தியான மந்திர் – யோகதா சத்சங்க கிளை மடம், ராஞ்சி

உங்களால் தியானம் நீங்கலாக அனைத்தையும் செய்ய முடியும் என்றாலும் கூட, எண்ணங்கள் அமைதியாக்கப்பட்டு, உங்கள் மனம் இறைஅமைதியுடன் ஒத்திசைந்து இருக்கும்போது எழும் ஆனந்தத்திற்கு சமான ஒன்றை நீங்கள் ஒருபோதும் கண்டுணர மாட்டீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர், யோகதா சத்சங்க பாடங்கள்

ராஞ்சி ஆசிரமத்தில் 300 பக்தர்களுக்கு இடமளிக்கும் தியான மந்திர் என்று அழைக்கப்படும் தியான அரங்கமானது, யோகதா சத்சங்க பக்தர்கள் மற்றும் உலகின் ‘பரபரப்பிலிருந்து’ தப்பிக்க விரும்பும் வருகையாளர்கள் ஆகிய இருவருக்கும் ஆன்மீக புகலிடமாகும். YSS சன்னியாசிகள் இங்கு காலை, மாலை தியானங்களை வழக்கமாக நடத்துகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில், பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் அடிப்படையில் சன்னியாசிகள் ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்குகிறார்கள்.

வரலாறு

இந்த தியான மந்திரின் கட்டுமானம் 2004 ஆம் ஆண்டில் தொடங்கி 2007 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. ஜனவரி 31, 2007 அன்று ஸ்வாமி விஸ்வானந்தா திறந்து வைத்தார். தற்போதைய YSS/SRF தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியும் இந்த மறக்கமுடியாத நிகழ்வில் கலந்து கொண்டார். தியான மந்திர், ஒரு சதுர தியான அரங்கம், சுற்றிலும் வராண்டா மற்றும் நான்கு பக்கங்களிலும் படிகள் கொண்டதாக உள்ளது. பரத்பூர் மணற்கற்களால் கட்டப்பட்ட இந்த அழகிய அமைப்பு கம்பீரமாகவும், கலைநயத்துடனும் சமநிலையில் இருப்பது மட்டுமல்லாமல், வெளிப்புற இடையூறுகளைத் தடுக்கும் அளவுக்கு தனிமையாகவும் உள்ளது.