மஹாவதார் பாபாஜி ஸ்மிருதி திவஸ் கொண்டாட்டம், துவாரஹாட்

இரண்டு நாள் நிகழ்வு

)

ஜூலை 24-25, 2022

கூடுதல் தகவல்

நிகழ்வு இடம்:

யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — துவாரஹாட்
துவாரஹாட் – 263653, அல்மோரா மாவட்டம், உத்தராகண்

தொடர்பு விபரங்கள்:

தொலைபேசி:

(05966) 244271, 244671
9756082167, 9411708541

மின்னஞ்சல்:

முகவரி:

நிகழ்வுகளுக்கான அதே இடத்தில்

நிகழ்வு பற்றி

பாபாஜியின் பெயரை பயபக்தியுடன் எவரேனும் உச்சரிக்கும் போதெல்லாம், அந்த பக்தன் உடனடி ஆன்மீக அருளாசிகளை ஈர்க்கிறான்.

— லாஹிரி மகாசயர்

இழந்த கிரியா யோக விஞ்ஞான தியான உத்தியை இக்காலத்தில் புத்துயிரூட்டியது மகாவதார் பாபாஜிதான்…. பரமஹம்ஸ யோகானந்தர் 1920ல் அமெரிக்கா புறப்படுவதற்குச் சற்று முன்பு, மகாவதார் பாபாஜி கல்கத்தாவில் உள்ள யோகானந்தரின் இல்லத்திற்கு வந்தார். அங்கு அந்த இளம் துறவி, தான் மேற்கொள்ளவிருந்த பணியைப் பற்றிய தெய்வீக உத்தரவாதத்திற்காக ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். பாபாஜி அவரிடம்,” உன்னுடைய குருவின் கட்டளைப்படி நீ அமெரிக்கா செல்வாய், பயப்படாதே, நீ பாதுகாக்கப்படுவாய். மேலை நாடுகளில் கிரியா யோக முறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்..”

மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்- ஐ முன்னிட்டு, ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் யோகதா சத்சங்க சகா ஆசிரமம் – துவாரஹட்டில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூலை 24 அன்று, YSS சன்னியாசிகள் YSS தியான உத்திகளின் மறுஆய்வு வகுப்புகளை நடத்தினர். அடுத்த நாள், ஜூலை 25, மகாவதார பாபாஜி குகைக்கு ஒரு யாத்திரை (ஊர்வலம்) ஏற்பாடு செய்யப்பட்டு, ஆசிரமத்திலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மகாவதார பாபாஜி குகையில் ஒரு தியானம், பஜனை அமர்வு மற்றும் அன்னதானம் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆசிரமத்தில் சிறப்பு மாலை தியானம் நடத்தப்பட்டது.

ஒய் எஸ் எஸ் துவாரஹாட் ஆசிரமத்தில் உள்ள பிற நிகழ்ச்சிகளைப் பற்றி மேலும் அறிய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர