இந்தியாவின் துயர வெள்ளம் குறித்து ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் செய்தி

அன்புக்குரியவர்களே,

ஜூலை 22, 2013

குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நம் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆழ்ந்த இரக்கமும் அன்பான எண்ணங்களும் “இமாலய சுனாமி” என்று அழைக்கப்படும் பெருந்துயர் நிகழ்ந்ததிலிருந்து நம் அன்புக்குரிய இந்தியத் தாயின் மீதும் அவளுடைய குழந்தைகளின் மீதும் கவிந்து பரவியுள்ளன. இந்தப் பேரழிவின் அளவை வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது, ஆனால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் எங்கள் இதயங்கள் வேதனையடைகின்றன.

தமது உடல்களிலிருந்து திடீரெனப் பறிக்கப்பட்ட இந்தியத் தாயின் அன்பான குழந்தைகளுக்காக, அவர்கள் இப்போது பரம்பொருளில் மிகுந்த அமைதியுடன் இருக்கிறார்கள் என்பதை அறிவதில் மட்டுமே நாங்கள் ஆறுதல் அடைகிறோம். இறைவனின் அவதாரங்கள், மகான்கள் மற்றும் பக்தர்களால் பல ஆண்டுகளாகப் புனிதப்படுத்தப்பட்ட அந்தப் புனித சுற்றுப்புறங்களில்,  சமாதி  தியானத்தில் அவனுடனான அவர்களது தெய்வீகக் கூட்டுறவின் அதிர்வுகள் ஆழ்ந்த பக்தியுடனும் விசுவாசத்துடனும் இறைவனிடம் அவர்களின் எண்ணங்களை மீண்டும் மீண்டும் திருப்பும் யாத்திரை, யின் ஆசீர்வாதங்களுக்காக அவர்கள் வந்திருக்கின்றனர் என்பதை குடியிருப்பவர்களுக்கும் புனிதப் பயணமாக அங்கே செல்வோர் அனைவருக்கும் தொடர்ந்து நினைவூட்டுகின்றன. இந்த நிகழ்வால் பூமிக்குரிய வாழ்க்கை திடீரென முடியப் பெற்றவர்கள், அந்தப் பக்திப்பூர்வ அதிர்வில் மரண இருளில் இருந்து வெளிச்சம் மற்றும் அமைதி நிலத்திற்குள் தாம் செல்வதை எளிதாக்கிய தமது உணர்வுநிலையின் கதவுகளை ஏற்கனவே திறந்துவிட்டிருந்தனர். பேரண்ட காலத்தின் வெறும் கணநேரங்களில், மாயையின் ஒரு கொடுங்கனவிலிருந்து அவர்கள் அனைத்துப் புரிதலையும் தாண்டிய சாந்தத்தின், ஓர் இரக்கமுள்ள அமைதியிலும் அன்பிலும் அவர்களை அரவணைக்கும் பரம்பொருளின், விழிப்புணர்வுக்குள் எழுப்பப்பட்டனர்.

ஆனால் எங்கள் ஆழ்ந்த பிரார்த்தனைகள், இப்போது அன்புக்குரியவர்களின் மற்றும் அவர்களது வீடுகளின் மற்றும் வாழ்வாதாரங்களின் இழப்பின் வலியை எதிர்த்துச் சமாளித்துக் கொண்டிருக்கும் தப்பிப் பிழைத்தோருக்குத் தொடர்ச்சியாகச் செல்கின்றன. இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள நலம் விரும்பிகள் அவர்களுக்கு ஆதரவளிக்கவும், குணமடையத் தேவையான அனைத்து வழிகளையும் வழங்கவும் பிரார்த்திக்கிறோம், இந்த முயற்சியில் குருதேவரின் சங்கமும் இணைந்திருக்கிறது. தெய்வீக விழிப்புணர்வால் அவர்களுக்கான கொடுங்கனவுகளும் அழிக்கப்படும் வண்ணம் அவர்களுக்கு மன உறுதி, வலிமை மற்றும் நம்பிக்கையை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டி நாங்கள் குறிப்பாக பிரார்த்தனை செய்கிறோம். இந்தக் குறைபாடுள்ள பொருள்சார் படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஒளிக்கும் இருளுக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போரின் துயரங்கள், நமது தெய்வீக குருதேவரின் இரக்கமுள்ள இதயத்தில் அடிக்கடி ஆழமான காயங்களை விட்டுச் சென்றன, மற்றும் அவருடைய உதவியும் ஆசீர்வாதங்களும் சர்வ-வியாபகத்திலிருந்து தொடர்கிறது என்பதை நான் அறிவேன். அவர் தெய்வத் தாயினுடைய குழந்தைகளின் வாழ்க்கைகளைச் சூழ்ந்து ஊடுறுவவும் தேவையான சமயங்களில் அவர்களுக்கு உதவவும் தேவையான அவளுடைய அன்பிற்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் அவளிடம் பரிந்து பேசியவாறு அவர் தனது வாழ்க்கையைக் கழித்தார். மாயையின் பிணைப்பிலிருந்து இன்னும் தங்களை விடுவித்துக் கொள்ளாத அனைவரையும் பாதிக்கும் அவர்களுடைய துன்பத்தின் யதார்த்தத்தை தன் சொந்த இருப்பில் அவர் அறிந்து உணர்ந்தார்.

அதே நேரத்தில் அவர் நமக்கு நினைவூட்டினார், “இந்த பூமி நம் வீடு அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நமது வீடு இறைவனில் உள்ளது.” நீங்கள் நிறைவுக்காகவும் அமைதிக்காகவும் இந்த உலகத்தை எதிர்நோக்கினால் உங்களுக்குப் புரியாத மிக அதிகமான பேரச்சங்களை உங்கள் வாழ்க்கை சந்திக்கும். மாறாக, துயரங்கள் அழியும் வாழ்க்கையின் உங்கள் கனவின் ஒரு பகுதியாக மாற வேண்டுமானால், நீங்கள் தியானத்தில் ஆழ்ந்த ஆன்மீக முயற்சியின் வாயிலாக உங்களால் “நொறுங்கும் உலகங்களின் சிதிலங்களின் மத்தியில் அசையாமல் நிற்க” முடியும் வண்ணம், இறைவனில் நங்கூரமிடுங்கள். இறைவன் நமக்கு நினைவூட்டுகிறார்: “மாறாதது எதுவோ, அதில் நங்கூரமிடுங்கள்.” “அதுவே” தன் குழந்தைகளுக்கு சிந்தித்தால் வரக்கூடிய தூரத்தைவிட அதிகமாக ஒருபோதும் இராத இறைவனின் தவறாத அன்பு, மற்றும் இறைவனின் சர்வ-வியாபகம். அவன் தனது அன்பு, பாதுகாப்பு, அவனது ஒருபோதும் தோல்வியடையாத தெய்வீகக் கவனிப்பின் மிகவும் இனிமையான கணநேரக் காட்சிகள் ஆகியவற்றால் நம்மை ஆசீர்வதிக்க என்றும் ஆவலுடன் இருக்கிறான்.

நமது தினசரி தியானங்களில், பல பிறவிகளாக நம்மைக் கவனித்துக் கொண்டிருந்த, மற்றும் மாயக் கனவிலிருந்து அவனுடைய அரவணைக்கும் மகா சந்நிதானத்தினுள் நாம் விழித்தெழுவதைக் காண ஏங்கும் மாபெரும் ஒருவனில் அவர்கள் அடைக்கலம், அமைதி, குணமாதல் ஆகியவற்றைக் காணும்படியாக, இந்தக் கொந்தளிப்பான உலகில் அவதிப்படும் அனைவரையும் தொடர்ந்து நினைவு கூருகிறோம்.

இறைவனின் மற்றும் குருதேவரின் அன்பிலும் இடைவிடாத அருளாசிகளிலும்.

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர