“சீடத்துவத்தை ஆழப்படுத்துதல்” —சீடர்களின் தன்னார்வ குழுவின் ஆரம்பகால வளர்ச்சி

13 ஜனவரி, 2024

எனது குருவுடன் அதிக ஒத்திசைவு ஏற்படும் என்ற வாக்குறுதிக்காக நான் வி எல் டி-இல் சேர்ந்தேன். என் வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவனை நேசித்து, இறைவனுக்கு சேவை செய்யும் அருட்பேறில் நான் சிலிர்த்தேன். அருளாசிகள் தொடர்கின்றன. வி எல் டி-இன் செயற்பாடுகள் அனைத்தும் எனது பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தவும், முன்னெப்போதையும் விட “ஆன்மீக கடமைகளை” [வி எல் டி உறுப்பினர்களுக்கானவை] பின்பற்ற அதிக முயற்சி எடுக்கவும் உதவியுள்ளன. மற்றவையும் பின்பற்றப்படும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்.

—ஹெச்.கே., கொல்கத்தா

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (YSS/SRF) இன் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி சீடர்களின் தன்னார்வ குழு கையேட்டிற்கு வாசகர்களை வரவேற்கும் தனது செய்தியில் , “பரமஹம்ஸ யோகானந்தர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில், உலகெங்கிலும் உள்ள YSS மற்றும் SRF கிரியாபன் உறுப்பினர்கள் தனது பணியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தீவிரமாக பங்கேற்கக்கூடிய ஒரு ஊடகம் அல்லது கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக நேரம் ஒதுக்கினார். இப்போது அந்த கனவு YSS மற்றும் SRF சீடர்களின் தன்னார்வ குழு-வின் முறையான தொடக்கத்துடன் நிறைவேறியுள்ளது.

ஜூன் 2021, அதன் தொடக்கத்திலிருந்தே, இந்த சாதாரண சீடர் வரிசை உறுப்பினர்களுக்கு, சேவை செய்யவும், இந்தப்பாதையில் தங்கள் சீடத்துவத்தை ஆழப்படுத்துவது பற்றி மேலும் அறியவும் பல அற்புதமான புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்த இடுகையில், தற்போது நடைபெற்று வரும் சில முன்னேற்றங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஆனால் முதலில், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவில் கிரியா யோகியாக இருப்பது, ஒருவர் சீடர்களின் தன்னார்வ குழுவில் (வி எல் டி) உறுப்பினராகவும் இருக்க விரும்புகிறாரா என்ற கேள்வியுடன் எவ்வாறு தொடர்புடையது என்பது பற்றிய சில பின்னணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

இந்த ஆன்மீகப் பாதையில், ஒருவர் கிரியா யோக உத்தியில் தீட்சை பெறும்போது, அவர் பரமஹம்ஸ யோகானந்தருடன் குரு- சிஷ்ய உறவுக்குள் நுழைகிறார்- ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்ட உண்மையான ஆன்மீக தேடலின் மிகவும் மதிப்பிற்குரிய பாரம்பரியம் – YSS அல்லது SRF இன் கிரியாபன் உறுப்பினராகிறார்.

புனித கிரியா தீட்சை பெறும் அந்த நேரத்தில், கிரியாபன்கள் சீடத்துவத்திற்கான ஆன்மீக சங்கல்பம் எடுத்துக்கொள்கிறார்கள். குறைந்தது ஒரு வருடம் கிரியாபனாக இருந்த பிறகு, ஒருவர் விரும்பினால் YSS/SRF க்கு குரு பக்தி மற்றும் அவரது பணிக்கு உதவ விருப்பம் ஆகியவற்றின் வெளிப்பாடாக, பரமஹம்ஸ யோகானந்தர் வலியுறுத்தும் கொள்கைகளின்படி சுய ஒழுக்கத்துடன் வாழ்வதற்கும், தவறாமல் சேவை செய்வதற்கும் ஆன்மீக அர்ப்பணிப்புக்கான கூடுதல் உறுதிமொழியை எடுத்துக் கொண்டு, வி எல் டி-இல் சேர தேர்வு செய்யலாம்.

வி எல் டி தொடங்கப்பட்டதிலிருந்து, வி எல் டி உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை வி எல் டி உறுதிமொழிக்கு ஏற்ப வழிநடத்தவும், சன்னியாசிகளால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வகுப்புகளின் மூலம் உள்ளார்ந்த ஆன்மீக வாழ்க்கையை வலுப்படுத்திக் கொள்ளவும், மேலும் தோழ்மையுடன் ஒருவருக்கொருவர் வலுவான ஆன்மீகப் பிணைப்புகளை உருவாக்கவும் உதவுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த இடுகையில், சீடர்களின் தன்னார்வ குழு YSS பிரிவு மேற்கொண்ட நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் படிக்கலாம் – குறிப்பாக வி எல் டி உறுப்பினர்கள் தங்கள் பயிற்சியை ஆழப்படுத்தவும், குரு சேவையில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளவும், பணியில் தங்கள் பங்காற்றி பயனடைந்த நிகழ்ச்சிகளைப் பற்றி படிக்கலாம்.

வி எல் டி வகுப்புகளின் தனித்துவமான உதவி மற்றும் அணுகுமுறை

தொடக்க விழாவுக்குப் பின்னர் YSS/SRF கிரியாபன்களுக்காக நடத்தப்பட்ட ஒரு ஆன்லைன் சத்சங்கத்தில், ஸ்வாமி சிதானந்தாஜி, “சீடர்களின் தன்னார்வ குழு என்பது, முதலாவதாகவும், முக்கியமாகவும் சீடராய் இருப்பதைப் பற்றியும், பின்னர் அந்த உணர்வுடன், அதே அணுகுமுறையுடன் கூட, குருவுடனான உள்ளார்ந்த ஒத்திசைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியைச் செய்வதைப் பற்றியுமானது” என்று சுட்டிக்காட்டினார். சுருக்கமாக சீடர்களின் தன்னார்வ குழு என்பது இது தான்: இத்தகைய வாழ்க்கை வாழ்வதற்கும் பணி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ள YSS மற்றும் SRF கிரியாபன் சீடர்கள்,”

YSS மற்றும் SRF சன்னியாசிகளால் மாதந்தோறும் நடத்தப்படும் வி எல் டி வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் வி எல் டி உறுப்பினர்களுக்கு ஊக்கமளிக்கும் மதிநுட்ப மற்றும் நடைமுறை ஆலோசனைகளை வழங்குகின்றன. இந்த நிகழ்வுகள் உறுப்பினர்கள் தங்களின் சங்கல்பங்கள் நிறைவேறிட உதவுவதற்கும், பரமஹம்ஸரின் போதனை கோட்பாடுகளை தங்கள் உணர்வுநிலையில் ஆழமாக உள்வாங்க உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளில், YSS சன்னியாசிகளால் வழங்கப்பட்ட வி எல் டி ஆன்லைன் வகுப்புகளின் ஒரு பகுதியாக பின்வரும் முக்கிய தலைப்புகளில் உரை வழங்கப்பட்டுள்ளது:

  • ஹேஸனிங் அவர் ப்ரோக்ரஸ் டு த டிவைன் த்ரூ எ ஸ்பிரிசுவல் ரொடின்
  • இன்ஸைட் இன்டு த ப்ரேக்டிஸ் ஆஃப் தி ஹாங்-ஸா டெக்னிக்/li>
  • த வேல்யு ஆஃப் பேலன்ஸ்ட் லைஃப் ஃபார் கிர்யாபன்ஸ்
  • ரிஃப்லெக்ஷன்ஸ் ஆன் ஸ்ரீ தயா மாதா’ஸ் மோட்டோ: லவ், சர்வ், கரேஜ், ஃபெய்த்

YSS சன்னியாசிகள் வழங்கிய இந்த வகுப்புகளைத் தவறவிட்ட வி எல் டி உறுப்பினர்கள் அல்லது அவற்றை மீண்டும் மறுஆய்வு செய்ய விரும்புவோர், YSS வி எல் டி இணையதளத்தின் பொருளடக்கப் பிரிவில் இந்த வீடியோக்களைப் பார்க்கலாம். வி எல் டி உறுப்பினர்கள் தங்கள் பக்தர் இணைய தள உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவதன் மூலம் இதை அணுகலாம்.

கூடுதலாக, YSS வி எல் டி உறுப்பினர்கள் SRF சன்னியாசிகளின் பின்வரும் ஆன்லைன் வி எல் டி வகுப்புகள் மற்றும் பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்துள்ளனர்:

  • டிஸைபல்ஷிப்: எ லைஃப் ஆஃப் டிவைன் பர்பஸ்
  • த பர்பஸ் ஆஃப் த ஸ்பிரிசுவல் ப்ளெட்ஜ்
  • இன்ட்ராஸ்பெக்ஷன்: கீ டு செல்ஃப்-மாஸ்டரி
  • டீபனிங் யுவர் லைஃப் அஸ் எ டிஸைபல்
  • பி ஆன் ஃபைர் ஃபார் காட்
  • த ரிலேஷன்ஷிப் பிட்வின் குரு அன்ட் டிஸைபல்
  • கீபிங் அவர் ஸ்பிரிசுவல் ஸ்ட்ரைவிங் ஃப்ரெஷ் அண்ட் எவர் நியூ

SRF சன்னியாசிகளின் வகுப்புகள் SRF வி எல் டி பொருளடக்க தளத்தில் வெளியிடப்படுகின்றன. YSS வி எல் டி இணையதளத்தின் பொருளடக்க பிரிவு வழியாக அவற்றை YSS வி எல் டி உறுப்பினர்கள் அணுகலாம்.

உலகின் எதிரெதிர் பக்கங்களில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும் YSS மற்றும் SRF சன்னியாசிகளின் கூட்டு சத்சங்கங்கள் வி எல் டி. வகுப்புகளின் தனித்துவமான அம்சமாகும். உலகெங்கிலும் உள்ள கிரியாபன் சகோதர சகோதரிகளிடையே ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிப்பதற்கு அவை உதவியுள்ளன.

இந்த சத்சங்கங்களின் தலைப்புகள்:

  • ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்: எ காட்-ஆர்டைன்ட் குரு ஃபார் ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்
  • ஆன்ஸர்ஸ் டு கொஸ்டின்ஸ் ஃப்ரம் வி எல் டி மெம்பர்ஸ்
  • ஃபுல்ஃபில்லிங் யுவர் டிவைன் பர்பஸ்

சன்னியாசிகள் தங்கள் நுண்ணறிவுகளை வழங்கிய அந்த சத்சங்க அனுபவமானது, ஆன்மீக உத்வேகத்தை தாராளமாக என்னுடன் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் உள்ள விவேகமிக்க பெரியவர்களின் ஆறுதலளிக்கும் முன்னிலையில் இருப்பதைப் போல உணர வைத்தது.

—ஆர்.எம்., புனே

நிகழ்ச்சியில் எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்புமிக்க பல நடைமுறை ரத்தினங்கள் இருந்தன. தங்கள் சொந்த முயற்சிகளில் ஒத்த தடைகளைக் கடந்த சன்னியாசிகளின் நுண்ணறிவுகள் அவை. இந்த பாதையில் மூத்த மற்றும் புதிய சீடர்கள், இரு தரப்பினருக்குமே பயனுள்ள குறிப்புகள் இருந்தன.

—யு. வி., டெல்லி

வி எல் டி உறுப்பினர் தோழமை நிகழ்வுகள்

YSS வி எல் டி உறுப்பினர்கள் மார்ச், ஜூலை மற்றும் செப்டம்பர் 2022 இல் வி எல் டி உறுப்பினர் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட மூன்று ஆன்லைன் தோழமை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

2022 மார்ச் மாதத்தில் நடைபெற்ற YSS வி எல் டி உறுப்பினர் தோழமை நிகழ்ச்சியில் ஒரு சன்னியாசிகள் சத்சங்கமும், YSS மற்றும் SRF-இலிருந்து நான்கு நீண்டகால வி எல் டி உறுப்பினர்கள் கொண்ட குழுவால் அவர்களின் பயிற்சிகள் மற்றும் சேவையில் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும் இருந்தது. இதில் ஒரு இடைவேளை காலமும் இருந்தது, அப்போது இந்தியா முழுவதிலுமிருந்து YSS வி எல் டி உறுப்பினர்கள் ஜூம் பிரேக்அவுட் அறைகளில் இணைந்து, சன்னியாசிகளின் செய்திகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் குறித்து ஆராய்ந்தனர்.

குழு உறுப்பினர்கள் பகிர்ந்த தனிப்பட்ட கதைகளைக் கேட்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பக்தர்களிடமிருந்து கேட்கும் அரிய அனுபவம் இது; குருதேவரின் அழகிய குடும்பத்தின் அற்புதமான எடுத்துக்காட்டுகள் அவர்கள். என்னைப் பொறுத்தவரை சிறப்பம்சங்கள்: ஸ்வாமிஜியின் உரை, குழு விவாதம், பிரேக்அவுட் அறைகள்! சுருக்கமாக, நிகழ்வு பற்றிய அனைத்தும்!

—தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஒருவரிடமிருந்து

ஜூலை மற்றும் செப்டம்பர் 2022 தோழமை நிகழ்ச்சிகள் ” வி எல் டி உறுதிமொழிப்படி வாழ்தல்” என்ற தலைப்பில் கவனம் செலுத்தின. இந்நிகழ்ச்சியில் வி எல் டி வகுப்புகளின் வீடியோ கிளிப்புகள் மற்றும் அனைத்து வி எல் டி உறுப்பினர்களும் செய்து கொண்ட சங்கல்பத்தை பற்றி சிந்திக்க ஏதுவாக கையேட்டின் ஆயத்த வாசிப்பை வீட்டுப்பாடமாக படித்தல் ஆகியவை இருந்தது. இந்த உறுதிமொழியைப் பற்றிய மௌன சிந்தனையைத் தொடர்ந்து, ஒரு வசதியான பிரேக்அவுட் அறை நடைபெற்றது. அதில் ஒவ்வொருவரும் தங்கள் புரிதலையும், அதை அவர்கள் எவ்வாறு நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

பல பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்வுகள் குறித்து ஆழமான உத்வேகம் தரும் மற்றும் நெகிழ்ச்சி மிகுந்த கருத்துகளையும், அவதானிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒரு பக்தர் வி எல் டி-இல் சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், “இவை அவரது வாழ்க்கையின் சிறந்த ஆண்டுகள்” என்றும் கூறினார். மற்றொருவர் கூறினார்: “குருதேவரின் பாதையில் அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வரும் சக பக்தர்களின் கருத்துக்கள் உத்வேகம் அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளன. அவை என் ஆற்றல்களை மீண்டும் ஒருமுகப்படுத்த உதவுகின்றன, மேலும் குருதேவர் ஏன் “ஆன்மீக சகவாசத்தை” வலியுறுத்தினார் என்பதற்கான புதிய கண்ணோட்டத்தையும் எனக்கு வழங்குகின்றன.

நொய்டாவில் வி எல் டி ஏகாந்த வாச நிகழ்ச்சி

நொய்டாவில் வி எல் டி ஏகாந்த வாச நிகழ்ச்சியின் போது வகுப்பை வழிநடத்தும் சுவாமி ஸ்மாரணானந்தா

சீடர்களின் தன்னார்வ குழு (வி எல் டி) உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக ஒரு சிறப்பு வார இறுதி ஏகாந்த வாச நிகழ்ச்சி YSS நொய்டா ஆசிரமத்தில் நேரில் நடத்தப்பட்டது. இது ஏப்ரல் 14 முதல் 16 வரை YSS தக்ஷினேஸ்வர் ஆசிரமம், இகத்புரி, புனே, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஏகாந்த வாச மையங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த ஏகாந்த வாச நிகழ்ச்சியில் சன்னியாசிகள் வழி நடத்திய தியானங்கள் மற்றும் “ த ரோல் ஆஃப் சேவா இன் அவர் சாதனா”. “ மேகிங் அவர் மெடிடேஷன்ஸ் டீபர் அண்ட் ஸ்வீட்டர்” என்ற தலைப்புகளில் சன்னியாசிகள் நடத்திய சத்சங்கங்கள் இடம்பெற்றன.

YSS நொய்டா ஆசிரமத்தில் வி எல் டி ஏகாந்த வாச நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஒரு மாற்றம் தரும் அனுபவமாக இருந்தது, இது எனக்கு அகப் பாதுகாப்பு மற்றும் அமைதி உணர்வை அளித்தது. சுவாரஸ்யமானதோ இல்லையோ, கடினமானதோ அல்லது சுலபமானதோ, எனது உலகக் கடமைகள் அனைத்திலும், அவற்றின் இயல்பைப் பொருட்படுத்தாமல், அவற்றில் ஒரு புதிய உற்சாகத்தை நான் கண்டேன். இந்த அனுபவம் எனது அணுகுமுறையை மாற்றி, சேவை மனப்பான்மையுடன் எனது வேலையை அணுக வழிகாட்டியது. மேலும், எனது தியானங்கள் மிகவும் வழக்கமானதாகவும், ஆழமாகவும், இனிமையாகவும் மாறிவிட்டன.

— எம்.எம்., புவனேஸ்வர்

நொய்டாவில் நடைபெற்ற இந்த ஏகாந்த வாச நிகழ்ச்சியின் மற்றொரு அம்சம் ஸ்வாமி ஸ்மரணானந்தா மற்றும் ஸ்வாமி அத்யானந்தா வழி நடத்திய குழு கலந்துரையாடலாகும். சன்னியாசிகள் வி எல் டி மற்றும் பயிற்சி பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர், பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் ஆகிய பத்து வி எல் டி. உறுப்பினர்கள், தங்கள் சொந்த கண்ணோட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தங்கள் விவரிப்புகளை நிறைவு செய்தனர்.

சங்க நிகழ்விடங்களில் வி எல் டி. தகவல் பூத் மற்றும் தகவல் டெஸ்க்

YSS-வி எல் டி-இன்ஃபர்மேஷன்-டெஸ்க்- YSS- சங்கம்-2023-யில் -ஹைதராபாத்-யில்- பிப்ரவரி (1)
பிப்ரவரி-இல் ஹைதராபாத் YSS சங்கம் 2023-இல் வி எல் டி தகவல் டெஸ்க்

வி எல் டி உறுப்பினர்கள், வி எல் டி பற்றிய தகவல்களை மேலும் அறிய ஆர்வமுள்ள YSS பக்தர்கள் மற்றும் கிரியாபன்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற YSS சங்கம் 2023 நிகழ்ச்சியின் போது, பல்வேறு மையங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த வி எல் டி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, வி எல் டி-யில் உறுப்பினராக இருப்பதன் முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டாக சிந்தனை செய்தனர். ஆர்வமுள்ள கிரியாபன் பக்தர்களுடன் இந்த தகவலைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் ஒரு பூத்-ஐயும் அமைத்தனர். சுமார் 500 குருதேவரின் ஆன்மீக சகோதர சகோதரிகள் இந்த பூத்துக்கு வருகை தந்தனர்.

அக்டோபர் 2023-இல் நொய்டா ஆசிரமத்தில் வி எல் டி. தகவல் டெஸ்க்
ராஞ்சி நவம்பர் சங்கத்தின் போது வி எல் டி. தகவல் டெஸ்க்

சீடர்களின் தன்னார்வ குழு, அதன் மூன்றாம் ஆண்டில் நுழையும் போது, பல YSS பக்தர்களின் வாழ்க்கையில் அது கொணர்ந்த அருளாசிகளுக்காக நாங்கள் பயபக்தியோடு நன்றியுடன் இருக்கிறோம். தற்போதைய வி எல் டி உறுப்பினர்களின் வாழ்க்கையிலும், எதிர்காலத்தில் சீடத்துவம் மற்றும் தெய்வீக சேவைக்கான இந்த வாய்ப்பை நோக்கி ஈர்க்கப்படுபவர்களின் வாழ்க்கையிலும் பரமஹம்ஸரின் இந்த இல்லற சீடர்களின் வரிசைக்கான தொலைநோக்கு பார்வை எவ்வாறு தொடர்ந்து மலர்ந்து வெளிப்படும் என்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மேலும் அறிய

தன்னார்வ சீடர்களின் குழு பற்றி மேலும் அறிய, YSS வி எல் டி இணையதளத்தைப் பார்வையிடவும். அதில் YSS/SRF இன் தலைவரும் ஆன்மீகத் முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி வி எல் டி-இன் நோக்கத்தை விளக்குகின்ற உரையின் ஒரு சிறிய வீடியோ கிளிப் நீங்கள் காணக்கூடிய பயனுள்ள விஷயங்களில் ஒன்றாகும்.

உங்களிடம் YSS பக்தர் இணைய தள கணக்கு இருந்தால், அதில் உள் நுழைந்து வி எல் டி இன் வரலாறு மற்றும் நோக்கம் மற்றும் வி எல் டி உறுதிமொழி ஆகியவற்றின் விரிவான விளக்கத்துடன் கூடிய தன்னார்வ சீடர்களின் கையேட்டைக் கண்டறியலாம். YSS/SRF கிரியாபன்கள் SRF/YSS ஆப் மூலமும், கையேட்டை அணுகலாம்.

para-ornament

இதைப் பகிர