இணையவழி தமிழ் சாதனா சங்கம்

சனிக்கிழமை, ஜூலை 10

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 11, 2021

நிகழ்வு பற்றி

தமிழில் ஜூலை 10 முதல் ஜூலை 11 வரை ஒய்.எஸ்.எஸ். சnniயாசிகளால் இரண்டு நாள் ஆன்லைன் சாதனாசங்கம் நடத்தப்பட்டது. இது பக்தர்களுக்கு ஆன்மீக புத்துணர்ச்சிக்கு மட்டுமல்லாமல், குருதேவரின் போதனைகள் மற்றும் தியான உத்திகளைப் புரிந்துகொள்வதற்கும் பயிற்சியளிக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

ஒய்.எஸ்.எஸ் தியான உத்திகள் பற்றிய மறுஆய்வு வகுப்புகள் ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன; ஆனால் குழு தியானங்கள் மற்றும் சத்சங்கங்கள் அனைவருக்கும் திறந்திருந்தன. ஒவ்வொரு தியானமும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொகளிலும் நடத்தப்பட்டது, அதே நேரத்தில் வகுப்புகள் மற்றும் சத்சங்கங்கள் தமிழில் மட்டுமே இருந்தன.

நிகழ்வுகளின் அட்டவணை

காலை 6:10 மணி முதல் 9:30 மணி வரை (IST)

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் , வரவேற்பு செய்தி, அதனைத் தொடர்ந்து நீண்ட நேர தியானம் மற்றும் கீர்த்தனை.

ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும்.

தியானம் ஒரு பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியுடன் தொடர்ந்து ஒன்றாக சக்தியூட்டும் பயிற்சிகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒய்.எஸ்.எஸ் சன்னியாசி தலைமையில் தியானம் நடைபெற்றது. (குறிப்பு : சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதற்கான வழிமுறை வீடியோவில் வழங்கப்படவில்லை.   தயவுசெய்து அவற்றை ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்)

தியான அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனை மற்றும் வரவேற்பு குறிப்புகளுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகமூட்டும் வாசிப்பு, பிரபஞ்ச கீதங்கள் மற்றும் மெளன தியானத்துடன். மெளன தியானத்தின் காலங்கள் வேறுபட்டன, ஆனால் வழக்கமாக சுமார் 45 நிமிடங்களாக இருந்தன. பரமஹம்ச யோகநந்தரின் குணமளிக்கும் உத்திகள் மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனை பயிற்சியுடன் தியானம் நிறைவடைந்தது. தொடக்க பிரார்த்தனை, நிறைவு பிரார்த்தனை, குணமளிக்கும் உத்திகள் ஆகியவை தமிழில் இருந்தன, அதே நேரத்தில் வாசிப்பும் பிரபஞ்ச கீதங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருந்தன.

இந்த நிகழ்ச்சியின்  பதிவுகள் அல்லது ஸ்கிரீன் ஷாட்கள் எடுத்தல் கூடாது என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 வரை (IST)

ஹாங்-ஸா உத்தி மறுஆய்வு

பண்டைய மற்றும் சக்திவாய்ந்த ஹாங்-ஸா உத்தி மனதின் மறைந்திருக்கும் ஒருமுகப்படுத்துதல் ஆற்றல்களை வளர்க்க உதவுகிறது. வழக்கமான பயிற்சியின் மூலம் ஒருவர் சிந்தனையையும் சக்தியையும் வெளிப்புற கவனச்சிதறல்களிலிருந்து விலக்க கற்றுக்கொள்கிறார், இதனால் அடைய வேண்டிய எந்தவொரு குறிக்கோள் மீதும் அல்லது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை மீதும் அவற்றை கவனம் செலுத்த செய்யலாம். அல்லது வெற்றிகரமான பயிற்சியின் விளைவாக, கிடைக்கும் ஒருமுகப்பாட்டு கவனத்தை, அகத்தில் இறை உணர்வு நிலை உணர்ந்துகொள்வதை நோக்கி செலுத்தலாம்

ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்கள் இந்த தியான உத்திப் பற்றிய மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்ளவும், பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி கிரியா யோகா பாதையின் அத்தியாவசிய உத்திகள் ஒன்றில் படிப்படியான வழிமுறைகளைப் பெறவும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வகுப்பு ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது. நீங்கள் ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவராக ஆவதற்கு ஆர்வமாக இருந்தால், இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ் அல்லது மாலத்தீவில் வசிப்பவராக இருந்தால்,
இங்கே கிளிக் செய்க. பிற நாடுகளில் வசிப்பவர்கள், தயவுசெய்து இங்கே கிளிக் செய்க.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

மதியம் 1:30 மணி முதல் 2:15 மணி வரை (IST)

ஒரு யோகியின் சுயசரிதம் – இணைந்து படித்தல் மற்றும் தியானம்

பரமஹம்ச யோகநந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் -ன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒரு சிறப்பு குழு ஆய்வு மற்றும் தியானம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் திறந்திருக்கும் இந்த அமர்வு ஒரு தொடக்க பிரார்த்தனை மற்றும் கீதங்களுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து மெளன தியானத்தின் காலங்கள் ஒரு யோகியின் சுயசரிதத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தேர்வுகளுடன், ஒரு இறுதி பிரார்த்தனையுடன் முடிவடைந்தன. இந்த சிறப்பு அமர்வு பக்தர்கள் குருதேவரின் வார்த்தைகளைக் கேட்கவும் அமைதியாக சிந்திக்கவும் அனுமதித்தது.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

பிற்பகல் 3:15 மணி முதல் மாலை 4:00 மணி வரை (IST)

கீர்த்தனை அமர்வு

நமது முந்தைய ஏகாந்த வாசங்கள் ஒன்றில் ஒய்.எஸ்.எஸ். சன்னியாசி தலைமையில் பக்தர்கள் பக்தி கீதங்கள் அமர்வில் கலந்து கொண்டனர்.

கொள்ளுங்கள் பரமஹம்ஸ யோகானந்தர் கூறுகிறார்: “ சங்கீர்த்தனம் அல்லது கோஷ்டி கானம்  என்பது ஒரு பலன் தரும் யோக முறை அல்லது ஆன்மீக பயிற்சியாகும். ஏனெனில் இதற்குத் தீவிரமான ஒருமுகப்படுத்தும் தன்மையும், அடிப்படையான எண்ணத்திலும் ஒலியிலும் ஒன்றிவிடும் தன்மையும் அவசியமாகின்றன. மனிதன் என்பவன் படைப்பாற்றலுடைய சொல்லின் வெளிப்பாடேயாதலால் நாதம் அல்லது ஒலி அவனிடத்தில் சக்தி மிகுந்த உடனடி விளைவை உண்டாக்குகிறது. கீழ்த்திசை மற்றும் மேற்கத்திய நாடுகளின் மகத்தான ஆன்மீக சங்கீதம் மனிதனை ஏன் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்றால் அது ஒரு தற்காலிகமான அதிர்வலை எழுச்சியை அவனுடைய முதுகுத்தண்டின் சூட்சும மையங்கள் ஒன்றில் ஏற்படுத்துகிறது. அந்த ஆனந்தமயமான வினாடிகளில் அவனுக்குத் தன் ஆதி தெய்வீகத்தன்மையின் மங்கலான ஞாபகம் வருகிறது.”

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை (IST)

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். பதிவு செய்யப்பட்ட வீடியோவைப் பின்தொடர்வதன் மூலம் ஒன்றாக நிகழ்த்தப்பட்ட சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் நடைமுறையுடன் நாங்கள் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து ஒய்.எஸ்.எஸ் சன்னியாசி தலைமையில் தியானம் நடைபெற்றது. (குறிப்பு : சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதற்கான வழிமுறை வீடியோவில் வழங்கப்படவில்லை.   தயவுசெய்து அவற்றை ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்)

தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகமளிக்கும் வாசிப்பு, கீதமிசைக்கும் காலங்கள் மற்றும் மௌன தியானம். மெளன தியானத்தின் காலங்கள் வேறுபட்டன, ஆனால் வழக்கமாக சுமார் 45 நிமிடங்களாக இருந்தன. பரமஹம்ச யோகநந்தரின் குணமளிக்கும் உத்திகள் மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனை பயிற்சியுடன் தியானம் நிறைவடைந்தது. தொடக்க பிரார்த்தனை, நிறைவு பிரார்த்தனை, குணமளிக்கும் உத்திகள் ஆகியவை தமிழில் இருந்தன, அதே நேரத்தில் வாசிப்பும் பிரபஞ்ச கீதங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருந்தன.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

இரவு 7:15மணி முதல் 8:15 மணி வரை (IST)

அகத்தூண்டும் உரை

ஒரு ஒய்.எஸ்.எஸ் சன்னியாசியால் ஒரு ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. “முயற்சி திருவினையாக்கும்” என்பதே சொற்பொழிவின் கருப்பொருளாக இருந்தது.

சொற்பொழிவு அனைவருக்குமானதாக இருந்தது.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

காலை 6:10 மணி முதல் 9:30 மணி வரை (IST)

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கீர்த்தனையுடன் கூடிய நீண்ட நேர தியானம்

ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். பதிவு செய்யப்பட்ட வீடியோவுடன் சேர்ந்து சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் பயிற்சியுடன் நாங்கள் தொடங்கினோம், அதைத் தொடர்ந்து ஒரு ஒய்.எஸ்.எஸ் சன்னியாசி தலைமையிலான தியானம் நடைபெற்றது. (குறிப்பு : சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதற்கான வழிமுறை வீடியோவில் வழங்கப்படவில்லை.   தயவுசெய்து அவற்றை ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்)

தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்கியது.  அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகமளிக்கும் வாசிப்பு, கீதமிசைக்கும் காலங்கள் மற்றும் மௌன தியானம். மெளன தியானத்தின் காலங்கள் வேறுபட்டன, ஆனால் வழக்கமாக சுமார் 45 நிமிடங்களாக இருந்தன. பரமஹம்ச யோகநந்தரின் குணமளிக்கும் உத்திகள் மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனை பயிற்சியுடன் தியானம் நிறைவடைந்தது. தொடக்கப் பிரார்த்தனை, நிறைவுப் பிரார்த்தனை மற்றும் குணமளிக்கும் உத்திகள் ஆங்கிலத்தில் இருந்தன, அதேசமயம் வாசிப்பு மற்றும் கீதமிசைத்தல் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருந்தன.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

காலை 11:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை (IST)

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மறுஆய்வு

உயர் உணர்வு நிலைகளை அடைவதற்கு தியானத்தின் போது ஆற்றலை அகமுகமாக மிக எளிதாக அனுப்பும் பொருட்டு உடல் இறுக்கத்தை நீக்க மற்றும் , உடலை சுத்திகரிக்கவும் வலுப்படுத்தவும், உடலையும் மனதையும் விருப்பப்படி பேரண்ட சக்தியின் மூலம்  புத்துயிர் பெற கற்றுக்கொள்ளுங்கள்,

ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்கள் இந்த தியான உத்திப் பற்றிய மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்ளவும், பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி கிரியா யோகா பாதையின் அத்தியாவசிய உத்திகள்  ஒன்றில் படிப்படியான வழிமுறைகளைப் பெறவும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வகுப்பு ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது. நீங்கள் ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவராக ஆவதற்கு ஆர்வமாக இருந்தால், இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ் அல்லது மாலத்தீவில் வசிப்பவராக இருந்தால், இங்கே கிளிக் செய்க. பிற நாடுகளில் வசிப்பவர்கள், தயவுசெய்து இங்கே கிளிக் செய்க.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை (IST)

ஓம் உத்தி மறுஆய்வு

ஹாங்-ஸா உத்தி  மூலம், உடலை தளர்த்தி வைக்கவும், மனதை குவிக்கவும்,  மாணவர் கற்றுக்கொண்டவுடன், இந்த மேம்பட்ட ஓம் தியான உத்தியானது, விழிப்புணர்வை, உடல் மற்றும் மனதின் வரம்புகளுக்கு அப்பால் ஒருவரின் எல்லையற்ற ஆற்றலின் ஆனந்தமான உணர்தலுக்கு விரிவுபடுத்துகிறது.

ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்கள் இந்த தியான உத்திப் பற்றிய மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்ளவும், பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி கிரியா யோகா பாதையின் அத்தியாவசிய உத்திகள்  ஒன்றில் படிப்படியான வழிமுறைகளைப் பெறவும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வகுப்பு ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவர்களுக்கு மட்டுமே இருந்தது. நீங்கள் ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாட மாணவராக ஆவதற்கு ஆர்வமாக இருந்தால், இந்தியா, நேபாளம், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ் அல்லது மாலத்தீவில் வசிப்பவராக இருந்தால், இங்கே கிளிக் செய்க. பிற நாடுகளில் வசிப்பவர்கள், தயவுசெய்து இங்கே கிளிக் செய்க.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

மாலை 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை (IST)

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், தியானம் மற்றும் நிறைவு ஆன்மீக சொற்பொழிவு

ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். பதிவு செய்யப்பட்ட வீடியோவுடன் சேர்ந்து சக்தியூட்டும் உடற்பயிற்சிகளின் பயிற்சியுடன் நாங்கள் தொடங்கினோம், அதைத் தொடர்ந்து ஒரு ஒய்.எஸ்.எஸ் சன்னியாசி தலைமையிலான தியானம் நடைபெற்றது. (குறிப்பு : சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதற்கான வழிமுறை வீடியோவில் வழங்கப்படவில்லை.   தயவுசெய்து அவற்றை ஒய்.எஸ்.எஸ் / எஸ்.ஆர்.எஃப் பாடங்களிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்)

தியான அமர்வு ஒரு தொடக்கப் பிரார்த்தனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகமளிக்கும் வாசிப்பு, கீதமிசைக்கும் காலங்கள் மற்றும் மௌன தியானம். மௌன  தியானத்தின் காலங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக சுமார் 45 நிமிடங்கள் இருக்கும். தியானம் ஒரு இறுதி சத்சங்கம் (சுமார் 45 நிமிடங்கள்), மற்றும் பரமஹம்ச யோகானந்தரின் குணமளிக்கும் உத்திகள் மற்றும் ஒரு இறுதி பிரார்த்தனைப் பயிற்சியுடன் நிறைவடைந்தது. ஆரம்ப பிரார்த்தனை, நிறைவு பிரார்த்தனை, சத்சங்கம், மற்றும் குணமளிக்கும் உத்திகள் ஆகியவை தமிழில் இருந்தன; ஆனால், வாசிப்பும் கீதங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருந்தன.

இந்த நிகழ்வை பதிவு செய்வதும் ஸ்கிரீன் ஷாட்கள் எடுப்பதும் கூடாது.

தியான அறை

உலகெங்கிலும் உள்ள பங்கேற்பாளர்களுடன் மௌன தியானத்தில் இணையவும்

தியான அறை நேரம்

தியான அறை திறந்திருந்தது (நேரம் ஐ.எஸ்.டி.யில் உள்ளது):

சனிக்கிழமை, ஜுலை 10
காலை 9.30 மணி முதல் 11.15 மணி வரை
மதியம் 12.30 மணி முதல் 1.15 மணி வரை
மதியம் 2.15 மணி முதல் 3.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 4.45 மணி வரை

ஞாயிறு, ஜுலை 11 
காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை
மதியம் 12.30 மணி முதல் 2.45 மணி வரை
மாலை 4.00 மணிமுதல் 4.45 மணி வரை

ஆன்லைன் ஒய்.எஸ்.எஸ் தியான உத்தி வகுப்பில் எவ்வாறு பங்கேற்பது

யோகதா சத்சங்க பாட மாணவராகுங்கள்

ஆன்லைன் சாதனா சங்கம் அனைவருக்கும் திறந்திருக்கும். இருப்பினும், ஒய்.எஸ்.எஸ் உத்திகள் பற்றிய ஆன்லைன் வகுப்புகள் – சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், ஹாங்-ஸா ஒருமுகப்பாட்டு உத்தி, மற்றும் ஓம் தியான உத்தி – ஆகியவை யோகதா சத்சங்க பாட மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். (ஸெல்ஃப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாட மாணவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.)

நீங்கள் ஒரு மாணவராக இல்லாவிட்டால், இப்போது ஒய்.எஸ்.எஸ் பாடங்களுக்கு விண்ணப்பிக்க உங்களை அழைக்கிறோம், இதன்மூலம் பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த கிரியா யோக விஞ்ஞானத்தின் ஒருங்கிணைந்த பாகங்களான இந்த சக்திவாய்ந்த உத்திகள் குறித்த வகுப்புகளில் நீங்கள் பங்கேற்கலாம்.

ஆன்லைன் கணினி உதவிக்கு

அழைக்கவும்

ஒய்.எஸ்.எஸ் பக்தர்கள்எங்களை (0651) 6655 555 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது கேள்விகளை இங்கே சமர்ப்பிக்கலாம்.

எஸ்.ஆர்.எஃப் பக்தர்கள் ஆன்லைன் கணினி உதவிக்காக எஸ்.ஆர்.எஃப் ஆன்லைன் தியான மையத்தில் (Online Meditation Centre) கேள்விகளை சமர்ப்பிக்கலாம் அல்லது +1 (760) 417-6080 ஐ அழைக்கலாம். (தயவுசெய்து கவனிக்கவும்: நீண்ட தொலைவிற்கான கட்டணங்கள் பொருந்தும்.)

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர