விண்ணுலகத்திலிருந்து வரும் ஒளி போல

img1_முக்தி_மாதா

எழுதியவர்: முக்தி மாதா

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பரமஹம்ஸ யோகானந்தரின் சீடரான, முக்தி மாதா (1922-2008) 1945ல் குருதேவரைச் சந்தித்த ஒரு ஸெல்ஃப்-ரியலைசேஷன் சன்னியாசச் சீடர் ஆவார். குறுந்தகட்டுப் பதிவிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் பகுதியில், பரமஹம்ஸருடன் தான் பெற்ற சில அனுபவங்களை அவர் விவரிக்கிறார்.
“அவர் பெருமளவில் பிரபஞ்சத்தைப் போன்றவர்: எல்லாம்-அறிந்தவர், எல்லாம்-உணர்ந்தவர். மேலும் அவரிடம் வந்த ஒவ்வொரு ஆன்மாவுக்குமான அவரது அன்பு: அற்புதமானது, அசாதாரணமானது, புனிதமானது, விண்ணுலகத்திலிருந்து வரும் ஒளி போன்றது.”

1945ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் நான் ஸெல்ஃப்-ரியலைசேஷன் போதனைகளுக்கும் குருதேவருக்கும் எதிர்பாராத விதமாக அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் என் வாழ்வில் ஏதோ ஒன்று வரப்போவதை உள்ளுணர்வாக அறிந்தேன் மற்றும் கூறினேன், “இறைவா, நீ இருக்கிறாய் என்றால், அதை எனக்கு நிரூபிக்குமாறு அறைகூவுல் விடுக்கிறேன்.” இது மிகவும் வலுவான கோரிக்கையாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு நண்பர் வந்து, “நாம் ஹாலிவுட்டுக்குச் செல்வோம்” என்று கூறினார்.

நாங்கள் ஒரு தேவாலயத்திற்கு—ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தேவாலயம்—செல்வோம் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. என் நண்பர் பெயரைச் சொன்னபோது, நான் சிந்தித்தேன், “சரி, இதன் பொருள் என்ன?” ஒருவேளை மதத்தைப் பற்றிய சில வகையான தத்துவார்த்த சிந்தனைகளை ஒரு தத்துவ போதகர் விவாதிப்பார் என்று நான் நினைத்தேன்.

ஆனால் குருதேவர் தோன்றியபோது அவரைப் பார்த்து நான் நினைத்தேன், “இவர் சாதாரணமானவர் அல்ல. இந்த மனிதர் இறைவனை அறிந்தவர்.” நான் அடிக்கடி நினைப்பதுண்டு, “நீங்கள் எவர் ஒருவருக்கும் சர்வ-ஞானத்தை எப்படி விளக்க முடியும்?” நம் ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு உணர்வையும், நாம் எங்கிருந்து வந்தோம், எங்கு செல்கிறோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். (நல்ல வேளை யாரோ ஒருவராவது அறிந்துள்ளார்!) ஆனால் அந்த ஹாலிவுட் கோவில் முதல் அறிமுகத்திற்குப் பிறகு, நான் கட்டிடத்தை விட்டு வெளியேறியபோது நான் உடலளவில் வெளியேறினேன் ஆனால் மற்றபடி இல்லை என்று எனக்குத் தெரிந்தது.

நான் வளர்ந்து வந்த போது, ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு ஜோடி பழுப்பு நிற கண்களை வரைவேன். அந்தக் கண்களில் நான் சாசுவதத்தின் ஓர் வெளிப்பாட்டை உருவாக்க முயற்சி செய்வேன். மேலும் அவை எனக்காக உயிரோடு வந்தது போலவே இருக்கும் அளவிற்கு என்னுடைய ஒருமுகப்பாடு சில சமயங்களில் அத்துணை கூர்மையாக இருக்கும்; அவை உண்மையானவை. பின்னர் நான் குருதேவரைப் பார்த்தபோது, அத்தகைய கண்களைப் பார்த்தேன்.

“அவர் பெருமளவில் பிரபஞ்சத்தைப் போன்றவர்: எல்லாம்-அறிந்தவர், எல்லாம்-உணர்ந்தவர். மேலும் அவரிடம் வந்த ஒவ்வொரு ஆன்மாவுக்குமான அவரது அன்பு: அற்புதமானது, அசாதாரணமானது, புனிதமானது, விண்ணுலகத்திலிருந்து வரும் ஒளி போன்றது.”

இதைப் பகிர