ஒய் எஸ் எஸ் பக்தர்கள் வழி நடத்தும் ஆன்லைன் தியானங்கள்
(ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகள்)

நிகழ்வு பற்றி

சன்னியாசிகள் வழி நடத்தும் தியானங்கள் தவிர, ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திரத்தின் வாராந்திர காலண்டரில் பக்தர்கள் வழி நடத்தும் தியானங்களையும் வழங்குகிறோம்.

தயவு செய்து கவனிக்கவும்: மே 6 முதல் திங்கள்கிழமைகளில் மாலை 5:10 மணி முதல் இரவு 7:30 மணி (IST) வரை இந்தியில் பக்தர் வழி நடத்தும் ஓர் நீண்ட நேர தியானம் மேலும் சேர்க்கப் பட்டுள்ளது.

மாலை 5:10 மணி முதல் 7:30 மணி வரை (ஹிந்தி)

ஒவ்வொரு திங்கள்கிழமையிலும்

அட்டவணை

காலை தியானம்

காலை 6:40 – 8:00 வரை (ஆங்கிலம்)

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும்

காலை 6:40 – 8:00 வரை (இந்தி)

ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும்

மாலை தியானம்

மாலை 5:10 – 6:30 வரை (இந்தி)

செவ்வாய் தவிர அனைத்து நாட்களும்

மாலை 6:10 – 7:30 வரை (ஆங்கிலம்)

செவ்வாய் மற்றும் புதன் தவிர அனைத்து நாட்களும்

மாலை 6:10 – 7:30 வரை (தெலுங்கு)

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகள்

மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை (தமிழ்)

ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகள்

மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை (கன்னடம்)

ஒவ்வொரு புதன்கிழமையும்

மாலை 6:10 மணி முதல் இரவு 7:30 மணி வரை (வங்காளம்)

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது திங்கட்கிழமைகளில்

மாலை 5:10 மணி முதல் 7:30 மணி வரை (ஹிந்தி)
(நீண்ட நேர தியானம்)

ஒவ்வொரு திங்கள்கிழமையிலும்

மாலை 6:10 மணி – இரவு 8:30 மணி (ஆங்கிலம்)
(நீண்ட நேர தியானம்)

ஒவ்வொரு புதன்கிழமையும்

ஒவ்வொரு தியானமும் இணைந்து செய்யும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து ஒரு தொடக்கப் பிரார்த்தனை, ஆன்மீக நாட்குறிப்பில் இருந்து வாசித்தல், கீதங்கள், மற்றும் சிறிது நேர மெளன தியானம். பின்னர் பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவுப் பிரார்த்தனையுடன் முடிவடையும். இந்த தியானங்கள் ஒவ்வொன்றிலும் இசைக்கப்படும் கீதங்கள் ஆங்கிலம் மற்றும் தியானம் நடத்தப்படும் மொழி இரண்டிலும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

புதன்கிழமைகளில் நடைபெறும் மாலை நேர நீண்ட தியான நிகழ்வின் வடிவம்:

நீண்ட நேர தியானமானது பக்தர் குழுவின் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் தொடங்கி, ஒரு ஆரம்பப் பிரார்த்தனையுடன் தொடர்ந்து உத்வேகம் தரும் வாசிப்புகள், ஆன்ம கீதமீசைத்தல் மற்றும் 30-50 நிமிடங்கள் நீடிக்கும் இரண்டு கால அமைதியான தியானத்துடன் நடைபெறும். இந்த தியானம் பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும், ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடையும்.

சன்னியாசிகள் வழி நடத்தும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் இந்த ஆன்லைன் தியானங்கள் நடத்தப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆன்லைன் தியானத்தில் பங்கேற்பது எப்படி”, என்பதை பார்வையிடுங்கள், நீங்கள் அதை அறிந்திருக்கவில்லை என்றால்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர