சன்னியாசிகள் சுற்றுப் பயணம், சிம்லா

மூன்று நாள் நிகழ்ச்சி

)

வெள்ளி, மே 12, 2023 — ஞாயிறு, மே 14, 2023

(கிரியா தீட்சை

Sunday, May 14, 2023)

கூடுதல் தகவல்

நிகழ்வு இடம்:

யோகதா சத்சங்க ஆனந்த ஷிகர் சாதனாலயா – சிம்லா
பனோதி பஹல் ரோட், வில்.பந்தி,
சிம்லா – 171005, இமாச்சலப் பிரதேசம்

தொடர்பு விபரங்கள்:

தொலைபேசி:

0177-2650310, 9418638808
9459051087

மின்னஞ்சல்:

முகவரி:

யோகதா சத்சங்க தியான கேந்திரா — சிம்லா
தி ரிட்ஜ், சிம்லா – 171001, இமாச்சலப் பிரதேசம்

நிகழ்வு பற்றி

இந்த பிரபஞ்சத்தின் பாதுகாவலர் உங்கள் இதயக் கதவுகளைத் தட்டுகிறார், மௌனத்தின் வாயில்கள் வழியாக நுழைந்து உங்களுக்குள் மகிழ்ச்சியின் தோட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

— ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒவ்வொரு ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்குச் சென்று பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம-அனுபூதி போதனைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறார்கள். பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை அறிந்து கொள்ள விரும்பும் புதியவர்களுக்கு இந்த சன்னியாச சுற்றுப்பயணங்கள் ஒரு அருளப்பெற்ற வாய்ப்பை வழங்குகின்றன, மேலும் YSS பாட மாணவர்களுக்கு YSS தியான உத்திகளில் ஆழமான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.

இந்த நிகழ்வுகளின் போது, குருதேவரின் போதனைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலையும் நீங்கள் பெறலாம்.

ஒவ்வொரு ஆன்மீக நிகழ்வும் ஒருவரின் பயிற்சிக்கு ஒரு புதிய தூண்டுதலைத் தருவதால், இந்த நிகழ்வுகளில் பங்கேற்பு உங்கள் ஆன்மீக உற்சாகத்தை புதுப்பிக்கும், மேலும் மற்ற தீவிர ஆர்வமுள்ள சாதகர்கள் கூட்டத்தில் இருப்பதன் மூலமும், அவர்களுடன் இணைந்து தியானம் செய்வதன் மூலமும், கிடைக்கப் பெறும் ஆனந்தம் மற்றும் அருளாசிகளையும் அனுபவிக்க உதவும்.

நிகழ்ச்சி அட்டவணை இடத்திற்கு இடம் மாறுபடலாம் என்றாலும், ஒரு மாதிரிச் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அட்டவணை - நாள் 1

காலை 09:30 மணி முதல் 10:30 மணி வரை

துவக்க சத்சங்கம்

காலை, 10:30 மணி முதல் மதியம், 12:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மதியம் 02:30 மணி முதல் 03:30 மணி வரை

ஹாங்-ஸா உத்தி மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மாலை 04:30 மணி முதல் 06:15 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை

ஆன்மீக சொற்பொழிவு

இரவு 07:30 மணி முதல் 08:30 மணி வரை

குருதேவர் பற்றிய வீடியோ காட்சி

அட்டவணை - இரண்டாம் நாள்

காலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:45 மணி முதல் 10:45 மணி வரை

ஆன்மீக சொற்பொழிவு

காலை, 11:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை

ஓம் உத்தி மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மதியம் 02:30 மணி முதல் 04:00 மணி வரை

கேள்வி-பதில் அமர்வு

மாலை 04:30 மணி முதல் 06:15 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

மாலை 06:30 மணி முதல் 07:30 மணி வரை

ஆன்மீக சொற்பொழிவு

அட்டவணை - நாள் III

காலை 08:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

கிரியா யோக தீட்சை

மதியம் 02:30 மணி முதல் 03:30 மணி வரை

நிறைவு சத்சங்கம் மற்றும் பிரசாதம்

மாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை

கிரியா யோகம் மறுஆய்வு மற்றும் சரிபார்ப்பு
(YSS கிரியாபன்கள் மட்டும்)

கிரியா யோக தீட்சை பெறுதல்:

YSS சன்னியாசிகள் கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியை நடத்தி, தகுதிவாய்ந்த பக்தர்களுக்கு தீட்சை வழங்குவார்கள். தகுதி மற்றும் பங்கேற்பு பற்றிய விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

கிரியா யோகம் பெறுவதற்கான தகுதிகள்:

  • கிரியா யோக தீட்சை பெறுவதற்கான தகுதி YSS பாடங்களுடன் இணைக்கப்பட்ட கேள்வித்தாளுக்கு திருப்திகரமான பதில்களை சமர்ப்பிப்பதைப் பொறுத்தது.
  • வினாத்தாளில் நீங்கள் கவனித்தறிந்தது போல், கிரியா யோகம் பெற தகுதியுடையவராக இருக்க, பக்தர் முதல் மூன்று அடிப்படை யோகதா உத்திகளை பல மாதங்களாக தவறாமல் பயிற்சி செய்திருக்க வேண்டும்.
  • YSS குரு பரம்பரை மற்றும் யோகதா சத்சங்க பாதையில் பக்தி மற்றும் விசுவாசத்தின் கையொப்பமிடப்பட்ட கிரியா யோக உறுதிமொழியையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

  • நீங்கள் கிரியா யோகத்திற்கு விண்ணப்பிக்க விரும்பி, ஆனால் கேள்வித்தாளுக்கு உங்கள் பதில்களை இன்னும் அனுப்பவில்லை என்றால், அவற்றை நீங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள அந்த கேந்திரா / மண்டலியில் சமர்ப்பிக்கலாம், அந்த நகரத்திற்கு வந்தவுடன் சன்னியாசிகளால் அவை சரிபார்க்கப்படும்.
  • நீங்கள் ஏற்கனவே இவற்றை ராஞ்சிக்கு அனுப்பி, கிரியா யோகம் பெற எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற்றிருந்தால், கேந்திரா/மண்டலியில் பதிவு செய்ய அந்த ஒப்புதல் கடிதத்தை எடுத்துச் செல்லுங்கள்.

 

கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்பு:

கிரியா யோக பாடங்களைப் பெற்றவர்கள், ஆனால் தீட்சை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்காதவர்கள் உட்பட, நிகழ்ச்சியில் கிரியா யோக தீட்சை பெற விரும்பும் அனைவரும், மற்றும், விழாவில் கலந்து கொள்ள விரும்பும் முறைசார்ந்த தீட்சை பெற்ற கிரியாபன்களும் குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக சம்பந்தப்பட்ட மையத்தில் பதிவு செய்து, நிகழ்ச்சிக்குரிய அனுமதி அட்டையை கொண்டு வர வேண்டும்.

கிரியா யோக தீட்சைக்கு பதிவு செய்து கொள்ளும் போதும், மற்றும் மறுஆய்வில் கலந்து கொள்ளும் போதும் உங்கள் கிரியாபன் அடையாள அட்டையைக் கொண்டு வந்து காண்பிக்கவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர