மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ் நிகழ்ச்சி, துவாரஹத்

இரண்டு நாள் நிகழ்வு

)

திங்கள், ஜூலை 24, 2023 — செவ்வாய், ஜூலை 25, 2023

கூடுதல் தகவல்

நிகழ்வு இடம்:

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — துவாரஹத்
துவாரஹத் – 263653, அல்மோரா மாவட்டம், உத்தரகண்ட்

தொடர்பு விபரங்கள்:

தொலைபேசி:

9756082167, 9411708541

மின்னஞ்சல்:

முகவரி:

நிகழ்வு நடைபெறும் அதே இடம்

நிகழ்வு பற்றி

பாபாஜியின் பெயரை பக்தியுடன் யார் எப்பொழுது உச்சரித்தாலும் அந்த பக்தர் அக்கணமே அவருடைய ஆன்மீக ஆசியை ஈர்க்கிறார்.

— லாஹிரி மகாசயர்

இழந்த விஞ்ஞான முறை தியான உத்தியான கிரியா யோகத்தை இந்த யுகத்தில் மீட்டெடுத்தவர் மகாவதார பாபாஜி…. 1920 ஆம் ஆண்டில் பரமஹம்ஸ யோகானந்தர் அமெரிக்கா புறப்படுவதற்கு சற்று முன்பு, மகாவதார் பாபாஜி கல்கத்தாவில் உள்ள யோகானந்தரின் வீட்டிற்கு வந்தார், அங்கு இளம் துறவி தான் மேற்கொள்ளவிருக்கும் பணி குறித்து தெய்வீக உத்தரவாதத்திற்காக ஆழந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். பாபாஜி அவரிடம், “உன் குருவின் கட்டளையைப் பின்பற்றி அமெரிக்கா செல்வாய், பயப்படாதே, நீ பாதுகாக்கப்படுவாய். மேலை நாடுகளில் கிரியா யோக முறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தருடன் மகாவதார பாபாஜியின் இந்த சந்திப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 அன்று மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ் என்று நினைவுகூரப்படுகிறது.

இதையொட்டி, YSS துவாரஹத் ஆசிரமத்தில், ஜூலை, 24, 25 ஆகிய தேதிகளில், இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூலை 25 அன்று பாபாஜியின் குகைக்கு யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டு, ஆசிரமத்திலிருந்து ஊர்வலம் தொடங்கியது. குகையில் தியானம், பஜனை அமர்வு, உணவு விநியோகம் ஆகியவை நடைபெற்றன.

ஆசிரமத்தில் சிறப்பு மாலை தியானம் நடைபெற்றது.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர