உங்களுடைய உண்மையான சுயத்தை விழித்தெழச் செய்ய அமரத்துவச் சிந்தனைகளைப் பயன்படுத்துவது எப்படி

Paramahansa Yogananda: Author of Autobiography of a Yogi.

பரமஹம்ஸ யோகானந்தரின் ஞானப் பரம்பரையிலிருந்து
பரமஹம்ஸ யோகானந்தர் எழுதினார்:

“நீங்கள் இறைவனின் சிந்தனையுடன் சுருதி சேர்ந்து மாயை எனும் ஆணியைப் பேருண்மையின் சரியான சிந்தனைகள் எனும் சுத்தியலால் அடித்தால், உங்களால் மாயையை வெற்றிகொள்ள முடியும்.

எல்லாத் தார்மீகச் சிந்தனைகளையும் ஒரு அமரத்துவச் சிந்தனையால் மாற்றீடு செய்வதன் மூலம் அழித்து விடுங்கள்.”

பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட இத்தொகுப்பில் உள்ள சாய்வெழுத்துப் பகுதிகள் சங்கல்பங்களும் ஆன்ம உணர்வுகளும் ஆகும்—“அமரத்துவச் சிந்தனைகள்”—இவற்றை உங்களுக்குள்ளும் எல்லாப் படைப்பிலும் ஊடுறுவியுள்ள நிலைபேறான, பேரின்பமய மகா மெய்ம்மை பற்றிய ஒரு பெரிய விழிப்புணர்விற்காக உங்களால் பயன்படுத்த முடியும்.

இரவும் பகலும், நீங்கள் மெய்யாகவே யார் என்பதை சங்கல்பம் செய்யுங்கள்

இந்த உண்மையை உங்களுக்கே இடைவிடாது திருப்பிக் கூறுங்கள்:

“நான் மாற்றமில்லாதவன், நான் முடிவற்றவன். நான் உடையும் எலும்புகளுடன், அழியும் ஓர் உடலுடன் கூடிய ஒரு சிறிய இறக்கும் மனிதன் அல்ல. நான் மரணமற்றவன், மாற்றமில்லா முடிவற்றவன்.”

குடிபோதையில் ஓர் இளவரசன் குடிசைப் பகுதிக்குள் சென்று, தன் உண்மையான அடையாளத்தை முழுவதும் மறந்து, “நான் எத்துணை ஏழை” என்று புலம்பத் தொடங்கினால், அவனுடைய நண்பர்கள் அவனைப் பார்த்துச் சிரித்து, “விழித்துக்கொள் மற்றும் நீ ஓர் இளவரசன் என்பதை நினைவுகூர்” என்று கூறுவர். அதுபோலவே நீங்கள் ஒரு போராடும் மற்றும் துயர்மிகு ஆதரவற்ற மாழும் மனிதன் என்று எண்ணியவாறு ஒரு பிரமை பிடித்த நிலையில் இருந்து வருகிறீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் அமைதியாக அமர்ந்து, ஆழ்ந்த திடநம்பிக்கையுடன் சங்கல்பம் செய்யுங்கள்:
பிறப்பில்லை, இறப்பில்லை, சாதியில்லை எனக்கு; தந்தையோ, தாயோ எவருமில்லை எனக்கு. தூய ஆன்மா, நான் அவனே. நானே முடிவில்லா மகிழ்ச்சி.”

இச்சிந்தனைகளை நீங்கள் மீண்டும் மீண்டும், இரவும் பகலும், கூறினால், நீங்கள் இறுதியாக மெய்யாகவே நீங்கள் யார் என்று, ஓர் அமரத்துவ ஆன்மா என்று, உணர்ந்தறிவீர்கள்.

உங்களுடைய உண்மையான சுயத்தை மறைக்கும் எல்லா வரம்பிற்குட்பட்ட சிந்தனைகளையும் உரித்தெடுங்கள்

நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியாமல் இருப்பது, உங்களுடைய சொந்த சுயத்தை நீங்கள் அறியாமல் இருப்பது வேடிக்கையானது, இல்லையா? உங்களுடைய உடலுக்கும் நிலையற்ற பாத்திரங்களுக்கும் பயன்படும் அத்துணை வெவ்வேறு பட்டங்களால் உங்களை நீங்கள் வரையறுக்கிறீர்கள்…. நீங்கள் இந்தப் பட்டங்களை உங்களுடைய ஆன்மாவிலிருந்து உரித்து எடுக்க வேண்டும்.

“நான் என்ணுகிறேன், ஆனால் நான் எண்ணம் அல்ல. நான் உணருகிறேன், ஆனால் நான் உணர்வு அல்ல. நான் மனத்திட்பம் கொள்கிறேன், ஆனால் நான் மனத்திட்பம் அல்ல.”

எது எஞ்சியுள்ளது? நீங்கள் இருப்பதாக அறியும் அந்த நீங்கள்; நீங்கள் இருப்பதாக உணரும் அந்த நீங்கள்—உள்ளுணர்வால், ஆன்மாவின் சொந்த இருப்பை அறியும் ஆன்மாவின் நிபந்தனைக்கு ஆட்படாத அறிதலால், கொடுக்கப்பட்ட ஆதாரத்தின் வாயிலாக.

Stars on the Sky.நாள் முழுதூடும், நீங்கள் உடலின் வாயிலாக இடைவிடாது செயலாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றும் அதனால் நீங்கள் அதனுடன் அடையாளம் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒவ்வோர் இரவும் இறைவன் உங்களை அந்தச் சிறைப்படுத்தும் மாயையிலிருந்து விலக்குகிறான். நேற்றிரவு ஆழ்ந்த கனவற்ற உறக்கத்தில், நீங்கள் ஒரு பெண்ணா அல்லது ஒரு ஆணா அல்லது அமெரிக்கரா அல்லது இந்தியரா அல்லது செல்வந்தரா அல்லது ஏழையா? இல்லை. நீங்கள் தூய பரம்பொருளாக இருந்தீர்கள்…. ஆழ்ந்த உறக்கம் எனும் அரை-உயர் உணர்வு விடுதலையில் இறைவன் உங்களுடைய எல்லா நிலையற்ற பட்டங்களையும் எடுத்துச் சென்று நீங்கள் உடலிலிருந்தும் அதன் வரம்புகளிலிருந்தும் வேறுபட்டவர்—வான்வெளியில் ஓய்வெடுக்கும் தூய உணர்வுநிலை—என்று உங்களை உணர வைக்கிறான். அந்தப் பரந்து விரிந்த தன்மையே உங்களுடைய மெய்யான பெரும் சுயம்.

நீங்கள் விழித்தெழும் போது ஒவ்வொரு காலையிலும் இந்த உண்மையை உங்களுக்கு நினைவூட்டிக் கொள்ளுங்கள்:

“நான் என் மெய்யான சுயத்தின் அக உணர்விலிருந்து இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறேன். நான் உடலல்ல. நான் கட்புலனாகாதவன். நான் பேரானந்தம். நான் பேரொளி. நான் ஞானம். நான் பேரன்பு. நான் கனவு-உடலில் உறைகிறேன், அதன் வாயிலாக நான் இந்த உலக வாழ்க்கையைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்; ஆனால் நான் என்றென்றும் நிலைபேறான பரம்பொருள்.”

தோல்விக்காலமே வெற்றியின் விதைகளை விதைப்பதற்கான மிகச்சிறந்த நேரம். சூழ்நிலைகள் எனும் சம்மட்டி உங்களைக் காயப்படுத்தக் கூடும், ஆனால் நீங்கள் தலைநிமிர்ந்திருங்கள். நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்திருந்தாலும் சரி, எப்போதும் மேலும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள். இனிமேல் என்னால் போராட முடியாது என்று நீங்கள் எண்ணும் போதோ, அல்லது நீங்கள் ஏற்கனவே உங்களால் முடிந்த மிகச்சிறந்ததைச் செய்து விட்டீர்கள் என்று எண்ணும் போதோ, அல்லது உங்களுடைய முயற்சிகள் வெற்றியால் மகுடம் சூட்டப்படும் வரையோ, போராடுங்கள்.

வெற்றியின் உளவியலைப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். “தோல்வியைப் பற்றிப் பேசவே பேசாதீர்கள்,” என்று சிலர் அறிவுரை கூறுகின்றனர். ஆனால் அது மட்டுமே உதவாது. முதலில் தோல்வியையும் அதன் காரணங்களையும் ஆய்வு செய்து அனுபவத்திலிருந்து பயன்பெறுங்கள், அதன்பின் அதைப் பற்றிய எண்ணத்தை அகற்றி விடுங்கள். அவர் பலமுறை தோல்வியடைந்தாலும் கூட, தொடர்ந்து கடுமுயற்சி செய்யும், அகத்தே தோல்வியடையாத மனிதர் உண்மையில் ஒரு வெற்றிகரமான நபர் ஆவார்.

வாழ்க்கை இருண்டிருக்கலாம், துன்பங்கள் வரலாம், வாய்ப்புகள் உபயோகப் படுத்தப்படாமல் கைநழுவிப் போகலாம், ஆனால், “எல்லாம் முடிந்துவிட்டது. இறைவன் என்னைக் கைவிட்டு விட்டான்,” என்று ஒருபோதும் உங்கள் அகத்தே கூறாதீர்கள். அந்த மாதிரியான மனிதருக்காக யாரால் எதையேனும் செய்ய முடியும்? உங்கள் குடும்பம் உங்களைக் கைவிடலாம்; நற்பேறு உங்களைப் புறக்கணிப்பது போல் தோன்றலாம்; மனிதனின் மற்றும் இயற்கையின் எல்லா ஆற்றல்களும் உங்களை எதிர்த்து அணிவகுத்து நிற்கலாம்; ஆனால் உங்கள் அகத்தேயுள்ள தெய்வீகச் செயல்முனைப்பின் பண்பின் மூலம், உங்கள் கடந்தகாலத் தவறான செயற்பாடுகளினால் உருவாக்கப்பட்ட ஊழ்வினையின் ஒவ்வொரு படையெடுப்பையும் உங்களால் முறியடித்து, சொர்க்கத்தினுள் வெற்றிகரமாக முன்னேறிச் செல்ல முடியும்.

இறைவனிடமிருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக உங்கள் மெய்யான சுயத்தை அறிந்து கொள்ளுங்கள்

Nebula

ஆன்ம-அனுபூதியே மிக உயர்ந்த ஞானம்—மெய்யான சுயத்தை, ஆன்மாவை, நிலைபேறாக இறைவனிடமிருந்து பிரிக்க முடியாததாக அறிதல்…. ஒரே பேரிருப்பு எல்லா உயிர்களின் அக ஆழ மையத்திலும் இருக்கிறது. “அர்ஜுனா, எல்லா உயிர்களின் உள்ளத்து உறையும் ஆன்மா நானே. உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே.” (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா X:20)

இந்த உடலின் அகத்தே அமரத்துவ ஆன்மா, எது எல்லாவற்றையும் தாங்குகிறதோ அதன் ஒரு பொறி, இருக்கிறது என்று எல்லாப் பெரிய ஆசான்களும் அறிவிக்கின்றனர். எவனொருவன் தன் ஆன்மாவை அறிகிறானோ, அவன் இந்த உண்மையை அறிகிறான்:

“நான் வரையறைக்குட்பட்ட அனைத்துக்கும் அப்பால் இருக்கிறேன்….நானே நட்சத்திரங்கள், நானே அலைகள், நானே எல்லாவற்றின் பேருயிர்; நானே எல்லா இதயங்களுக்குள்ளும் இருக்கும் சிரிப்பு, நானே மலர்களின் முகத்தின் மீதும் ஒவ்வோர் ஆன்மாவிலும் உள்ள புன்னகை. நானே எல்லாப் படைப்பையும் தாங்கும் ஞானமும் சக்தியும்.”

உங்கள் தெய்வீக இயல்பை சிந்தியுங்கள், சங்கல்பம் செய்யுங்கள், உணர்ந்தறியுங்கள்

நாம் பலவீனமான மனிதர்கள் என்ற பல யுகங்களின் தவறான எண்ணத்தை அழியுங்கள். நாம் இறைவனின் குழந்தைகள் என்று நாள்தோறும் எண்ண, தியானம் செய்ய, சங்கல்பம் செய்ய, நம்ப மற்றும் உணர்ந்தறிய வேண்டும்.

“அது ஓர் எண்ணம் மட்டுமே,” என்று நீங்கள் கூறலாம். நல்லது, எண்ணம் என்றால் என்ன? நீங்கள் பார்க்கும் அனைத்தும் ஓர் எண்ணத்தின் விளைவே…. கட்புலனாகா எண்ணம் எல்லா விஷயங்களுக்கும் அதன் மெய்ம்மையைக் கொடுக்கிறது. ஆகவே உங்கள் எண்ணச் செயல்முறைகளை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால், உங்களால் எதையும் கட்புலனாகும்படிச் செய்ய முடியும்; உங்கள் ஒருமுகப்பாட்டின் சக்தியால் அதை உங்களால் உருப்பெறச் செய்ய முடியும்….

அறிவியல்பூர்வமான குருவினால் வழங்கப்பட்ட தியான உத்திகளின் மூலம், உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி உங்கள் மனத்தை அகமுகமாக்கக் கற்றுக்கொண்டவாறு, நீங்கள் படிப்படியாக ஆன்மீகத்தை வளர்ப்பீர்கள்: உங்களுடைய தியானம் ஆழமாகும் மற்றும் உங்கள் கட்புலனாகச் சுயம், அகத்தேயுள்ள இறைவனின் ஆன்ம-பிரதிபிம்பம், உங்களுக்கு மெய்யாகும்.

நீங்கள் அழிக்க விரும்பும் எண்ணங்களை ஆக்கப்பூர்வமான எண்ணங்களால் மாற்றீடு செய்வதன் மூலம் வெளியேற்றுங்கள். இதுவே விண்ணுலகிற்கான திறவுகோல்; அது உங்கள் கையில் இருக்கிறது….

நாம் என்னவாக இருக்கிறோம் என்று எண்ணுகிறோமோ, நாம் அதுவாகவே இருக்கிறோம்….உங்கள் உணர்வுநிலையை அழியும் நிலையிலிருந்து ஒரு தெய்வீக இருப்பின் நிலைக்கு மாற்றுங்கள்.

“நான் முடிவற்றவன், நான் இடமற்றவன்; நான் களைப்பற்றவன்; நான் உடல், எண்ணம், கூற்று ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவன்; எல்லாப் பொருட்களுக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டவன். நான் முடிவற்ற பேரின்பம்.”

மனத்தில் தெய்வீக உண்மையை இடைவிடாது பதியச் செய்யுங்கள்

நோய், முதுமை, மரணம் ஆகிய மனித வரம்புகள் பற்றி உங்கள் மனத்திற்கு எந்த ஆலோசனையையும் கூறுவதைத் தவிருங்கள். மாறாக, மனத்தில் தெய்வீக உண்மையை இடைவிடாது பதியச் செய்யுங்கள்:

“நான் உடலாக ஆகிய எல்லையற்றவன். பரம்பொருளின் ஒரு வெளிப்பாடாக உடல் என்றும்-முழுநிறைவான, என்றும்-இளமையான பரம்பொருள் ஆகும்.”

பலவீனத்தின் அல்லது வயதின் எண்ணங்களால் வரையறக்குட்பட மறுத்துவிடுங்கள். நீங்கள் வயதானவர் என்று யார் சொன்னார்கள்? நீங்கள் வயதானவர் அல்ல. ஆன்மாவாகிய நீங்கள் நிலைபேறாக இளமையுடன் இருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை உங்கள் உணர்வுநிலையின் மீது பதிய வையுங்கள்:

“நானே ஆன்மா, என்றும்-இளமையான பரம்பொருளின் ஒரு பிரதிபலிப்பு. நான் வெற்றியடைய இளமையுடன், இலட்சியத்துடன், சக்தியுடன் துடிப்பாக இருக்கிறேன்.”

Waterfall depicting continuous effort.

மாபெரும் பேரண்டச் சக்தியுடன் உங்களை இசைவித்துக் கொள்ளுங்கள் மற்றும் நீங்கள் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கிறீர்களோ அல்லது வணிக உலகில் மக்களுடன் பழகிக் கொண்டிருக்கிறீர்களோ, எப்போதும் சங்கல்பம் செய்யுங்கள்:

“என்னுள் இருப்பது எல்லையற்ற படைப்புச் சக்தி. நான் ஏதேனும் சாதிக்காமல் கல்லறைக்குச் செல்ல மாட்டேன். நான் ஓர் இறை-மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள உயிரினம். நான் பரம்பொருளின் சக்தி, என் ஆன்மாவின் ஆற்றல்மிக்க பேராதாரம். நான் வணிக உலகில், எண்ண உலகில், ஞான உலகில் வெளிப்பாடுகளை உருவாக்குவேன். நானும் தெய்வத்தந்தையும் ஒன்றே. நான் ஆசைப்படும் எதையும், என் படைப்புத்திறன்வாய்ந்த தெய்வத்தந்தையைப் போலவே, என்னால் உருவாக்க முடியும்.

எஸ் ஆர் எஃப் பாடங்கள் பேரண்டப் பெருவாழ்வுடன் தொடர்பு கொள்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கின்றன…. இறைவனுடைய பேரண்டச் சக்திப் பெருங்கடல். அந்தச் சக்தியை மருந்துகள், உணர்ச்சிவேகம், மற்றும் இன்னபிற செயற்கையான புறத்தூண்டுதல்களின் வாயிலாக அல்லாமல் நேரடியாக அக ஆதாரத்திலிருந்து தரவு செய்வது மிகச்சிறந்த வழிமுறையாகும். அப்போது உங்களால் இவ்வாறு கூற முடியும்:

“ஒரு பிரம்மாண்டமான மின்னோட்டம் சதைக்குக் கீழேயே உள்ளது. நான் அதை மறந்து விட்டேன், ஆனால் இப்போது, ஆன்ம-அனுபூதி எனும் கோடாரியால் தோண்டியதன் மூலம், நான் அந்த உயிராற்றலை மீண்டும் கண்டு பிடித்திருக்கிறேன்…. நான் சதையல்ல. நான் இந்த உடலில் ஊடுறுவியுள்ள தெய்வீக மின்சாரத்தின் மின்னூட்டம்.

உங்கள் ஆன்மா சோதனகளால் தீங்கிழைக்கப்பட முடியாது

நீங்கள் அமரத்துவமானவர் என்பதை அறிவீர்—உலகப் படிப்பினைகளால் நசுக்கப்படக் கூடாது, ஆனால் உங்கள் அமரத்துவத்தைக் கற்று வெளிப்படுத்தி புன்னகைக்க வேண்டும். இவ்வாறு கூறுங்கள்:

“நான் அமரத்துவமானவன்; என் அமரத்துவத்தைக் கற்றுக்கொள்ளவும் அதை மீண்டும் பெறவும் ஓர் அழியும் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். பூமியின் எல்லாத் தூய்மையாக்கும் நெருப்புகளாலும் சவால் விடப்பட்ட போதிலும், நான் ஆன்மா மற்றும் அழிக்கப்பட முடியாதவன். நெருப்பால் என்னை எரிக்க முடியாது; நீரால் என்னை நனைக்க முடியாது; காற்றுகளால் என்னை வாட வைக்க முடியாது; அணுக்களால் என்னைத் தகர்க்க முடியாது; நான் அமரத்துவப் படிப்பினைகளைக் கனவு கண்டு கொண்டிருக்கும் அமரன்—நசுக்கப்படக் கூடாது, ஆனால் மகிழ்விக்கப்பட வேண்டும்.

Tide on ocean representing difficulty in life.

நீங்கள் பல பிறவிகளின் ஊடாக பல பாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் அவை உங்களை மகிழ்விப்பதற்காகக் கொடுக்கப்பட்டவை, உங்களைப் பயமுறுத்த அல்ல. உங்கள் அமரத்துவ ஆன்மாவைத் தொட முடியாது. வாழ்வெனும் திரைப்படத்தில், நீங்கள் அழலாம், நீங்கள் சிரிக்கலாம், நீங்கள் பல பாத்திரங்களில் நடிக்கலாம்; ஆனால் அகமுகமாக நீங்கள் என்றும் கூறுங்கள், “நான் பரம்பொருள்.” அந்த ஞானத்தின் அனுபூதியிலிருந்து பெரிய ஆறுதல் வருகிறது.

“நான் இங்கு பிறப்பு மற்றும் இறப்புகள் எனும் நாடகத்தில் நடிக்க அனுப்பப்பட்ட , ஆனால் எப்போதும் என் மரணமற்ற பெரும் சுயத்தை நினைவில் கொண்டவாறு இருக்கும் இனிய அமரத்துவத்தின் அருளப்பட்ட குழந்தை.

“பரம்பொருள் எனும் பெருங்கடல் என் ஆன்மா எனும் சிறு குமிழியாகி இருக்கிறது. நான் இந்த வாழ்வெனும் குமிழி–பேரண்டப் பேருணர்வுநிலை எனும் பெருங்கடலுடன் ஒன்றாகி இருக்கும் குமிழி. என்னால் ஒருபோதும் இறக்க முடியாது. பிறப்பில் மிதந்தாலும் சரி அல்லது இறப்பில் மறைந்தாலும் சரி, நான் பரம்பொருளினுடைய அமரத்துவத்தின் நெஞ்சகத்தில் பாதுகாக்கப்பட்ட அழிக்கமுடியா உணர்வுநிலை.”

எதைப் பற்றியும் அச்சப்படாதீர்கள், ஏனெனில் நீங்கள் இறைவனின் குழந்தை

தியானத்தில் உங்கள் கண்களை நீங்கள் மூடும்போது, நீங்கள் உங்களுடைய உணர்வுநிலையின் விஸ்தாரத்தைக் காண்கிறீர்கள்—நீங்கள் சாசுவதத்தின் நடுவில் இருப்பதாகக் காண்கிறீர்கள். அங்கே ஒருமுகப்படுங்கள்; காலையிலும் மாலையிலும் வெறுமனே கண்களை மூடி பின்வருமாறு கூற சிறிது நேரத்தை ஒதுக்குங்கள்:

“நான் எல்லையற்றவன்; நான் இறைவனின் குழந்தை. அலை என்பது பெருங்கடலின் ஒரு புடைப்பு; என் உணர்வுநிலை மாபெரும் பேரண்டப் பேருணர்வுநிலையின் ஒரு புடைப்பு. நான் எதைப் பற்றியும் அச்சப்படவில்லை. நான் பரம்பொருள்.”

எப்போதும் இறைவனுடைய அடிப்படை இருப்பின் உணர்வுநிலையைப் பிடித்துக் கொள்ளுங்கள். சமநிலையான மனத்துடன் கூறுங்கள்:

“நான் அச்சமற்றவன்; நான் இறைவனின் சாரத்தால் ஆக்கப்பட்டிருக்கிறேன். நான் பரம்பொருள் எனும் பெரும் நெருப்பின் ஒரு பொறி. நான் பேரண்ட ஜோதியின் ஓர் அணு. நான் தெய்வத் தந்தையினுடைய பரந்த பிரபஞ்ச உடலின் ஓர் உயிரணு. ‘நானும் என் தெய்வத்தந்தையும் ஒன்றே.’”

Melting of Lava represents merging of soul in God.உணர்வுநிலையில் அச்சமின்றி இருங்கள்:

“வாழ்விலும் சாவிலும் நான் இறைவனில் என்றும் வாழ்கிறேன்.”

நீங்கள் உத்திகளைப் பயிற்சி செய்யும் போது நாளுக்கு நாள் இந்த உணர்வுநிலை உங்கள் மீது தாக்கும். நீங்கள் தியானத்தில் ஆழ்ந்த தன்வயமாக்கப்பட்ட அமைதிக்குள் நுழையும்போது, நீங்கள் உடலின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைகிறீர்கள். பின்னர் உங்களை மரணம் என்ன செய்யும்? எங்கே அச்சம்? உங்களை அச்சமடைய வைக்க எதற்கும் சக்தியில்லை. அந்த நிலையைத்தான் நீங்கள் நாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஓம் மீது ஒருமுகப்படுங்கள், ஆழ்ந்த தியானத்தில் ஓம் உடன் கலந்து விடுங்கள்; பேரண்டப் பேரதிர்விலுள்ள இறைவனின் உள்ளுறை இயல்பின் அனுபூதியின் வாயிலாக நீங்கள் “தெய்வத்தந்தையிடம் வருவீர்கள்”—அளவிறுதியற்ற எல்லைகடந்த முழுமுதல்வனின் பேரின்பப் பேருணர்வுநிலை. நீங்கள் கூறுவீர்கள்:

“நானும் என் பேரின்ப இறைவனும் ஒன்றே. நான் இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறேன். மரணம், நோய், தீர்ப்புநாள், நெருப்புகள், எதனாலும் அந்தப் பேரின்பத்தை எடுத்துச் செல்ல முடியாது!”

நீங்களே பரம்பொருள்: உங்கள் ஆன்மீகப் பண்புகளை உறுதிப்படுத்துங்கள்

Lotus depicting non-attachment quality of Spirit.

உங்கள் வாழ்வின் எல்லா அழகிய மற்றும் ஆக்கப்பூர்வமான பண்புகளையும் நினைவு கூர்ந்து அவற்றின் மீது ஒருமுகப்படுங்கள், மற்றும் உங்கள் குறைபாடுகளை உறுதிப்படுத்தாதீர்கள்.

யோகியாகும் இலட்சியம் கொண்டவர் கோபத்தை உணரும் போது எப்போதும் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது, “அது நான் இல்லை!” அவருடைய சுய கட்டுப்பாடு காமத்தாலோ அல்லது பேராசையாலோ அடக்கியாளப்படும்போது, அவர் தனக்குத்தானே சொல்ல வேண்டியது, “அது நான் இல்லை!” வெறுப்பு அவருடைய மெய்யான இயல்பை ஒரு கோரமான உணர்ச்சியால் மங்கச் செய்ய முயற்சி செய்யும் போது, அவர் தன்னை அதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக் கொள்ள வேண்டும்: “அது நான் இல்லை!” அவர் தன் உணர்வுநிலையின் கதவுகளை அகத்தே வசிக்க நாடும் எல்லா விரும்பத்தகாத விருந்தாளிகளும் உள்ளே வராதபடி மூடக் கற்றுக் கொள்கிறார். மேலும் அந்தச் சாதகர் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிலையிலும் அவர் அகத்தே மன்னிப்பின் மற்றும் அன்பின் புனித ஆவியின் ஒரு தூண்டுதலை உணரும் போதெல்லாம், அவரால் பின் திடநம்பிக்கையுடன் உறுதியாகக் கூற முடியும், “அது நான் இல்லை! அதுவே என் மெய்யான இயல்பு.”

யோகத் தியானம் என்பது, எவற்றால் குறுகிய நோக்கம்-வாய்ந்த தன்முனைப்பு, குறைபாடுள்ள பரம்பரையான மனித உணர்வுநிலை, ஆன்ம உணர்வுநிலையால் இடம்பெயர வைக்கப்படுகிறதோ, அந்தத் திட்டவட்டமான ஆன்மீக மற்றும் உள-உடலியல் முறைகளின் மற்றும் விதிகளின் வாயிலாக ஒருவருடைய மெய்யான இயல்பின் விழிப்புணர்வைப் பேணி வளர்க்கும் மற்றும் நிலைப்படுத்தும் செயல்முறையாகும்.

அன்புடையீர், உங்களை ஒரு பாவி என்று அழைக்க ஒருவரையும் அனுமதிக்காதீர்கள். நீங்கள் இறைவனின் குமாரர்கள், ஏனெனில் அவன் உங்களைத் தன் பிரதிபிம்பத்தில் படைத்தான்…. உங்களிடமே கூறிக்கொள்ளுங்கள்:

“என் பாவங்கள் பெருங்கடலைப் போல ஆழமாக இருந்தாலும் சரி, நட்சத்திரங்களைப் போல உயரத்தில் இருந்தாலும் சரி, நான் இன்னும் தோற்கடிக்கப்படாதவன், ஏனெனில் நானே பரம்பொருள்.”

நீதான் பேரொளி, நீதான் பேரானந்தம்

ஒரு குகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இருள் ஆட்சி செய்யக்கூடும், ஆனால் ஒளியைக் கொண்டு வந்தால், இருள் ஒருபோதும் இல்லாதிருந்ததைப் போல மறைந்து விடுகிறது. அதேபோல, உங்கள் குறைபாடுகள் எதுவானாலும் சரி, நீங்கள் நற்பண்பு எனும் ஒளியைக் கொண்டு வரும் போது, அவை உங்களுடையவையாக இனிமேலும் இராது. தீமையின் பல பிறவிகளால் அழிக்க முடியாத அளவிற்கு ஆன்ம ஒளி அத்துணை பெரியது. ஆனால் சுயமாக உருவாக்கப்பட்ட தற்காலிகமான தீமையின் இருள் ஆன்மாவைத் துன்பத்திற்குள்ளாக்குகிறது, ஏனெனில் நீங்கள் அந்த இருளில் துன்பப்படுகிறீர்கள். உங்களால் அந்த இருளை, ஆழ்ந்த தியானத்தில், உங்கள் உணர்வுநிலையை எல்லாம்-வெளிப்படுத்தும் தெய்வீக ஒளியால் நிரப்பியவாறு, உங்கள் ஆன்மீகக் கண்ணைத் திறப்பதன் மூலம், விரட்டியடிக்க முடியும். வேறு எவராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

Light on earth represents soul is light.நீங்கள் பின்வருமாறு உணர்ந்தறிந்த உடனேயே நீங்களே உங்களுடைய சொந்த மீட்பர் ஆவீர்:

நானே பேரொளி. இருள் ஒருபோதும் எனக்குரியதாக இருக்கவில்லை; அதனால் என் ஆன்மாவின் ஒளியை ஒருபோதும் மூட முடியாது.”

தற்போதைய வரம்புகள் எனும் கொடுங்கனவை மறந்துவிடுங்கள். இரவில் உறங்கும் முன்னும் காலையில் விழிக்கும் போதும் சங்கல்பம் செய்யுங்கள்:

“நான் இயேசுவை மற்றும் குருமார்களைப் போல, இறைவனின் ஒரு குமாரன். நான் அறியாமை எனும் திரைக்குப் பின்னால் அவனிடமிருந்து மறைந்திருக்க மாட்டேன். நான் அவனுடைய எல்லா-முழுநிறைவான ஒளியை என் என்றும்-பெருகும் ஆன்மீக வெளிப்படைத் தன்மையின் வாயிலாக முழுமையாகப் பெறும்படியாக நான் ஞானத்தால் ஒளிர்வேன். அவனுடைய ஒளியை முழுமையாகப் பெற்றவாறு, நான் இறைவனின் ஒரு குமாரன் என்று அறிவேன்; அவனுடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டதால், நான் எப்போதுமே அப்படித்தான் இருந்தேன்.”

“நான் சதாகாலமும் இறைவனின் குழந்தையே. என் சக்தி என் சோதனைகளை விடப் பெரியது. நான் கடந்தகாலத்தில் செய்த தவறான விஷயங்களை என்னால் இப்போது நற்செயல்களாலும் தியானத்தாலும் அழிக்க முடியும். நான் அவற்றை அழிப்பேன். நான் சதாகாலமும் ஓர் அமரத்துவன்.”

உங்களால் உங்களுடைய உலக எண்ணங்களையும் ஆசைகளையும் அகற்ற முடியும் வரையில் ஒவ்வோர் இரவும் தியானம் செய்யுங்கள்…. உங்களுடைய அமைதியற்ற எண்ணங்களிலிருந்தும் உணர்வுகளிலிருந்தும் விலகி உங்கள் ஆன்மாவின் ஆலயத்தில் அமருங்கள்; அங்கே இறைவனின் பரந்த ஆனந்தம் விரிந்து இவ்வுலகைச் சூழ்கிறது, மற்றும் நீங்கள் அங்கே அதைத் தவிர வேறெதுவும் இல்லை என்று உணர்ந்தறிகிறீர்கள். பின்னர் நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்:

“நான் இறைவனின் நிலைபேறான ஒளியுடன், கிறிஸ்துவின் நிலைபேறான ஆனந்தத்துடன் ஒன்றாக இருக்கிறேன். படைப்பின் அலைகள் அனைத்தும் என்னுள் தடுமாறி வீழ்ந்து கொண்டிருக்கின்றன. நான் என் உடல்-அலையைப் பரம்பொருள் எனும் பெருங்கடலில் கரைத்துவிட்டேன். நானே பரம்பொருள் எனும் பெருங்கடல். இனிமேலும் நான் உடல் அல்ல. என் ஆவி கற்களில் உறங்கிக் கொண்டிருக்கிறது. நான் மலர்களில் கனவு கண்டு கொண்டிருக்கிறேன், மற்றும் நான் பறவைகளில் பாடுகிறேன். நான் மனிதனில் சிந்திக்கிறேன், மற்றும் மாமனிதனில் நானே என்று எனக்குத் தெரியும்.”

இந்த நிலையில் உங்களை நெருப்பால் அழிக்க முடியாது என்றும் பூமி, புல், வானம் ஆகிய அனைத்துமே உங்கள் நெருங்கிய உறவினர்கள் என்றும் நீங்கள் உணர்ந்தறிகிறீர்கள். அப்போது ஓர் ஆவியைப் போல, படைப்பின் ஆரவாரமான அலைகளைப் பற்றிய அச்சமின்றி, நீங்கள் பூமியில் நடக்கிறீர்கள்.

நீயே பேரன்பு

“என் தெய்வத்தந்தை அன்பே வடிவானவர், மற்றும் நான் அவருடைய பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டிருக்கிறேன். நான்தான் அன்புக் கோளம், அதில் எல்லாக் கோள்களும், எல்லா உயிர்களும், எல்லாப் படைப்பும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. நான் முழுப் பிரபஞ்சத்தையும் ஊடுறுவும் அன்பு.”

நீங்கள் அந்தத் தெய்வீக அன்பை அனுபவிக்கும் போது, நீங்கள் மலருக்கும் விலங்கிற்கும் இடையே, ஒரு மனிதருக்கும் மற்றொருவருக்கும் இடையே வேறுபாட்டைக் காண மாட்டீர்கள். நீங்கள் எல்லா இயற்கையுடனும் கூட்டுறவில் இருப்பீர்கள், மற்றும் நீங்கள் மனிதகுலம் அனைத்தையுமே நேசிப்பீர்கள். ஓரினத்தை மட்டுமே—இறைவனின் குழந்தைகள், அவனில் உங்களுடைய சகோதர சகோதரிகள்—கண்டவாறு, நீங்கள் உங்களுக்குக் கூறுவீர்கள்:

Children depicting human beings are children of God.“இறைவன் என் தெய்வத்தந்தை, நான் அவனுடைய மனிதர்களின் பரந்த குடும்பத்தின் பகுதி. நான் அவர்களை நேசிக்கிறேன், ஏனெனில் அவர்கள் அனைவரும் என்னுடையவர்கள். நான் என் சகோதரன் சூரியன், என் சகோதரி நிலா, என் தெய்வத்தந்தை படைத்து அவன் உயிர் ஓடும் எல்லா உயிரினங்கள் ஆகியவற்றையும் கூட நேசிக்கிறேன்.“

“நான் எல்லா இனங்களையும்—ஆலிவ், வெள்ளை, கருப்பு, மஞ்சள், மற்றும் சிவப்பு—என் நெஞ்சத்தில் உள்ள அவர்கள் வீட்டிற்கு, என் சகோதரர்களாக, பொதுவான பெற்றோருக்கு பூமியில் பிறந்தவர்களாக, ஆதாம் மற்றும் ஏவாளாக, மற்றும் இறைத் தந்தையின் பரம்பொருளுக்குப் பிறந்தவர்களாக வரவேற்கிறேன்.

 

“நான் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை என் நெருங்கிய உறவினர்களாக—வாழும் ஒவ்வொரு வடிவத்திலும் என் இரத்த நாளங்களின் ஊடாக அலையும் ஒரு பொதுவான உயிராக—அரவணைக்கிறேன். நான் எல்லா விலங்குகளையும் தாவரங்களையும் அன்பார்ந்த அணுக்களையும் சக்திகளையும் என் வாழ்வு எனும் ஆலயத்தில் தழுவுகிறேன்; ஏனெனில் நானே பேரன்பு, நானேதான் வாழ்வு என்பது.”

“நீதான் அது”

ஞானம், அல்லது உண்மையான அறிவு, அஹம் ப்ரம்ஹாஸ்மி (நானே ப்ரம்ஹன்),” அல்லது தத் த்வம் அசி (நீயே அது),” என்ற ஆன்மவின் அனுபூதியாகும். மேலும் ஒருவர் தியான அமர்வுநிலையில் நிமிர்ந்து அமர்ந்து பிராண ஓட்டத்தை கூடஸ்தனுக்குச் (புருவமத்திக்கு) செலுத்தும் போது, அதுவே உண்மையானதபசு, ஆன்மீக ஒழுக்கம் அல்லது அகத்தேயுள்ள தெய்வீகச் சக்தியைத் தன்வயப்படுத்தும் பயிற்சி.

நீங்கள் உடலோ அல்லது மனமோ இல்லை, ஆனாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்று முன்னெப்போதையும் விட அறிந்தவாறு, இவ்வுலகின் உணர்வுநிலைக்கு அப்பால் செல்லும் போது—அந்தத் தெய்வீக உணர்வுநிலையே நீங்கள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் வேரூன்றியிருப்பது எதுவோ, அதுதான் நீங்கள்.

பரம்பொருளிடமிருந்து உங்கள் ஆன்மாவைப் பிரிக்கும் வரம்புகளின் சட்டகங்களைத் தகர்த்தெறியுங்கள்.

“நான் பெருங்கடலா? அது மிகச் சிறிது,
நீலவான அலகுகளின் மீது ஒரு கனவுப் பனித்துளி.
நான் வானமா? அது மிகச் சிறிது,
சாசுவத நெஞ்சகத்தில் ஒரு ஏரி.
நான் சாசுவதமா? அது மிகச் சிறிது,
ஒரு பெயரில் அடைபட்டது.
பெயரில்லாப் பரந்த இடத்தில் நான் வாழ விழைகிறேன்,
கனவுகள், பெயர்கள், கருத்தியல்கள் எனும் வரம்புகளுக்கு அப்பால்.
நான் இருக்கிறேன், எப்போதும் போல—
என்றும்-இருக்கும் கடந்தகாலத்தில்
என்றும்-இருக்கும் எதிர்காலத்தில்
என்றும்-இருக்கும் நிகழ்காலத்தில்.”

Galaxy depicting vastness of the kingdom of God.

மேலும் ஆய்வு செய்வீர்:

இதைப் பகிர