ளி) வகுப்புகளை நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், SRF இளையோர்களுக்கான சேவைகள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த வகுப்புகளுக்கு பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள்.

தற்போது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான அனைத்து வழங்கல்களை காணவும், அந்த நிகழ்வுகளுக்கு பதிவு செய்யவும் SRF இளையோர்களுக்கான சேவைகள் நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

இதைப் பகிர