ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியுடன் சங்கம்,
YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவர்
(YSS சங்கம் 2023)

ஞாயிறு, பிப்ரவரி 12 – வியாழன், பிப்ரவரி 16, 2023

(கிரியா யோக தீட்சை – பிப்ரவரி 15, 2023)

Sangam with YSS/SRF President Sri Sri Swami Chidananda Giri

நிகழ்வு இடம்

கன்ஹா சாந்தி வனம்
வர்ல்ட் ஹெட்குவார்டர்ஸ் ஆஃப் ஹார்ட்ஃபுல்னஸ்
13-110, கன்ஹா கிராமம், நந்திகாம மண்டல்,
ரங்கா ரெட்டி மாவட்டம்
தெலங்கானா – 509325

வரைபட இருப்பிடம்

முகவரி

யோகதா சத்சங்க கிளை மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834001
ஜார்கண்ட்

தொலைபேசி

(0651) 6655 555
(திங்கள்-சனி காலை 9:30 மணி – மாலை 4:30)

மின்னஞ்சல்

உங்கள் சிருஷ்டிகர்த்தாவை அறிவதே வேறு எந்த சாதனையையும் விடப் பெரியது. நட்சத்திரங்களிலும், பூமியிலும், உங்கள் உணர்வுகளின் ஒவ்வொரு துடிப்பிலும் இறைவனைக் கண்டறிய கற்றுக்கொள்ளுங்கள். அவர் நம் இதயங்களுக்குள் மறைந்திருக்கிறார் — மிகவும் புறக்கணிக்கப்பட்ட உண்மை. நீங்கள் யோகதா சத்சங்க பாதையை உறுதியாகப் பின்பற்றி, தொடர்ந்து தியானம் செய்தால், சாசுவதம் முழுதூடாக பரவியிருக்கும் ஒளியின் தங்க அங்கியில் அவரைக் காண்பீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

நிகழ்வைப் பற்றி

நமது மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்தகிரி அவர்கள் ஜனவரி – பிப்ரவரி 2023 இல் இந்தியாவிற்கு விஜயம் செய்தார். ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள் பிப்ரவரி 12 முதல் 16 வரை ஹைதராபாத்தில் ஒரு சிறப்பு ஐந்து நாள் சங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

சங்கத்தின் போது பின்வரும் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன:

  • ஸ்வாமி சிதானந்த கிரி மற்றும் பிற சன்னியாசிகள் வழங்கும் எழுச்சியூட்டும் சொற்பொழிவுகள் (ஆங்கிலத்தில் வழங்கப்படும் உரைகள்)
  • ஸ்வாமி சிதானந்த கிரி வழி நடத்தும் மூன்று மணி நேர சிறப்பு தியானம்
  • ஒவ்வொரு நாளும் நடக்கும் காலை, மாலை தியானங்கள்

முழு நிகழ்ச்சி நிரலின் அட்டவணையை கீழே காணலாம்.

நிகழ்வுகளின் அட்டவணை

எல்லா நேரங்களும் IST இல் உள்ளன.

நேரடியாக ஒளிபரப்பப்படும் அனைத்து உத்வேகமளிக்கும் உரைகளும் பின்னரும் பார்க்க கிடைக்கும்.

நேரடி

நாள் 1

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை

YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் ஊக்கமளிக்கும் உரையுடன் தொடக்க நிகழ்ச்சி

சங்கத்தின் தொடக்க அமர்வு YSS / SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் எழுச்சியூட்டும் உரையுடன் தொடங்கியது. ஸ்வாமிஜி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டிற்கான ஐந்து நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்றார், மேலும் வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு கடந்து நமது உயர் திறனை அடைவது என்பது குறித்த உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மதியம் 2:00 மணி முதல் 2:25 மணி வரை

YSS/SRF தலைவரின் நிகழ்ச்சி தொடக்க உரையின் மொழிபெயர்ப்பு
(இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைக்கப்பெறும்)

இந்த அமர்வின் போது, ஸ்வாமி சிதானந்தஜி அவர்கள் வழங்கிய தொடக்க உரையை, YSS சன்னியாசிகள், சங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்காக மூன்று மொழிகளில்-இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு-மொழிபெயர்ப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மதியம் 2:30 மணி முதல் 4:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மறுஆய்வு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

இந்த மறுஆய்வு வகுப்பில் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த கிரியா யோகா பாதையின் இன்றியமையாத உத்திகளில் ஒன்றான சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் படிப்படியான வழிமுறை அறிவுறுத்தல்கள் இருந்தன.

தியானத்தின் போது ஆற்றலை மிக எளிதாக உள்நோக்கி இயக்கி, உயர் உணர்வு நிலைகளை அடைவதற்கு, பக்தர்கள் உடலையும் மனதையும் விருப்பாற்றலினால் பிரபஞ்ச சக்தியின் மூலம் புத்துயிரூட்டவும், இறுக்கத்தை அகற்றவும், உடலை சுத்திகரித்து வலுப்படுத்தவும் கற்றுக்கொண்டனர்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 2

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

ஹாங்-ஸா உத்தி மறுஆய்வு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

இந்தப் பண்டைய சக்திவாய்ந்த ஹாங்-ஸா உத்தி மனத்தின் உள்ளார்ந்த ஒருமுகப்பாட்டு சக்திகளை விருத்திசெய்ய உதவுகிறது. இவ்வுத்தியை முறைதவறாமல் பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர், எண்ணத்தையும் சக்தியையும் அடையப்பட வேண்டிய ஏதாவது இலக்கின் மீதோ அல்லது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையின் மீதோ குவிப்பதற்காக அவற்றை வெளிப்புற கவனச்சிதறல்களிலிருந்து விலக்கி உள்ளிழுக்கக் கற்றுக் கொள்கிறார். அல்லது வெற்றிகரமான பயிற்சியின் மூலம் விளையும் ஒருமுகப்பட்ட கவனத்தை ஒருவர் அகத்தே உள்ள இறை உணர்வுநிலையை உணர்ந்தறிவதற்கு திருப்ப முடியும்.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“த ஹீலிங் பவர் ஆஃப் ஃபர்கிவ்னஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் சொற்பொழிவு
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

“தீங்கு எத்தகையதாயினும் மன்னிக்க வேண்டும். இந்த இனத்தின் தொடர்ச்சிக்கு மனிதனின் மன்னிக்கும் குணம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மன்னிப்பு என்பது வல்லவர்களின் வல்லமையாகும்.”

இந்த வார்த்தைகளின் மூலம், நாம் தவறு செய்தவர்களை மன்னிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மகாபாரதம் வலியுறுத்துகிறது. மன்னிப்பவன் பரிசுத்தப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அக அமைதி மற்றும் சாந்தமான நிலைக்கு புகும் அதே வேளையில், மன்னிக்கப்பட்டவரை விட மன்னிப்பவருக்கு மன்னிப்பு என்ற தெய்வீக குணத்தைப் பயிற்சி செய்வது எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இந்த உரை வலியுறுத்துகிறது.

நமது சன்னியாசிகள் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி வழங்கிய ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“பீயிங் எ ப்ரின்ஸ் ஆஃப் பீஸ் இன் இன்னர் அண்ட் அவுடர் லைவ்ஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

பரமஹம்ஸர் கூறுகிறார்: “அமைதியாக செயல் புரிவது மற்றும் விழிப்புடன் அமைதியாக இருப்பது என்பது – நிதானம் என்னும் சிம்மாசனம் மீது அமர்ந்து கொண்டு , செயல்கள் என்னும் அரசினை ஆட்சிபுரிவது- ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகும்.” ஆழ்ந்த தியானம் செய்வதன் மூலமும், அதன் விளைவுகளை, நமது கடமைகளை உண்மையாகச் செய்யும்போது பற்றிக்கொள்வதன் மூலமும் நாம் எவ்வாறு அமைதியை வளர்த்துக்கொள்ளலாம், அதில் நிலைத்திருக்கலாம் என்பதை இந்த உரை தெளிவுபடுத்துகிறது. மேலும், எல்லா நேரங்களிலும் இறைவனுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுபூர்வ மன முயற்சியின் மூலமும், அன்பு, நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் எண்ணங்களை அனுப்புவதன் மூலமும், நம் உள்ளார்ந்த அமைதி சரணாலயத்தை வலுப்படுத்தலாம்.

ஸ்வாமி சுத்தானந்த கிரி வழங்கிய ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
மாலை 4:40 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சி
மற்றும்
ஸ்வாமி சிதானந்த கிரி உடன் சிறப்பு நீண்ட தியானம்

இந்த சங்கத்தின் போது யோகதா சத்சங்க சொஸைடி/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி மூன்று மணி நேர சிறப்பு தியானம் வழி நடத்தினார். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் உள்ளார்ந்திருக்கும் தியானத்தின் அமைதி மற்றும் ஆனந்தத்தை உணர ஸ்வாமி சிதானந்தஜி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள YSS/SRF பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழிகாட்டினார்.

தியானத்திற்கு முன்னதாக சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் பயிற்சி செய்யப்பட்டன.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 3

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

ஓம் உத்தி மறுஆய்வு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

ஹாங்-ஸா உத்தியின் பயிற்சி வாயிலாக, உடலை தளர்த்தி, மனதை ஒருமுகப்படுத்த ஒருவர் கற்றுக்கொண்டவுடன், இந்த உயர்நிலை ஓம் தியான உத்தி, விழிப்புணர்வை, உடல் மற்றும் மனதின் வரம்புகளுக்கப்பாலுள்ள ஒருவரின் எல்லையற்ற திறன் பற்றிய உணர்தலுக்கு விரிவுபடுத்துகிறது.

இந்த மறுஆய்வு வகுப்பில் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த கிரியா யோகா பாதையின் இன்றியமையாத உத்திகளில் ஒன்றின் படிப்படியான வழிமுறை அறிவுறுத்தல்கள் இருந்தன.

ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“காட் ஈஸ் அஸ் க்ளோஸ் டு யூ அஸ் யுவர் தாட் அலௌஸ் ஹிம் டு பி” என்ற தலைப்பில் அகத்தூண்டும் உரை
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

தயா மாதாஜி கூறுகிறார்: “உங்கள் எண்ணம் இறைவனை எவ்வளவு நெருக்கமாக நினைக்க வைக்கிறதோ அவ்வளவு நெருக்கமாக இறைவன் உங்களிடம் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் எங்கும் நிறைந்தவன். இக்கணத்தில் அவன் உங்களுடனேயே, உங்கள் மூடிய கண்களுக்குப் பின்னால் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் அவனுடைய அருகாமையை உணர்வீர்கள்.” இறைவன் ஒரு சிந்தனை அளவு நெருக்கத்தில் தான் இருக்கிறான் மேலும் எப்போதும் அன்புடன் நம்மீது கவனம் செலுத்துகிறான் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும்போது, அவனை நோக்கி மேலும் மேலும் அதிக முறை திரும்புவோம் மற்றும் அவனுடனான தோழமையில் மகிழ்ச்சியுறுவோம்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி ஷ்ரத்தானந்த கிரியின் ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“டேப்பிங் இன்டு த இன்னர் சோர்ஸ் ஆஃப் ஸ்ட்ரெங்த் அண்ட் விஸ்டம் த்ரூ மெடிடேஷன்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

அன்றாட வாழ்க்கையின் அழுத்தம் மற்றும் நிர்பந்தங்களால் திணருவதாக உணர்வதும், மற்றவர்களும் சமூகமும் நம் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளால் நமது தெய்வீகத் தேடலில் திசை திருப்பப்படுவதும் எளிது. ஆனால், நமக்குள் ஆறுதல் தரும் அமைதியும், ஞானமும், உன்மத்தமளிக்கும் மகிழ்ச்சியும் ஏற்கனவே இருக்கிறது. இந்த மறைந்துள்ள ஆதாரவளத்தை அணுகுவதற்கு ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த விஞ்ஞான உலகளாவிய யோகப் பாதையைப் பின்பற்றி தினசரி தியான நடைமுறையை வளர்த்துக் கொள்வது தான்.

நமது சன்னியாசிகள் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி கமலானந்த கிரியின் ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 4

புதன்கிழமை, பிப்ரவரி 15
காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை

கிரியா யோக தீட்சை
(ஆங்கிலத்திலும், இந்தியிலும்)

கிரியாபன்களாக இருக்கும் YSS மற்றும் SRF பக்தர்கள் மற்றும் கிரியா யோகா தீட்சை பெற தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் அனைத்து கிரியாபன்களும், கிரியா பதிவு கவுண்டரிலிருந்து தங்கள் அனுமதி அட்டைகளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இது ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும், நிகழ்விடத்திலுள்ள வெவ்வேறு அரங்குகளில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

புதன்கிழமை, பிப்ரவரி 15
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

கிரியாபன் அல்லாதவர்களுக்கு தியானம் மற்றும் சத்சங்கம்
(ஆங்கிலத்தில்)

YSS சன்னியாசி ஒருவர் தியானம் வழி நடத்தினார் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ- வேண்டும்” போதனைகளின் அடிப்படையில் சத்சங்கம் வழங்கினார்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

புதன்கிழமை, பிப்ரவரி 15
மதியம் 2:30 மணி முதல் 4:00 மணி வரை

கிரியா யோக மறுஆய்வு வகுப்பு
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

அனைத்து YSS மற்றும் SRF கிரியாபன் பக்தர்களும் கிரியா மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த வகுப்பு ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

புதன்கிழமை, பிப்ரவரி 15
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

கிரியாபன் அல்லாதவர்களுக்கு சத்சங்கம்
(இந்தியில்)

YSS சன்னியாசி ஒருவர் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ- வேண்டும்” போதனைகளின் அடிப்படையில் சத்சங்கம் வழங்கினார்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

புதன்கிழமை, பிப்ரவரி 15
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் கீர்த்தனையுடன் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 5

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 7:00 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

YSS / SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி
அவர்களின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுடன் நிறைவு நிகழ்ச்சி

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் ஐந்து நாட்கள் ஆழ்ந்த பிறகு, இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடியிருந்த அனைவரும் அத்தகைய சங்கத்தின் அடையாளமான இறை இருப்பின் உறுதியான உணர்வை – அருளாசிகளைத் தக்கவைத்துக் கொள்ள ஆவலுடன் காத்திருந்தனர். உண்மையான சமநிலை வாழ்க்கை வாழவும், இறைவனுடன் நெருக்கமான உறவை உணரவும், சங்கத்தை எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்வது, பரமஹம்ஸர் வழங்கிய பயிற்சிகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்த உத்வேகத்தை. நிறைவு உரையில், ஸ்வாமி சிதானந்தஜி பகிர்ந்து கொண்டார்.

ஸ்வாமிஜியின் சொற்பொழிவுக்கு முன்னதாக பக்தியுடன் கீதமிசைத்தல் நடைபெற்றது.

மதியம் 2:30 மணி முதல் 3:00 மணி வரை

YSS/SRF தலைவரின் நிறைவு உரையின் மொழிபெயர்ப்பு
(இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில்)

நிறைவு நிகழ்ச்சியில் ஸ்வாமி சிதானந்தஜி ஆற்றிய எழுச்சியூட்டும் உரையின் மொழிபெயர்ப்புகளை YSS சன்னியாசிகள் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் சங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்காக பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நேரடி ஒளிபரப்பு

நாள் 1

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை

YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் ஊக்கமளிக்கும் உரையுடன் தொடக்க நிகழ்ச்சி

சங்கத்தின் தொடக்க அமர்வு YSS / SRF இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் எழுச்சியூட்டும் உரையுடன் தொடங்கியது. ஸ்வாமிஜி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஆன்மீக புதுப்பித்தல் மற்றும் மேம்பாட்டிற்கான ஐந்து நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்றார், மேலும் வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு கடந்து நமது உயர் திறனை அடைவது என்பது குறித்த உத்வேகத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 12
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 2

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“த ஹீலிங் பவர் ஆஃப் ஃபர்கிவ்னஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் சொற்பொழிவு
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

“தீங்கு எத்தகையதாயினும் மன்னிக்க வேண்டும். இந்த இனத்தின் தொடர்ச்சிக்கு மனிதனின் மன்னிக்கும் குணம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மன்னிப்பு என்பது வல்லவர்களின் வல்லமையாகும்.”

இந்த வார்த்தைகளின் மூலம், நாம் தவறு செய்தவர்களை மன்னிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மகாபாரதம் வலியுறுத்துகிறது. மன்னிப்பவன் பரிசுத்தப்படுத்தும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஒரு சுதந்திரத்தை அனுபவிக்கிறான். அக அமைதி மற்றும் சாந்தமான நிலைக்கு புகும் அதே வேளையில், மன்னிக்கப்பட்டவரை விட மன்னிப்பவருக்கு மன்னிப்பு என்ற தெய்வீக குணத்தைப் பயிற்சி செய்வது எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை இந்த உரை வலியுறுத்துகிறது.

நமது சன்னியாசிகள் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி ஸ்மரணானந்த கிரி வழங்கிய ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“பீயிங் எ ப்ரின்ஸ் ஆஃப் பீஸ் இன் இன்னர் அண்ட் அவுடர் லைவ்ஸ்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

பரமஹம்ஸர் கூறுகிறார்: “அமைதியாக செயல் புரிவது மற்றும் விழிப்புடன் அமைதியாக இருப்பது என்பது – நிதானம் என்னும் சிம்மாசனம் மீது அமர்ந்து கொண்டு , செயல்கள் என்னும் அரசினை ஆட்சிபுரிவது- ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதாகும்.” ஆழ்ந்த தியானம் செய்வதன் மூலமும், அதன் விளைவுகளை, நமது கடமைகளை உண்மையாகச் செய்யும்போது பற்றிக்கொள்வதன் மூலமும் நாம் எவ்வாறு அமைதியை வளர்த்துக்கொள்ளலாம், அதில் நிலைத்திருக்கலாம் என்பதை இந்த உரை தெளிவுபடுத்துகிறது. மேலும், எல்லா நேரங்களிலும் இறைவனுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுபூர்வ மன முயற்சியின் மூலமும், அன்பு, நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் எண்ணங்களை அனுப்புவதன் மூலமும், நம் உள்ளார்ந்த அமைதி சரணாலயத்தை வலுப்படுத்தலாம்.

நமது சன்னியாசிகள் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி சுத்தானந்த கிரி வழங்கிய ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திங்கட்கிழமை, பிப்ரவரி 13
மாலை 4:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சி
மற்றும்
ஸ்வாமி சிதானந்த கிரி உடன் சிறப்பு நீண்ட தியானம்

இந்த சங்கத்தின் போது யோகதா சத்சங்க சொஸைடி/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி மூன்று மணி நேர சிறப்பு தியானம் வழி நடத்தினார். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் உள்ளார்ந்திருக்கும் தியானத்தின் அமைதி மற்றும் ஆனந்தத்தை உணர ஸ்வாமி சிதானந்தஜி இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள YSS/SRF பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழிகாட்டினார்.

தியானத்திற்கு முன்னதாக சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் பயிற்சி செய்யப்பட்டன.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 3

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

“காட் ஈஸ் அஸ் க்ளோஸ் டு யூ அஸ் யுவர் தாட் அலௌஸ் ஹிம் டு பி” என்ற தலைப்பில் அகத்தூண்டும் உரை
(ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்)

தயா மாதாஜி கூறுகிறார்: “உங்கள் எண்ணம் இறைவனை எவ்வளவு நெருக்கமாக நினைக்க வைக்கிறதோ அவ்வளவு நெருக்கமாக இறைவன் உங்களிடம் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் எங்கும் நிறைந்தவன். இக்கணத்தில் அவன் உங்களுடனேயே, உங்கள் மூடிய கண்களுக்குப் பின்னால் இருப்பதாக நீங்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் அவனுடைய அருகாமையை உணர்வீர்கள்.” இறைவன் ஒரு சிந்தனை அளவு நெருக்கத்தில் தான் இருக்கிறான் மேலும் எப்போதும் அன்புடன் நம்மீது கவனம் செலுத்துகிறான் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கும்போது, அவனை நோக்கி மேலும் மேலும் அதிக முறை திரும்புவோம் மற்றும் அவனுடனான தோழமையில் மகிழ்ச்சியுறுவோம்.

நமது சன்னியாசிகள் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி ஷ்ரத்தானந்த கிரியின் ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
பிற்பகல் 2:30 முதல் 3:30 வரை

“டேப்பிங் இன்டு த இன்னர் சோர்ஸ் ஆஃப் ஸ்ட்ரெங்த் அண்ட் விஸ்டம் த்ரூ மெடிடேஷன்” என்ற தலைப்பில் உத்வேகமளிக்கும் உரை
(ஆங்கிலம் மற்றும் இந்தியில்)

அன்றாட வாழ்க்கையின் அழுத்தம் மற்றும் நிர்பந்தங்களால் திணருவதாக உணர்வதும், மற்றவர்களும் சமூகமும் நம் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளால் நமது தெய்வீகத் தேடலில் திசை திருப்பப்படுவதும் எளிது. ஆனால், நமக்குள் ஆறுதல் தரும் அமைதியும், ஞானமும், உன்மத்தமளிக்கும் மகிழ்ச்சியும் ஏற்கனவே இருக்கிறது. இந்த மறைந்துள்ள ஆதாரவளத்தை அணுகுவதற்கு ஒருவர் செய்ய வேண்டியது எல்லாம் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த விஞ்ஞான உலகளாவிய யோகப் பாதையைப் பின்பற்றி தினசரி தியான நடைமுறையை வளர்த்துக் கொள்வது தான்.

நமது சன்னியாசிகள் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இந்த தலைப்பில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

ஸ்வாமி கமலானந்த கிரியின் ஆங்கில சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செவ்வாய்க் கிழமை, பிப்ரவரி 14
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 4

புதன்கிழமை, பிப்ரவரி 15
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் கீர்த்தனையுடன் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் முடிவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நாள் 5

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 7:05 மணி முதல் 8:20 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, தொடர்ந்து பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் அமர்வு முடிந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை

YSS / SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி
அவர்களின் எழுச்சியூட்டும் சொற்பொழிவுடன் நிறைவு நிகழ்ச்சி

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளில் ஐந்து நாட்கள் ஆழ்ந்த பிறகு, இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு கூடியிருந்த அனைவரும் அத்தகைய சங்கத்தின் அடையாளமான இறை இருப்பின் உறுதியான உணர்வை – அருளாசிகளைத் தக்கவைத்துக் கொள்ள ஆவலுடன் காத்திருந்தனர். உண்மையான சமநிலை வாழ்க்கை வாழவும், இறைவனுடன் நெருக்கமான உறவை உணரவும், சங்கத்தை எப்படி வீட்டிற்கு எடுத்துச் செல்வது, பரமஹம்ஸர் வழங்கிய பயிற்சிகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது குறித்த உத்வேகத்தை. நிறைவு உரையில், ஸ்வாமி சிதானந்தஜி பகிர்ந்து கொண்டார்.

ஸ்வாமிஜியின் சொற்பொழிவுக்கு முன்னதாக பக்தியுடன் கீதமிசைத்தல் நடைபெற்றது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வியாழக்கிழமை, பிப்ரவரி 16
மாலை 5:35 மணி முதல் இரவு 8:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

இந்த அமர்வானது சக்தியூட்டும் உடற்பயிற்சியுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தொடக்க பிரார்த்தனையுடன் ஒரு YSS சன்னியாசி வழி நடத்தும் தியானம், மேலும் கீதம் பாடுதல் மற்றும் மௌன தியானம் ஆகியவை இருந்தன, மெளன தியான காலங்கள் மாறுபட்டாலும், பொதுவாக 45 நிமிடங்கள் நீடித்தது. பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் தியானம் நிறைவடைந்தது.

இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உங்கள் ஆதரவு தேவை

இந்த அளவிலான ஐந்து நாள் நிகழ்வை வெளிப்புற இடத்தில் ஏற்பாடு செய்வதற்கான செலவுகள் கணிசமானவை. ஒரு பங்கேற்பாளரின் பொருட்டு ஆகும் மொத்த செலவு ரூ. 12,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கலந்து கொள்ளக்கூடியவர்களை செலவு மட்டுப்படுத்தக்கூடாது என்பதற்காக பதிவுக் கட்டணம் 4,000 ரூபாயாக மானியப்படுத்தப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, மொத்தச் செலவுகளை ஈடுகட்ட உங்களில் எங்களுக்கு உதவக்கூடிய நிலையிலுள்ளவர்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த நிதி உதவியை வழங்குவதற்கும், அதன் மூலம் குருதேவரின் உபசரிப்பை அவரது ஆன்மீகக் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்குவதற்கும், பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கக்கூடியவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

உங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும், அக ஆனந்தம் மற்றும் அமைதி பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பதற்குமான எங்கள் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்வீர்களாக.

விசாரணைகளுக்கான தொடர்பு விபரங்கள்

யோகதா சத்சங்க கிளை மடம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தர் பாதை
ராஞ்சி 834001
ஜார்கண்ட்

தொலைபேசி: (0651) 6655 555
(திங்கள் – சனி காலை 9.30 மணி முதல் – மாலை 4.30 வரை)

மின்னஞ்சல்: helpdesk@yssi.org

தலைவர் விஜயத்தின் புகைப்படங்கள்:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர