பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து ஜென்மாஷ்டமி செய்தி — 2023

26 ஆகஸ்ட், 2023

உனது மனத்தை என்னில் நிறுத்து, நீ எனது பக்தனாக இரு; முடிவற்ற பிரார்த்தனையுடன் என் முன் வணங்கு. இவ்விதமாக என்னைக் குறியாகக் கொண்டு என்னுடன் உன்னை, ஒன்றிணைத்து நீ என்னையே அடைவாய்.

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: த பகவத் கீதா

அன்பர்களே,

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தினமாம் ஜன்மாஷ்டமியின் மகிழ்ச்சியான தருணத்தில், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களுடன் இணையும் அருட்பேறு நமக்கு வாய்த்துள்ளது. அவர்களின் இதயங்கள் அவனது அனைத்தையும் உள்ளடக்கிய அன்பையும், அமைதி அருளும் ஞானத்தையும் நோக்கி புதிதாய் திரும்புகின்றன. இறைவன் அருளிய, யோக விஞ்ஞானத்தின் மூலம் தோல்வி உணர்வு மற்றும் மாயைக்கு எதிரான ஆன்மாவின் வெற்றி என்ற அவனது அழியா வாக்குறுதியானது, நம் வாழ்க்கையை தெய்வீகமாக்க, நம் ஒவ்வொருவருக்கும் புதிய மனோதிடத்தையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்!

அருள் மிக்க பரம்பொருள், பகவத் கீதையில், கிருஷ்ணன் மூலம் சீடன் அர்ஜுனனிடமும் – மற்றும் யுகந்தோறும் இருக்கப் பெறும் நேர்மையான பக்தர்களிடமும் – இந்த எளிய ஆனால் ஆழந்த மீட்பு அறிவுரையை வழங்குகிறது: “பாதுகாப்பளிக்கும் எனது இருப்பில் உங்கள் உணர்வுநிலையை எப்போதும் வைத்திருங்கள்.” தியானம் வாயிலாக நமது இதயத்தையும் மனத்தையும் மீண்டும் மீண்டும் அந்த சாசுவத புகலிடத்திற்கு கொண்டு வருவதன் மூலம், மாயையின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் சக்தியையும், மனித வரம்புகளின் அடிப்படையில் நம்மைக் காணும் நம் போக்கையும் குறைக்கிறோம். மிக முக்கியமாக, உள்ளார்ந்த அந்த பக்தி ஆலயத்தில், நம் வாழ்க்கை குருக்ஷேத்திரப் போரில் நமது நேசத்துக்குரிய தோழராகவும், வழிகாட்டியாகவும், கொடையாளியாகவும் இருக்கும் ஒரு தெய்வீக நண்பருடன் நாம் ஒரு திருப்திகர உறவை ஏற்படுத்துகிறோம்.

யோகப் பெருமானின் நிபந்தனையற்ற அன்பும் அருளாசியும் மேன்மை மிக்க ஆனால் தற்காலிகமாக குழப்பமடைந்த அர்ஜுனனை எவ்வாறு உயர்த்தி விழிப்படையச் செய்தது என்பதை கீதை விவரிக்கிறது. ஜென்மாஷ்டமியை நாம் கொண்டாடும் இவ்வேளையில், உங்கள் வாழ்க்கையும் அவ்வாறே மாற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். கீதையின் ஆன்மாவை மீட்டெடுக்கும் உண்மைகளை விளக்கும் நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஒளியூட்டும் வெளிப்பாட்டையும், இந்த நவீன யுகத்தில் இறைவனின் உலகளாவிய குடும்பத்திற்கு, நமது குருதேவர் மகிழ்ச்சியுடன் வழங்கியுள்ள ராஜயோகத்தின் புனித உத்திகளையும் நீங்கள் உள்வாங்கிக் கொண்டால் அது நிச்சயம் சாத்தியமாகும்.

நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள வாய்ப்பு எவ்வளவு மகத்தானது! அதை மறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கிருஷ்ணரின், உன்னத சாதனை புரிந்த சீடனாகிய அர்ஜுனனைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் ஒளி-இருள் சமகால போர்க்களத்தில் நாம் ஆன்ம விடுதலை பெறும் அளவுக்கு தளராத மனத் துணிவுடனும் உள்ளுணர்வு பூர்வ இணக்கத்துடன் செயல்படக் கற்றுக்கொள்ள முடியும்.

இப்புவி வழங்கும் எதையும் விட இறைவனின் அன்பு மிகவும் உண்மையானது, நீடித்தது – மேலும் எப்போதும் பெறக் கிடைக்கும் அவனது உதவியை, மாறாத தோழமையை மற்றும் எல்லையற்ற அக்கறை கொண்ட அவனது இருப்பை நாம் எல்லா நேரங்களிலும் அழைக்க முடியும் என்ற தியானத்தின் மூலம் அறியும் உணர்தலை, ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார தின கொண்டாட்டமானது, நம் ஒவ்வொருவரிடமும் புதுப்பிக்கட்டும்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! ஜெய் குரு!

ஸ்வாமி சிதானந்த கிரி

இதைப் பகிர